ஜெபத்தைக் கேட்கிற தேவன்
2024 செப்டம்பர் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,22) “கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்” (வசனம் 22). கர்த்தர் எலியாவின் விசுவாசமுள்ள விண்ணப்பத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது. மரித்துப்போன ஒருவன் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டதாக இதுவரையிலும் வேதத்தில் ஒரு குறிப்பையும் நாம் வாசிக்கிறதில்லை. இதுபற்றிய முன்னுதாரணம் ஏதுமற்ற நிலையிலும், அந்த விதவையின் அங்கலாய்ப்பைக் கண்டு, “கர்த்தாவே இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும்” என…