September

கர்த்தரில் மறைந்திருத்தல்

2024 செப்டம்பர் 12 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,10) “உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (வசனம் 10). ஒபதியாவும் எலியாவும் சந்தித்துக்கொண்டது எவ்வாறு தேவ செயலாக இருந்ததோ அவ்வாறே மூன்றரை ஆண்டு காலமாக ஆகாபும் எலியாவும் சந்தித்துக்கொள்ளாமல் இருந்ததும் தேவ செயலாகும். ஆகாப் மனிதரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று சொல்லும் போது, எலியாவைக் கண்டுபிடிக்கும்படி அவன் எடுத்த…

September

பயமின்றி கர்த்தருக்காக உழைத்தல்

2024 செப்டம்பர் 11 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,8 முதல் 9 வரை) “அவன் (எலியா), நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்” (வசனம் 8). ஒபதியா கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவனாக இருந்தாலும், மனிதரைக் குறித்த பயமும் அவனது உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்று அவன் சொன்னபோது, “ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க…

September

வெளிப்படையாக இருப்போம்

2024 செப்டம்பர் 10 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,7) “ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு” (வசனம் 7). நாம் அன்றாடம் பல்வேறு பாதைகளில் பயணிக்கிறோம், பல்வேறு நபர்களைச் சந்திக்கிறோம். அவர்களில் எவர் ஒருவரையும் நாம் ஏதேச்சையாகச் சந்திக்கவில்லை. ஆயினும் எலியாவைப் போல தேவசித்தத்தின் பாதையில் பயணிப்போமாயின், சந்திக்கவேண்டிய நபரைச் சரியான நேரத்திலும் சரியான…

September

தேவதிட்டத்தின் பாதையில் பயணிப்போம்

2024 செப்டம்பர் 9 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,5 முதல் 6 வரை) “ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்” (வசனம் 5). ஆகாப் ராஜாவின் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள்! கர்த்தருடைய தீர்க்கதரிசியின் வாக்கின்படி மழை பெய்யவில்லை. தேசத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு தலைவனாகவும், மக்களின்  அதிபதியாகவும்…

September

அடையாளத்தை மறைக்கவேண்டாம்

2024 செப்டம்பர் 8 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,3 முதல் 4 வரை) “ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்” (வசனம் 3). ஒபதியா கர்த்தருக்குப் பயந்து நடக்கிற ஒரு நல்ல மனிதன். ஆயினும் தனது விசுவாசத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் துணியாத ஒரு பலவீனமான மனிதன். கர்த்தருக்குப் பயந்து நடக்கிற ஒரு மனிதனால், எவ்வாறு தீர்க்கரிசிகளைக் கொலை செய்கிறவனும், விக்கிரக வழிபாடுகளில் மூழ்கிக் கிடக்கிறவனுமாகிய ஆகாப் ராஜாவிடம்…

September

குறைவுகளில் கர்த்தரைத் தேடுதல்

2024 செப்டம்பர் 7 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,1 முதல் 2 வரை) “அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது” (வசனம் 2). “நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன்” (வசனம் 1) என்று கர்த்தர் எலியாவிடம் சொல்லி அனுப்பினார். “என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும்” (17,1) என்று எலியா ஆகாபிடம் சொல்லிவிட்டு வந்தான். இப்பொழுது நான் தேசத்தின்மேல் நான்…

September

நம்மோடு பேசுகிற கடவுள்

2024 செப்டம்பர் 6 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,1) “கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி …” (வசனம் 1). எலியா கர்த்தரிடத்தில் விண்ணப்பத்தின் வாயிலாகப் பேசுகிற மனிதன் மட்டுமின்றி, கர்த்தரும் அவரோடு பேசினார். “கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி” என்று நான்கு முறை இந்த முதலாம் ராஜாக்கள் நூலில் வாசிக்கிறோம் (17,2 மற்றும் 8; 18,1; 19,9). தேவன் நமது ஜெபங்களுக்கு தமது செவியைச் சாய்த்துக் கேட்கிறவராயிருக்கிறது போல, நாமும் அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்தால், அவர்…

September

மாறாத கர்த்தரின் கிருபை

2024 செப்டம்பர் 5 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,1) “அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி” (வசனம் 1). “அநேகநாள் சென்று” என்பது கர்த்தர் எலியாவின் மூலமாக அந்த விதவைப் பெண்ணின் இறந்த பிள்ளையை உயிரோடு எழுப்பி, அநேகநாள் சென்று” என்று பொருள்படும். இத்தனை நாட்களாக அதாவது ஏறத்தாழ ஆயிரம் நாட்களாக கர்த்தர் எலியாவை அந்தக் குடும்பத்தில் வைத்துப் பராமரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.…

September

நற்சான்று பெறுதல்

2024 செப்டம்பர் 4 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,24) “அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்” (வசனம் 24). இறந்துபோன தன் மகனைத் திரும்பப் பெற்ற சாறிபாத் விதவை எலியாவை பற்றிய இரண்டு உண்மைகளைப் வெளிப்படுத்தினாள். ஒன்று, “நீர் தேவனுடைய மனிதன்” என்பது. அடுத்தது, “உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மையானது” என்பது.…

September

விசுவாசத்தால் சுதந்தரித்தல்

2024 செப்டம்பர் 3 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 17,23) “அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்” (வசனம் 23). “என் குமாரனைச் சாகப்பண்ணவா என்னிடத்தில் வந்தீர்” என்னும் கேள்விக்கு விடையாக எலியா அவளுடைய குமாரனை உயிரோடு அவளிடத்தில் திரும்பக் கொண்டு வந்து கொடுத்தான்.  மரணம் உயிர்த்தெழுதலின் வாயிலாக ஈடு செய்யப்படுகிறது. நாம் எல்லாரும் பாவத்தின் நிமித்தம் மரித்தவர்களாகவும்,…