இரு வழிகள்
(வேதபகுதி: ஆதியாகமம் 4:17-26) “சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்” (வச. 26). படைப்பின் தொடக்கம் முதலே நாம் தெரிந்தெடுப்பதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்பதை வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பெரும்பான்மையோர் செல்லக்கூடிய விசாலமான வழி. இவ்வழி பலருக்கும் வசதியாகவும், நல்லதாகவும் தோன்றுகிறது. தேவனின் துணையில்லாமல் வாழும் இவ்வாழ்க்கையின் வழி அழிவுக்கு நேராகக் நம்மைக் கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமில்லை. மற்றொன்று ஒரு மனிதன்…