மனிதரைப் பராமரிக்கும் தேவன்
(வேதபகுதி: ஆதியாகமம் 1:29-31) “இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது” (வச. 29). தேவனுடைய ஆறு நாள் படைப்புச் செயலின் முழுச் சாராம்சம் என்னவென்றால், தேவன் தமது படைப்புகள் அனைத்தையும் அற்புதமான முறையில் பூரணமாக்கியிருக்கிறார். அவற்றை மனிதனுக்காக வழங்கியிருக்கிறார். அவரால் உண்டாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும், அவரால் படைக்கப்பட்ட இந்த இயற்கை உலகமும் அவர் தம்முடைய சாயலாக உருவாக்கிய மனுக்குலத்தின்மேல் கொண்டிருக்கிற கரிசனைக்கும்…