காட்டிக்கொடுக்கப்பட்டார்

மத்தேயு 26:47-56 

பிடிக்கப்பட்டார்: தன்னைப் பிடிக்க வந்தோரை நோக்கி உறுதியுடனும் வெற்றியுடனும் இயேசு செல்கிறார்.  மனிதன் எது செய்தாலும்.  கடவுள் தாம் அனைத்திலும் பொறுமையுடன் சகிப்பவர். யூதாசின் முத்தம் காட்டிக்கொடுக்கும் அளவு கொடியது.  பிசாசின் பிடியிலகப்பட்ட மனிதனின் கொடுமைக்கு எல்லையில்லை.  இவ்வேளை, நாம் நமது இதயத்தைக் கடவுள் ஆராயும்படி திறந்து, துரோகமனைத்தையும் ஒழித்து, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, புதிதான ஜீவனுடையோராக நடப்போமாக. கடவுளின் கரம் கட்டுப்படுத்தி ஆளுகிறது என்று அறிந்த இயேசு கலங்கவில்லை.  ஒரு நொடியில் ஆயிரமாயிரம் தூதரை அழைக்கும் அதிகாரம் பெற்ற தேவமைந்தன் நமக்காகக் கட்டப்பட்டார் (ஏசா. 53:12).  அக்கிரமக்காரராகிய நமக்காக அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார். பதினொரு சீடரைப்போன்று நானும் ஓடிவிடுகிறேனா?

ஆதாம் பாவம் செய்தபின் !

(1) சர்ப்பம் சபிக்கப்பட்டது (ஆதி.3:14)

(2) ஸ்திரீயின் வித்து (மீட்பின்) வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது (ஆதி.3:15)

(3) ஸ்திரீயின் பரிதாபம் (ஆதி.3:16)

(4) பூமிக்குச் சாபம் (ஆதி.3:17)

(5) ஜீவியத்தின் நஷ்டம் (ஆதி.3:17)

(6) ஏதேன் ஜீவியம் இழந்தார்கள் (ஆதி.3:23)

(7) ஆத்துமாவிலும் சரீரத்திலும் மரணம் (ஆதி.2:17, 5:5,  ரோ.5:12-21)