June

யூன் 6

யூன் 6

ஜெபத்தில் தரித்திருங்கள் (1.பேது.4.7).

ஆபத்துக்கள்நிறைந்த இவ்வுலகத்திற்குள் ஜெபம் செய்யாது செல்லாதே! எனது நண்பனே, இரவில் ஜெபிக்கநீ முழந்தாளிடுகிறாய். தூக்கம் உன் கண்களை மூடுகிறது. நாள் முழுவதும் கடினமாக வேலைசெய்கிறாய். களைப்பாகத்தானிருக்கிறாய். அது ஒரு சாக்குப்போக்கு. உன்னுடைய ஜெபத்தைசுருக்கிக்கொள்ளுகிறாய். மெதுவாகத் தூங்கிவிடுகிறாய். காலை விடிகிறது. பிந்திஎழும்பியதால், உனது காலைத் தியானத்தைச் செய்யமுடியவில்லை. அல்லது அவசரம் அவசரமாய்செய்து முடிக்கிறாய்.

ஜெபம்பண்ணுவதில்கவனம் இல்லை. அதற்காக விழித்திருக்க முடியாமல் போயிற்று. இந்நிலையைச்சீர்செய்யமுடியுமா? அது முடியாதென நாங்கள் நம்புகிறோம். செய்யக்கூடாத தவறை நீசெய்துவிட்டாய். அதனால் நீ துன்பம் அடைவாய்.

உனக்குமுன்னுள்ள சோதனையை எதிர்க்க நீ ஆயத்தமாயிருக்கவில்லை. ஒரு குற்ற உணர்வு உனது ஆன்மாவில்ஏற்பட்டுள்ளது. நீ ஆண்டவரைவிட்டு அப்புறம் விலகிப்போய்விட்டாய். உனது ஜெபத்தில் நீகவனமாயிராதிருந்த அந்த நாள், உன் உறக்கம் கலக்கம் உன் ஜெபத்தில் குறுக்கிட்டதேஅந்த நாள், உனது கடமைகளிலிருந்து நீ நடுங்கி ஓடும் நாளாயிருந்தால்ஆச்சரியப்படுவதற்கில்லை.

சோம்பலினால் தடைப்பட்ட ஜெபநேரங்களை ஈடுசெய்திடல் முடியாது. நமக்கு அனுபவங்கள்கிடைக்கலாம். ஆனால், அந்த அருமையான நேரங்களில் பொதியப்பட்டு நமக்குத் தரப்படும்புத்துணர்வும் வலிமையும் நாம் மறுபடியும் என்றுமே பெற்றுக்கொள்ளமுடியாதவை.

தேவமைந்தனாகியஇயேசு நாதரே விடியுமுன்னரே எழுந்து, தமது இதய தாபங்களை ஆண்டவர் முன்னிலையில்ஊற்றினாரென்றால், அனைத்து முழுமையான, நலமான ஈவுகளையும் தரக்கூடியவராகிய ஆண்டவரிடத்தில்நீ வேண்டிக்கொள்ளவேண்டியது எவ்வளவு அவசியமாகும். ஆம், ஆண்டவர் நமக்கு அனைத்து நலமான ஈவுகளையும்தருவதாக வாக்களித்திருக்கிறார்.

தமதுஜெப வாழ்க்கையின்மூலம் இயேசுநாதர் தமது வாழ்விற்கு என்னென்ன பெற்றுக்கொண்டாரென்பதைநாம் அறியோம். ஆனால், ஜெபமற்ற வாழ்க்கை ஆற்றல் இல்லாத வாழ்க்கை என்பதை நாம்அறிவோம். ஜெபம் இல்லாத வாழ்க்கை ஆரவாரம் நிறைந்ததாய் இருக்கலாம். அதிபபடபடப்புள்ள வாழ்க்கையாக இருக்கலாம். ஆனால் அது இரவும் பகலும் கர்த்தராகியதந்தையிடத்தில் நமக்காக மன்றாடி நின்ற இயேசுநாதரைவிட்டுத் தூரத்தில் விலகி நிற்கும்வாழ்க்கையாகும்.