விருத்தசேதனம் பண்ணப்பட்ட வாழ்க்கை
(வேதபகுதி: ஆதியாகமம் 17:9-27) “… என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண் பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்” (வச. 10). விருத்தசேதனம் என்பது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளத்தை உடலில் உண்டாக்குவது. இது கர்த்தரின் கர்த்தத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கான அடையாளம். இதை ஆபிரகாமும் அவனுடைய குடிவழியினரும் என்றென்றைக்கும் செய்துகொள்ள வேண்டும்.நாங்கள் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக இது இருக்கிறது. பிற தேசங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி கர்த்தர் அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்த விரும்பினார். பிற நாடுகள்…