தேவனிடமிருந்து திரும்பப் பெறுதல்
(வேதபகுதி: ஆதியாகமம் 22:15-24) “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.” (வச. 18). ஆபிரகாம் தன் மகனை தேவன் சொன்னபடி பலியிடச் சென்றான். மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகத் திரும்பவும் உயிரோடு பெற்றுக்கொண்டான். என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து உன் நேசகுமாரனைப் பலியிட்டால் இன்ன இன்ன ஆசீர்வாதங்களைத் தருவேன் என்று தொடக்கத்திலேயே தேவன் அறிவிக்கவில்லை. அவன் அதிகாலையில் எழுந்து பலிக்குத் தேவையானவற்றை ஆயத்தம்…