கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்

கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும்

 

யுரோப் தனது பதினைந்தாம் நூற்றாண்டில் ஒரு மிக பெரிய வரலாற்று நாயகனை உண்டாக்க போகிறது என்பதை தாமதமாக உணர்ந்தது.அது ப்ரோடஸ்தண்டை உருவாக்கிய மார்ட்டின்லூதர் அவர்கள் தான்.கர்த்தர் இவர் மூலமாக விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற சத்தியத்தை திரும்பவும் நிலைநாட்டினார்.நான் இந்த வரலாற்று படத்தை சில தினங்களக்கு முன் பார்த்தேன் அதில் ஒரு நிகழ்வில் மார்டின் லூதரின் குரு அவர்கள் பல மரித்த பரிசுத்தவான்களின் உடமைகளையும் அவர்களின் சிலைகளையும் கண்பித்து இவைகளின் மூலம் ஒருவர் தேவபக்தியை பெருக்கலாம் என்று சொல்லுவார்.அதற்க்கு மார்டின்லூதர் இல்லை என்று மறுப்பார்.குரு கோபம் அடைந்தவராய் ,இவைகளின் மூலம் (சிலைகள் )ஒருவன் தேவபக்தியை அடைய முடியாவிட்டால் வேறு எதினால் அடையமுடியும் என்று கேட்பார்.அதற்கு மார்டின்லுதர் கிறிஸ்துவே என்று ஆணித்தரமாக வாதிடுவார்.

என்ன இவன் கிறித்தவமும் மற்ற மார்க்கங்களும் என்று தலைப்பை வைத்து மார்டின் லூதர் பற்றி ஏதோ எழுதுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால் ஆண்டவர், மார்டின் மூலமாக திரும்பவும் நிலைநாட்டிய சத்தியம்(விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்) தான் இன்று கிருத்தவம் மற்ற மார்கங்களிருந்து வேறுபடுகிறது என்று சொல்ல விரும்புகிறேன்.

மற்ற மார்க்கங்களிருந்து கிருத்துவம் எப்படி வேறுபடுகின்றது?
*கிருபையும் கிரியையும்
பிற மார்க்கங்களில் கிரியையினால் மோட்சம் அடையலாம் என்று அந்த மார்க்கங்களின் உபதேசியார் சொல்லுவதை நாம் பல முறை கேட்டிருக்கலாம்.அதாவது நாம் தானம் தர்மம் செய்வதினாலும் நாம் உடலை பலவித கட்டுபாட்டில் ஈடு படுத்துவதினாலும் மோட்சம் அல்லது பரலோகம் செல்லலாம் என்கின்றனர்.ஆனால் அடிப்படையான ஒரு உண்மையை அறியாமல் உள்ளனர்.அது எதுவெனில் நல்ல மரம் நல்ல கனியை தானாக தருகின்றது விஷமரம் விஷ கனிகளை தருகின்றது.நாம் நல்ல மரமென்றால்
நல்ல கனிகள் மாத்திரம் வர வேண்டுமே தவிர நல்லது அல்லாதவைகள் எப்படி வருகிறது என்ற கேள்வி எழும்புகிறது.ஆதாம் விழுகையினாலே தான் நாம் எல்லாரும் இந்த பாவ சரீரத்தினால் அவதிபடுகிறோம் என்று பைபிள் காண்பிக்கிறது.அதினால் தான் பவுலும் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதுகிறார்

நன்மை செய்யும் விருப்பம் எனக்கு இருந்தாலும் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை என்றும் பாவ சரீரத்தில் உள்ள பாவ பிரமாணம் என்னை அடிமைபடுத்துகின்றது என்றும் சொல்கிறார்.

மற்ற மார்க்கங்களில் இந்த பாவ சுபாவத்தை பற்றி அதிகம் பேச மாட்டார்கள் நம்மால் நல்லது செய்ய முடியம் அதினால் நாம் பரலோகம் செல்லலாம் என்று போதிப்பர்.ஆனால் அந்த நல்லதிலும் ஒரு சுய நலம் உண்டு என்றும்  கறைகள் ஏராளம்  என்பதை பார்க்க அவர்களால் முடிவதில்லை.ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியானவன் அவர்கள் மனக்கண்களை குருடாக்கி உள்ளான்.
இந்த பாவ சுபாவத்தை குறித்து பைபிளின் சில வசனங்களை பார்ப்போம்.
யோபு 14 அதிகாரத்தில் 4 வசனம்
அசுத்தமானதிளிருந்து சுத்தமானது பிறப்பிக்கிறவன் உண்டோ?
யோபு 15 அதிகாரம் 14 வசனம்
மனுஷனானவன் பரிசுத்தமாக இருப்பதும் பெண்ணிடம் பிறந்தவன் நீதிமானா இருப்பதும் எப்படி?

இன்னும் பல வசனங்கள் பைபிளில் உண்டு.இப்படி நாம் வசனங்கள் மூலமாகவும் நாம் சுய அனுபவத்திலும் மனுஷன் பிறப்பில் இருந்தே கறை  உள்ளவன் என்பதை அறிகிறோம்.இவைகள் மற்ற மார்க்கங்களில் சொல்லபடவில்லை.

இன்றும் பல கிருத்துவர்கள் கூட நம்முடைய பாவ சுபாவத்தை மறந்து பைபிளை படிப்பதினாலும் சபைக்கு தவறாமல் செல்லுவதினாலும் தசமபாகம் கொடுக்கிரதினாலும் தானம் தர்மம் பன்னுவதினாலும் பரலோகம் அடையலாம் என்று எண்ணுகின்றனர் மாறாக இந்த நற்கிரியைகல்லாம் செய்வதற்கு ஆதி முதல் தேவன் நம்மை உண்டாக்கினார் என்றும் இந்த நற்கிரியைகளில் நடப்பதற்கு அவைகள் முன்னதாகவே ஆயத்தம் செய்யப்பட்டது என்றும் இவைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்(கிருபையினால் ) வருகின்ற பலன்கள் என்பதை அறியாமல் உள்ளனர்.

Note: Dear brothers and sisters,the above post is my conviction based upon word of God.But if you have any contradiction with my writtings please let me know so that i can correct my understanding.

sarav

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

உச்சநீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு

 குஷ்பூவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிபதி ஒருவர் திருமணத்திற்கு முன்

 உடலுறவு கொள்வதில் தவறில்லை என்பது போல பேசி உள்ளார்.இன்று மிகவும்

 பிரலமான பேச்சு என்னவென்றால் காலத்திற்கு ஏற்ப நாம் மாறனும் என்பதே.

 அதற்காக காலம் தொட்டே மாறாத நெறிகள் எல்லாம் மாறனுமா? மனசாட்சி

 என்ற ஒன்று இல்லையா ? அதனிடும் போய் கேளுங்கள் அது உங்களுக்கு

 அறிவிக்கும் திருமனத்திற்கு முன் உடலுறவு தவறு என்று. இன்று அவரவர்

 தங்களுக்கு என்று ஒரு நீதியை ஏன் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே

 செய்வதினாலே இப்போது இந்த குழப்பம். ஒரு சில காரியங்களை தேவன்

 மனிதனுடைய அறியாமையின் நிமித்தம் மன்னிப்பார்.ஆனால்இந்த வகையான

 பாவங்கள் கே மற்றும் லெஸ்பியன் போன்ற பாவங்களுக்கு இட்டு செல்வதால்

 தேவ கோபாக்கினை இந்த பூமியின் மேல் சீக்கிரமாக கொண்டு வரும்.

அழைப்பை அலட்சியப்படுத்தாதிருங்கள்

ignore.jpg

கர்த்தர் தமது பணிக்கு உங்களை

அழைக்கும்போது மந்திரிப் பதவியே

உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும்

அதற்கு அடிபணிந்து உங்களது

மாண்புமிகு மதிப்பைக் குறைத்துக்கொள்ளாதேயுங்கள்.

தேவதூதர்களும் செய்யக்
காத்திருந்த சுவிசேஷப் பணி
உங்களைத் தேடி வரும்போது
அதை ஒரு பெரும் சிலாக்கியமாக
நினைத்து உங்கள் வாழ்க்கையை
தேவனுக்கு அர்ப்பணித்து
முன்னேறுங்கள். அவருடைய பயிற்சி
உலகத்தைக் கலக்கும் மனிதர்களாக
பதினொருவரை மாற்றியது. இன்னும்
அத்தகைய சீடர்களுக்காய் உலகம்
காத்து கிடக்கிறது.