முதல் கொலை
(வேதபகுதி: ஆதியாகமம் 4:8-16) “கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான்அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்” (வச. 9). காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தான். மனித வரலாற்றில் நடந்த முதல் கொலை. மெய்யான விசுவாச மார்க்கத்துக்கும், பொய்யான கிரியை மதத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல். அன்று முதல் இன்றுவரை தங்கள் விசவாசத்துக்காக உயிரைக் கொடுத்தோர் எண்ணற்றோர். “ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே…