தேவனின் தலையீடு
(வேதபகுதி: ஆதியாகமம் 11:1-9) “அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்” (வச. 6). மனிதர்கள் கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றார்கள். வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தைக் கட்டத் தொடங்கினார்கள். ஆனால் கர்த்தர் இறங்கி, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி, மனிதர்களுடைய எண்ணத்தைத் தடுத்தார். மக்கள் சிதறிபோனார்கள், பல்வேறு மொழிகள் உண்டாயின.…