எது தவறு ?

  • நீ செய்தது பெரிய தவறு இல்லைதான் ஆனால் சிறிய தவறுக்கு பின்னர் வருவதுதான் பெரிய தவறு.
  • நீ சொன்னது பொய் அல்ல என்பது உண்மைதான் ஆனால் அந்த உண்மையை சொன்னதற்கு நீ சொன்ன காரணம் பொய்யானது.
  • நீ மற்றவரை விழவைக்கவில்லை என்பது உண்மையே ஆனால் மற்றவரை விழாமல் நிற்க வைக்கும் வாய்ப்பை நீ பயன்படுத்தவில்லை.
  • நீ செய்த தவற்றை தவறு என்று ஒத்துக்கொண்டாய் ஆனால் அதற்காக சற்றும் நீ வருந்தாதது பெரிய தவறு.
  • பிறருடைய தவறுகளை நீ நன்றாகவே சுட்டிக்காட்டுகிறாய் ஆனால் உன் தவறு மட்டும் உன்னை உறுத்தவில்லையே.
  • நீ செய்த நல்லவைகளை பிறர் நினைக்கவில்லை என்று     வருந்தாதே. நீ செய்த தீமைகளைக்கூட பிறர் நினைக்கவில்லையே.
  • நீ சொன்ன உண்மையை பிறர் நம்பாமல் போனதற்கு நீ பலமுறை சொன்ன பொய்களும் காரணமாயிருக்கும். நீ காட்டின நல்வழியில் பிறர் நடக்கவில்லை என வருந்தாதே அந்த வழியில் நீ நடந்தால் அதை எண்ணி மகிழ்ச்சியாயிரு.
  • மற்றவர்கள் உன்னை மதிக்கவில்லை என்பதுதானே உன் வருத்தம் பின்னர் ஏன் நீயும் அதே தவறைச் செய்கின்றாய்.
  • உன்னுடைய தவறை நீ நியாயப்படுத்தும்போதெல்லாம் மீண்டும் அந்த தவறை செய்ய ஆர்வமாயிருக்கிறாய் என்று பொருள்.
  • நீ செய்த தவறை தவறு என்று உணர மறுக்கின்றாய் ஏனென்றால் நீ ஒரு தவறான மனிதன்.

 

(ஜீவநீரோடை புத்தகத்திலிருந்து…)

கிறிஸ்துவின் நியாயாசனம்

Ro.14:10

இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

நாவு

யாக்கோபு 3:1-12

நீதி 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.  உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.

நீதி 19:9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான். பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.

நாவு – யாக்.1:19 கேட்கிறதற்கு தீவிரம் – பேசுகிறதற்கு பொறுமை – கோபிக்கிறதற்கு தாமதம்

(1) கடிவாளம் – குதிரை (யாக்.3:2-3)

(2) சுக்கான் – கப்பல் (யாக்.3:4)

(3) சிறிய நெருப்பு – காடு (யாக்.3:5-6)

(4) சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர் வாழும் ஜெந்துக்கள் (யாக்.3:7)

(5) விஷம் (யாக்.3:8)

(யாக்.3:9-12)

யாக்கோபு 3:13-17

1பேது 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.

சங் 141:3 கர்த்தாவே, என் வாய்க்குக்காவல் வையும். என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

ஆவிக்குரிய புதிதாக்கல்

நெகேமியா 3ம் அதிகாரம்

– நமது அனுதின வாழ்வில் புதிதாக்கல் முக்கியமானது.

– ஓவ்வொரு பொருளும் சீர்படுத்தப்படுகிறது. (வீடு, தெரு, பாலம்,…)

 

நெகே.3:1 – ஆட்டு வாசல்

– ஆடுகள் பலியிடப்படுவதற்காக இந்த வாசலினால் கொண்டுவரப்படுகின்றன.

– ஓவ்வொரு கிறிஸ்தவனும் முதலில் இந்த வாசலைக் கடந்து செல்லவேண்டும்.

 

நெகே.3:3 – மீன் வாசல்

– அசெனாவின் குமாரர் கட்டினார்கள்

– கலிலேய மீனவர்கள் மீன்களை இவ்வாசல் வழியாகக் கொண்டு வந்தார்கள்.

– நாம் ஒவ்வொருவரும் மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாயிருக்கிறோம்.

 

நெகே.3:6 – பழைய வாசல்

– பழையவைகளை நோக்கிப் பார்க்கவேண்டும்.

– மேகம் போன்ற திரளான சாட்சிகள்

 

நெகே.3:13 – பள்ளத்தாக்கின் வாசல்

– பழைய வாசலுக்கும் பள்ளத்தாக்கின் வாசலுக்கும் தூரம் அதிகம்

– இருளின் பள்ளத்தாக்கு…

– சோதனைகள் ஏற்படுகின்றன.

 

நெகே.3:13 – குப்பைமேட்டு வாசல்

– விசுவாசம் வரள வாழ்க்கையில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படவேண்டும்.

 

நெகே.3:15 – ஊரணி வாசல் (ஊற்று)

– பள்ளத்தக்கை கடந்து, குப்பைகளை துப்பரவு செய்யும்போது ஊற்றுக்கள் புறப்படும்.

– பரிசுத்த ஆவியானவரின் வல்லமை தேவபலத்தில் வாழச்செய்கிறது

 

நெகேமி.3:26 – தண்ணீர் வாசல்

– வசனத்தினால் நம்மைக் கழுவவேண்டும்

 

நெகே.3:28 – குதிரை வாசல்

– வருகைக்கு ஆயத்தமாகுதல்

– முடிவை நோக்கி ஓடுதல்

 

நெகே.3:29 – கிழக்கு வாசல்

– வருகையை எதிர்நோக்குதல்

– வாசல் பூட்டப்பட்டிருக்கிறது

 

நெகே.3:31 – மிப்காத் வாசல்

– கிரியைக்குப் பலன்

Words of Life TAMIL (தமிழ்)

10 கன்னிகைகள்

Mat 25:1 – 13

அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்  கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.  அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள்.  புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை.  புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.  மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.  நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.  அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.  புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.  புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.  அப்படியே அவர்கள் வாங்கிப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்.  ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.  பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.  அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.