நடுநிலை வேண்டாம்
2024 செப்டம்பர் 22 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,21) “ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு (எலியாவுக்கு) ஒன்றும் சொல்லவில்லை” (வசனம் 21). இஸ்ரவேல் மக்கள் எலியாவின் வார்த்தைக்கு எவ்விதப் பதிலையும் கூறாதது மிகவும் வருத்தமானது. தங்களது பாவத்தை ஒப்புக்கொண்டு, எலியாவின் பக்கம் நின்றால் அது ஆகாபை புண்படுத்தும். அதேவேளையில் எலியாவின் நியாயமான கண்டித்துணர்த்தும் வார்த்தைகளையும் அவர்களால் எளிதாகப் புறக்கணித்துவிடவும் முடியவில்லை. அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்கள் குழப்பம் அடைந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட்டனர். துரதிஷ்டவசமாக…