June

யூன் 10

யூன் 10 தேவனிடத்தில்அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்(ரோ.8:28). பவுலடியார் எவ்வளவுநிச்சயமாக இவ்வுறுதிப்பாட்டைக் கூறுகிறார். அவர் சில காரியங்கள் என்றோ, பல காரியங்கள்என்றோ, மகிழ்ச்சியான காரியங்கள் என்றோ, கூறாமல், சகலமும் என்று கூறுகிறார். மிகவும்நுண்ணிய காரியத்திலிருந்து மிகவும் தகுதி வாய்ந்த காரியமும், அன்றாட எளியகாரியங்களிலிருந்து, நெருக்கடியில் ஆண்டவருடைய கிருபை தேவைப்படும் காரியங்களும்நன்மைக்கேதுவாக நடக்கிறது. சகல காரியங்களும் நடக்கின்றன. அவை நடந்துகொண்டிருக்கின்றன.சகல காரியங்களும் நடந்தனவென்றால், நடக்கப்போகின்றன வென்றல்ல, இந்த நேரத்திலேயேநடந்துகொண்டிருக்கின்றன. உமது நியாயங்கள் மகாஆழமாகவும் இருக்கிறது என்று கூறி,…

June

யூன் 9

யூன் 9 (அவருடைய) உண்மையை உணவாக்கிக்கொள் (சங்.37:3) ஒரு நாள் ஆப்பிரிக்க இனத்தைச்சேர்ந்த ஓர் அம்மாயாரைச் சந்தித்தேன். அன்றாடகக் கடின உழைப்பினால் சம்பாதித்துவாழ்க்கை நடத்தி வந்த அவ்வம்மையார் ஒரு சிறந்த மகிழ்ச்சியுடைய கிறிஸ்தவர்.மனஉற்சாகமற்ற ஒரு கிறிஸ்தவ மாது அவரைப் பார்த்து நீ இப்பொழுது மகிழ்ச்சியாயிருப்பதுநலம்தான். நான் உனது வருங்காலத்தை நினைத்துப்பார்த்து வருத்தமடைகிறேன். ஒருவேளை உனக்கு ஒரு நோய்ஏற்பட்டு, நீ வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதென்று வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நீஇப்பொழுது வேலை செய்யுமிடத்தில் உனது எஜமானர் வேறு…

June

யூன் 8

யூன் 8 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிறஜெயம் (1.யோ.5:4). தனது வாழ்க்கையின்ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு கிறிஸ்தவன் பெறும் வெற்றியையும், அவனுடைய மனசமாதானத்தையும்யாதோ ஒன்று அவன் அனுமதிக்கும் பொழுது, பறித்துக்கொள்ளக் காத்திருப்பதை அவன்காணக்கூடும். தன்னால் முடியுமானால், தேவபிள்ளைகளை ஏமாற்றிக் கெடுத்துவிடச் சாத்தான்ஆயத்தமாயிருக்கிறான். நமது வாழக்கைப் பாதையின் ஒவ்வொரு சிறப்புக் கட்டத்திலும்,நம்முடைய அனுபவம் சரியாக இருக்கிறதா, நாம் ஆண்டவருடன் சரியான உறவு கொண்டுள்ளோமாஎன்று கவனித்துக் கொள்வது அவசியம். ஒரு கிறிஸ்தவன் தனதுவிசுவாசத்தைத் தகுதியான நேரத்தில்…

June

யூன் 7

யூன் 7 என்னை உண்டாக்கினவரும்,இரவில் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டி கர்த்தர் (யோபு 35:11). வெப்பமான தலையணையில்வசதியில்லாமல் படுத்துக்கொண்டு, பொழுது எப்போ விடியுமோவென்று காத்திருந்து, உறக்கமற்றஇரவுகளைக் கழித்திருக்கிறாயோ? உனது சிருஷ்டிகராகிய ஆண்டவரின்மீது உனது எண்ணங்களைத்தூய ஆவியானவர் ஒருமுகப்படுத்தவேண்டுமென்று வேண்டிக்கொள். அவர் உனது தனிமையான நேரங்களைக்கீதங்களால் நிரப்பவேண்டுமென வேண்டிக்கொள். உனது கலக்கமான இரவுகள்எவரையும் இழக்கக் கொடுத்ததால் ஏற்பட்டனவோ? அத்தகைய நேரங்களில், மறைந்துபோனஅன்பர் தமக்குத் தேவையாயிருந்தாரென்பதை ஆண்டவர் அடிக்கடி நமக்கு உறுதிப்படக் கூறுவதில்லை.அவர் ஆவலும், உற்சாகமும் மிகுந்த அந்த ஆத்துமாவை,…

June

யூன் 6

யூன் 6 ஜெபத்தில் தரித்திருங்கள் (1.பேது.4.7). ஆபத்துக்கள்நிறைந்த இவ்வுலகத்திற்குள் ஜெபம் செய்யாது செல்லாதே! எனது நண்பனே, இரவில் ஜெபிக்கநீ முழந்தாளிடுகிறாய். தூக்கம் உன் கண்களை மூடுகிறது. நாள் முழுவதும் கடினமாக வேலைசெய்கிறாய். களைப்பாகத்தானிருக்கிறாய். அது ஒரு சாக்குப்போக்கு. உன்னுடைய ஜெபத்தைசுருக்கிக்கொள்ளுகிறாய். மெதுவாகத் தூங்கிவிடுகிறாய். காலை விடிகிறது. பிந்திஎழும்பியதால், உனது காலைத் தியானத்தைச் செய்யமுடியவில்லை. அல்லது அவசரம் அவசரமாய்செய்து முடிக்கிறாய். ஜெபம்பண்ணுவதில்கவனம் இல்லை. அதற்காக விழித்திருக்க முடியாமல் போயிற்று. இந்நிலையைச்சீர்செய்யமுடியுமா? அது முடியாதென நாங்கள் நம்புகிறோம். செய்யக்கூடாத தவறை…

June

யூன் 5

யூன் 5 உன் வேண்டுதல்ஆழமானதாக இருக்கட்டும் (ஏசா.7:11) என் இதயமே, உன்வேண்டுதல் ஆழமாயிருக்கபட்டும் உன் வேண்டுதலுக்குமேலாய் ஆண்டவர் செய்வார்- உன் ஆண்டவரின்தெய்வீகம் எண்ணிக்கேள். அன்புமிகும் அவருடையகருவூலம் நின்றெடு. அனைத்திற்கும் அவரைநம்பு, இன்று துவங்கி அண்ணலவர் பாதையில்மகிழ்கண்டிடு. ஆசீர்வாத மழையின் இரைச்சலை நாம் கேட்கும்வரைக்கும் ஜெபித்துக்கொண்டும், காத்துக் கொண்டும் இருக்கவேண்டும். பெரியகாரியங்களுக்காக நாம் ஏன் வேண்டிக்கொள்ளலாகாது என்பதற்கு எவ்வகைக் காரணங்களும்கிடையாது. விசுவாசத்துடன் நாம் வேண்டிக்கொண்டு, பொறுமையான விடாமுயற்சியுடனும்,மனோதிடனுடனும் காத்திருந்தால், நாம் வேண்டுகிற பெரிய ஆசீர்வாதங்களையும் பெறுவோம்.அவருக்காக நாம் காத்திருப்பதுடன்,…

June

யூன் 4

யூன் 4 அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும்பலத்த கீழ்க்காற்றினால், சமுத்திரம் ஓதுங்கும்படி செய்து அதை வறண்டுபோகப்பண்ணினார் (யாத்.14:21). இவ் வசனத்தின்மூலம் நாம்,ஆண்டவர் எவ்வாறு இருளில் செயலாற்றுகிறார் என்னும் ஆறுதலான செய்தியைக் காண்கிறோம்.ஆண்டவருடைய செயலாக்கம், இஸ்ரவேல் மக்கள் காலையில் எழுந்து தாங்கள் செங்கடலைக்கடந்து செல்ல முடியும் என்று கண்டபோதல்ல, இரவு முழுவதும் நடந்தது. அதைப்போலவே உனதுவாழ்விலும் யாவும் இருளாயிருக்கையிலே தானே பெருஞ் செயலாக்கம் நடந்து கொண்டிருக்கும்.அதன் சிறு குறியைக்கூட நீ காணமுடியாது. ஆனால் ஆண்டவர் தம் செயலைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்.அன்று…

June

யூன் 3

யூன் 3 அக்கரைக்குப் போவோம்வாருங்கள் (மாற்.4:35). ஆண்டவராகிய கிறிஸ்துவின்கட்டளைக்குட்பட்டே நாம் செல்லும்பொழுதுகூட, புயல்களுக்கு நாம் தப்ப இயலாது. இந்தவசனத்தில் கூறப்பட்ட சந்தர்ப்பத்தில், சீடர்கள் கிறிஸ்து நாதரின்கட்டளைக்கேற்பத்தான் சென்றனர். இருந்தபோதிலும், மிகுந்த கடுமையான புயலை அவர்கள்சந்தித்தனர். அவர்களது படகு கடலில் அழிந்து போகத்தான பேராபத்தில் அவர்கள் இருந்தனர்.தங்களது துன்பத்தில் ஆண்டவரை உதவி செய்ய அழைத்தனர். ஒருவேளை கிறிஸ்து நாதர்நமக்கு உதவிக்கு வரத் தாமதமாகலாம். அது நமது விசுவாசம் சோதிக்கப்பட்டும்பலப்படுவதற்காக இருக்கலாம். நமது ஜெபங்கள் இன்னும் ஆழமானவைகளாக இருக்கவேண்டுமென்பதற்காகஇருக்கலாம். அப்பொழுதுதான்…

June

யூன் 2

யூன் 2 (ஆபிரகாம்) தான்அநேக ஜனங்களுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடேவிசுவாசித்தான். அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை. உறுதியான விசுவாசம்பெறுவதற்கு மிகச் சிறந்த வழி என்னவென்று, தம்மிடம் கேட்ட ஒரு கனவானுக்கு, ஒரு சமயம் ஜார்ஜ்முல்லர் கூறியதை நம்மால் மறக்கவே முடியாது. விசுவாசத்தின் மூதாதையர்என்று கூறப்படக்கூடிய அவர், உறுதியான விசுவாசம்பெற ஒரே வழி பெருஞ் சோதனைகளைச்சகித்தலேயாகும். பெருஞ்சோதனைகளின் நேரத்தில் நான் உறுதியாய் நின்றே என்விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டேன் என்று கூறினார். இது மிகவும் மெய்யானது. பிறகாரியங்களனைத்தும் கைவிடும் நேரம்தான்…

June

யூன் 1

யூன் 1 இதுவே நீங்கள் இளைத்தவனைஇளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல். இதுவே ஆறுதல் (ஏசா.28:12). நீ கவலைப்பட்டுக்கலங்குவானேன்? உன் எரிச்சல் என்ன பலனைத் தரும்? மாலுமியாகிய உன் ஆண்டவர் கரத்தில்சுக்கானைக் கொடுத்து, நீ செல்லும் படகை அதாவது உன் வாழ்க்கையைச் செலுத்திக்கொள்.அவர் அதை உன்னிடத்திலே தந்துவிட்டாலும் அதை நடத்தத் தெரியாதவன் நீ. அதன் பாய்களைச்சுருட்டவும்கூட உனக்குத் தெரியாது. அவ்வாறான நீ ஒரு கப்பல் தலைவனைப்போன்று கவலைகொள்வானேன்? அமைதலாய் இரு. ஆண்டவரே தலைவர். அவரே உன்னை நடத்துவார். இப் பேரிரைச்சல்களையும்குழப்பங்களையும்…