Genesis

தேவசாயலைக் கொண்ட மனிதன்

(வேதபகுதி: ஆதியாகமம் 1:26-28) “தேவன் தம்முடைய சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாகவே அவர்களைச் சிருஷ்டித்தார்” (வச. 27). மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவன். மனித குலமே சிருஷ்டிப்பின் மகுடமாகத் திகழ்கிறது. இப்பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினமும் பெற்றிராததும், எந்த உயிரினத்துக்கும் கிடைக்காததுமாகிய சிலாக்கியம் இது. தேவன் தம்முடைய பண்புகளில் சிலவற்றை இந்த மனித குலத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே மனிதன் சுயமாகச் சிந்திக்கவும், ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கும்படியான ஞானத்தையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறான். ஆகவே…

Genesis

ஆளுகை செய்யும் வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 1:20-25) “பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்” (வச. 20). இந்த வேதபகுதி மனிதனுக்காகவும் அவனுடைய ஆளுகைக்காகவும் தேவனால் பூமி எவ்வாறு ஆயத்தம் செய்யப்படுகிறது என்பதை மோசே விவரிக்கிறார் (வச. 20-25). கடல்கள் மீன்களால் நிரம்பின, வானம் பறவைகளால் நிரம்பியது, காடுகள் விலங்குகளால் நிரம்பின. இவை எண்ணற்ற வேறுபாடுகளுள்ள, ஆச்சரியமூட்டும் கலவையான உயிரினங்கள். இனிமேல் படைக்கப்படப் போகிற மனிதனுக்காக தேவனின் மகத்தான…

Genesis

ஒளிதரும் வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 1:14-19) “தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்” (வச. 11). நம்முடைய கண்களை வானத்துக்கு நேராக உயர்த்தும்போது நாம் என்ன காண்கிறோம். இரண்டு பெரிய சுடர்களாகிய சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள். இவை எதற்காக உண்டாக்கப்பட்டன. அடையாளங்களுக்காகவும் (வச. 14), காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் (வச. 14), பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காகவும் (வச. 17), பகலையும் இரவையும் ஆளவும்…

Genesis

கனிதரும் வாழ்க்கை  

(வேதபகுதி: ஆதியாகமம் 1:9-13) “பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று” (வச. 11). படைப்பின் மூன்றாம் நாள். ஞானமுள்ள படைப்பாளர் ஒரு தோட்டக்காரராக அடுத்த வேலையைச் செய்கிறார். பூமியின் மேற்பரப்பில் இருந்த தண்ணீரெல்லாம், ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படுவும் கட்டளையிட்டார். பின்னர் கனி தரும் மரங்களையும், புல், பூண்டுகளையும் முளைக்கும்படி கட்டளையிட்டார். கனிதரும் மரங்கள், செடிகள், புற்கள், பூவினங்கள் இவை யாவற்றையும் காணும்போது…

Genesis

வானத்துக்குரியவர்கள்

(வேத பகுதி: ஆதியாகமம் 1,6 முதல் 8 வரை) “தேவன் ஆகாய விரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்” (வசனம் 7). தேவன் தம்முடைய படைப்பின் இரண்டாம் நாளில் பூமியைச் சுற்றியிருந்த தண்ணீரை இரண்டாகப் பிரித்தார். இரண்டுக்கும் இடையில் ஆகாயவிரிவை உண்டாக்கினார். இதன் வாயிலாக நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? தேவனுடைய வல்லமையுள்ள வார்த்தைகள் இப்பிரபஞ்சத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்றன. அவருடைய படைப்பின் மீது அவர் தார்மீக உரிமையைக்…

Genesis

வெளிச்சம் உண்டாகக்கடவது

(வேத பகுதி: ஆதியாகமம் 1,2 முதல் 5 வரை) “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று” (வசனம் 2). சாயங்காலமும் விடியற் காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று (வசனம் 5). நாம் ஒரு நாளை நள்ளிரவில் தொடங்குகிறோம். ஆனால் வேதம் ஒரு நாளை மாலையில் தொடங்குகிறது. முதலில் மாலை பின்பு இரவு, அதன் பின்னர் காலை, பின்னர் பகல் பொழுது. அதாவது சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி, ஒளியின் காலத்துடன் முடிவடைகிறது. இது தேவன் செயல்படும் விதத்தின்…

Genesis

ஆதியிலே தேவன்

(வேத பகுதி: ஆதியாகமம் 1,1) “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (வசனம் 1). நாம் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையாக வாழ்க்கையைத் தொடங்கினோம். நாம் வளர வளர, வானம், கடல், காற்று, பறவைகள், பூக்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும் கவனிக்க ஆரம்பித்தோம். உலகத்தைப் பற்றி நாம் அறிந்தவுடன் தவிர்க்க முடியாமல் அதைப் பற்றி சில கேள்விகளும் எழுந்தன. அத்தகைய கேள்விகளுக்கு வேதத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் சுருக்கமாகப் பதிலளிக்கிறது.…