October

தேவனுடைய ஒழுங்கைக் கடைப்பிடித்தல்

2024 அக்டோபர் 2 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,32 முதல் 33 வரை) “அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி” (வசனம் 32). எலியா வெட்டப்படாத கற்களைக் கொண்டு “கர்த்தருடைய நாமத்திற்கென்று” ஒரு பலிபீடத்தைக் கட்டினான். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்”…

October

தெய்வீக மாதிரியைப் பின்பற்றுதல்

2024 அக்டோபர் 1 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,31) “உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து” (வசனம் 30). எலியா எடுத்த பன்னிரண்டு கற்கள், யூதா மற்றும் இஸ்ரவேல் நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்துவது போல், அதனுடைய ஆவிக்குரிய பொருளில் அவை திருச்சபையின் ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றன எனலாம். கிறிஸ்துவின் சரீரம் ஒன்றுதான். ஆனால் திருச்சபைகள் இன்றைக்கு பல்வேறு பெயர்களில்…

September

விசுவாசப் பார்வை

2024 செப்டம்பர் 30 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,31) “உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப் பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து” (வசனம் 30). எலியா பன்னிரண்டு கற்களை எடுத்தது சூழ நின்றிருந்தோரின் புருவத்தை உயர்த்தியிருக்கும். ஏனெனில் இப்பொழுது கர்மேல் மலையில் கூடியிருந்தது பத்துக் கோத்திரங்கள் அடங்கிய இஸ்ரவேல் தேசத்தார் மட்டுமே. எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தானைக் கடந்தபின்,…

September

இழந்த உறவைச் சரிசெய்தல்

2024 செப்டம்பர் 29 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,30) “தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் (எலியா) செப்பனிட்டு” (வசனம் 30). பலிபீடமும் இஸ்ரவேல் மக்களும் பிரிக்க முடியாதவையாகும். பலிபீடங்கள் தனிப்பட்ட ஒப்புவித்தலையும், தேவனோடுள்ள ஐக்கியத்தையும், அவரோடு விடுபட்டுப்போன உறவைச் சரி செய்வதற்கும், அவரைத் தொழுதுகொள்வதற்கும் அடையாளங்களாக இருக்கின்றன. ஆகவேதான் முற்பிதாக்களின் காலத்தில் அவர்கள் சென்றவிடமெங்கும் பலிபீடம் கட்டி, கர்த்தருக்குப் பலி செலுத்தி அவரைத் தொழுது கொண்டு, கர்த்தரோடுள்ள தங்களது தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டார்கள். நியாயாதிபதிகளின் காலத்தில் ஆசரிப்புக்கூடாரம்…

September

அணுகுமுறையில் மாற்றம் தேவை

2024 செப்டம்பர் 28 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,30) “அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்” (வசனம் 30). பாகால் தீர்க்கதரிசிகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டாயிற்று. இனிமேலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு எலியா தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டான். தேவனை அறியாத நமது உறவினர், அண்டைய விட்டார் போன்றோரின் இரட்சிப்புக்காக பல ஆண்டுகளாக நாம் ஜெபித்துக் கொண்டிருக்கலாம். ஒருநாள் அவர்களது நம்பிக்கை அவர்களைக்…

September

அறிவற்ற வைராக்கியம்

2024 செப்டம்பர் 27 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,28 முதல் 29 வரை) “அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்” (வசனம் 28). இப்பொழுது அவர்கள் தங்கள் சடங்குகளை இன்னும் அதிகமாக்கினார்கள். அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்கள் மதத்திற்கு முற்றிலும் நேர்மையானவர்களாகவும், அர்ப்பணிப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் தங்கள்  சொந்த இரத்தத்தைச்…

September

கேலிக்கு ஆளான மக்கள்

2024 செப்டம்பர் 26 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,27) “மத்தியான வேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி(னான்)” (வசனம் 27). பாகால் தீர்க்கதரிசிகளின் மதியீனமான செயல்களைப் பார்த்து எலியா பரியாசம்பண்ணினான். கேலிச் சித்திரங்கள் நகைப்புக்குரியதாகக் காணப்பட்டாலும் ஒரு கருத்தை வலிமையாக எடுத்துரைப்பவை ஆகும். அவ்வாறே எலியாவின் பரியாசம் கடவுளர்களைப் பற்றிய இன்றியமையாத உண்மையை வெளிப்படுத்துகிறது எனலாம். பாகாலின் தீர்க்கதரிசிகளின் செயல்களை எண்ணற்ற இஸ்ரவேல் மக்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எலியாவின் இத்தகைய கேலிச் சொற்கள் மக்களின் மனக்கண்களைத்…

September

பதிலளிக்காத கடவுள்கள்

2024 செப்டம்பர் 25 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,25 முதல் 26 வரை) “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்” (வசனம் 26). பாகாலின் தீர்க்கதரிசிகள், “பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும்” என்று காலை முதல் நண்பகல் வரை ஜெபித்தார்கள். அவர்கள் அர்ப்பணமுள்ள ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார்கள். தொடர்ந்து இடைவிடாமல் நீண்ட நேரம் மிகுந்த ஆர்வத்துடன் பிரார்த்தனை செய்தார்கள். ஆயினும் அவர்கள் பதிலளிக்கக்கூடிய மெய்யான கடவுளிடம் ஜெபிக்காததால்…

September

சத்தியத்துக்காக நிற்போம்

2024 செப்டம்பர் 24 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,23 முதல் 24 வரை) “அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்” (வசனம் 24). இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; அதில் ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு பலி செலுத்தட்டும் என்று எலியா பாகால் தீர்க்கதரிசிகளுக்கு முன்னுரிமை அளித்தான். கடவுளை அளந்துபார்ப்பதற்கான தெய்வீக அளவுபோல் மனிதர்களாகிய நம்மிடத்தில் கிடையாது. ஆனால் எந்த அளவுகோலைக் கொண்டு அளந்தாலும் அது சமனான முறையில் இருசாராருக்கும் பொதுவாக இருக்க…

September

சத்தியத்துக்காக நிற்போம்

2024 செப்டம்பர் 23 (வேத பகுதி: 1 ராஜாக்கள் 18,22) “அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்” (வசனம் 22). கர்மேல் மலையில் எலியா தனியொருவனாய் நானூற்றம்பது பாகாலின் தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படுகிறவர்களை எதிர்கொண்டான். அவர்களுக்கு ஆள்பலம், அரசன் அரசியின் உதவி ஆகியன எல்லாம் இருந்தாலும், நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள் (நீதிமொழிகள் 28,1) என்ற சாலொமோனின் வார்த்தையின்படி எலியா தனியாக நின்றான். எலியாவின் இந்தச் செயல், “தேவன்…