June

யூன் 20

யூன் 20 நீங்கள் வலுதுபுறமாய்ச் சாயும்போதும் இடதுபுறமாய்ச் சாயும்போதும். வழி இதுவே, இதிலேநடவுங்கள், என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்(ஏசா.30:21). பலநேரங்களில் நாம் நமது பாதையைத் தெரிந்தெடுப்பதில் கஷ்டப்படுகிறோம். இவ்வழியில்செல், அவ்வழியில் செல் என்று பலரும் ஆலோசனைகள் தருகிறார்கள். செயலறிவு ஒரு வழியையும்,விசுவாசம் மற்றொன்றையும் நமக்குக் காட்டுகின்றன. இந்நேரங்களில் நாம்அமர்ந்திருக்கவேண்டும். குறுக்கீடுகளை அமர்த்திவிட்டு, ஆண்டவரின் முன்னிலையில் நம்மைநிதானப்படுத்தி அமைதியாயிருக்கவேண்டும். வேதாகமத்தை எடுத்து கருத்துடன் பக்தியோடுவாசிக்கவேண்டும். அவருடைய முகத்தின் திருவொளிக்கு நேராக நம்மை உயர்த்தி…

June

யூன் 19

யூன் 19 …..அப்பத்துக்குத்தானியம் இடிக்கப்படும் (ஏசா.28:28). கிறிஸ்து நாதருடைய கரங்களினால் நாம் மாவு ஆக்கப்பட்டலான்றி நாம் உலகத்தின் பசியைத்தீர்க்கும் அப்பங்களாக முடியாது. அப்பத்துக்கு தானியம் இடிக்கப்படும். கிறிஸ்து நாதரின்ஆசி சில நேரங்களில் துயரமாகும். ஆனால், மற்ற மக்களின் வாழ்க்கைகளில் ஆசீர்வாதம்தரக்கூடுமானால், நமது துன்பம், துயரம் நமக்குப் பெரும் விலையாகிவிடாது. உலகின் இன்றுள்ளஇனிமையான காரியங்களனைத்தும் கண்ணீர், நோவு ஆகியவற்றின்மூலம் வந்தவைகளே. ஆண்டவர் தாம் தெரிந்துகொண்டவர்களுக்கு என்னை அப்பமாக உருவாக்கியுள்ளார். அந்த அப்பம்அவர்களைப் போஷிக்கச் சிங்கங்களின் பற்களில் அறைக்கப்பட வேண்டுமானால்,…

June

யூன் 18

யூன் 18 ஆகையினால் நெகிழந்தகைகளையும், தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறதுபிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு உங்கள் பாதங்களுக்கு வழிகளைச்செவ்வைப்படுத்துங்கள் (எபி.12:12-13). நமது ஜெபங்களுக்காக நாம்முழங்காலூன்றி நிற்பதற்கும், நமது விசுவாசக் கரங்களை உயர்த்துவதற்கும், ஆண்டவர் நம்மைஉற்சாகப்படுத்துவதற்கும் இவ்வார்த்தைகள் நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன. அடிக்கடிநமது விசுவாசம் களைப்படைந்து ஊக்கமிழந்து, தளர்வுற்றுப் போகிறது. நமது ஜெபங்களும் வலுவையும்,பயன்தரும் நிலையையும் இழந்துவிடுகின்றன. இங்கு கூறப்படும் உவமானம்மிகவும் கவர்ச்சிகரமானது. நாம் மனமடிவாகி அச்சத்தால் நிறைந்தவர்களாகக் கோழைகளாகப்போய்விடும்பொழுது, சிறிய தடைகளும் நம்மை இன்னும் மனமடிவாக்கி அச்சுறுத்துகின்றன.…

June

யூன் 17

யூன் 17 அவைகள் நின்று தங்கள்செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்துஒரு சத்தம் பிறந்தது (எசேக்.1:25). செட்டைகளைத் தளரவிடுவதுஎன்றால் என்ன? ஆண்டவருடைய சத்தத்தை எவ்வாறு கேட்டுத் தெரிந்து கொள்வது? என்று சிலர்கேட்கின்றனர். இதோ இரகசியம். அவர்கள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தபொழுது அந்த சத்தத்தைக் கேட்டனர். சிறகைஅடித்துக்கொண்டிருக்கும் பறவைகளை நாம் பார்த்திருக்கிறோம். ஒரே இடத்தில் நின்றாலும்அவைகளின் செட்டைகள் அடித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இங்கே அவைகள் தங்கள்செட்டைகளைத் தரளவிட்டிருந்தபொழுது, அந்தச் சத்தத்தைக் கேட்டன என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டவருக்கு…

June

யூன் 16

யூன் 16 …. நான் நம்புகிறதுஅவராலே வரும் (சங்.62:5). நமது விண்ணப்பங்களுக்கானபதில்களை எதிர்பார்ப்பதில் பொதுவாக நாம் கவனக்குறைவைக் காட்டுகிறோம். நமதுவேண்டுகோள்களில் நாம் எவ்வளவு அக்கறையற்றவர்களாக இருக்கிறோம் என்பதை இது காட்டுகிறது.தன் விவசாயத்தில் தகுந்த மகசூல் கிடைக்காவிட்டால், ஒரு விவசாயிமனநிறைவுகொள்ளமாட்டான். குறிபார்த்துச் சுடும் ஒருவன் தான் அனுப்பும் குண்டு எவ்விடத்தில்படுகிறதென்பதைக் கவனிப்பான். மருத்துவர் தான் கொடுக்கும் மருந்துகள் அளிக்கும் பயன்கள்யாவை என அறிவதில் கவனமாயிருப்பார். அப்படியானால், ஒரு கிறிஸ்தவன் மட்டும் தனதுசேவையின் பலனைக் குறித்து அக்கறையற்றிருக்கலாமோ? வாக்களிக்கப்பட்டபடிதேவசித்தத்திற்கேற்பத் தூய…

June

யூன் 15

யூன் 15 நான்சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் (ஆதி.41:52). கோடைமழை பெய்ந்துகொண்டிருக்கிறது. கவிஞர் ஒரு பலகணியருகில் நின்று மழையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கொட்டுக் கொட்டென மழை நிலத்தைத் தாக்குகிறது. தன் கண்களுக்கு முன்தெரியும் மழை காட்சிக்கு அப்பால் கவிஞரின் மனக்கண்களை நோக்குகின்றன. நீர்வளம்பெற்ற நிலத்தினின்று எழுந்து வரவிருக்கும் ஆயிரக்கணக்கான அரும் மலர்களை அவை காண்கின்றன.அவரது மனக்கண்களின் முன்னர் அம்மலர்கள் மிக அழகாகக் காட்சி தருகின்றன. கவிஞரின்உள்ளம் கவிதை ஒன்றை இயற்றிப்பாட ஆரம்பிக்கிறது. எனக்கென இம்மழைகளில்லை, எழிலுடன்…

June

யூன் 14

யூன் 14 நானோ உன் விசுவாசம்ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன் (லூக். 22:32). கிறிஸ்தவனே , உன்விசுவாசத்தைக் காத்துக்கொள்ள. ஏனென்றால், உனக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கக்கூடிய ஒரேவழி விசுவாசமே. விசுவாசிக்கும் ஒரு மனிதனின் ஜெபம் ஊக்கமாயிராவிட்டால், அதுஆண்டவரிடமிருந்து பதிலைக் கொண்டுவராது. விசுவாசம் மண்ணுலகையும்,விண்ணுலகையும் இணைக்கும் தந்திக் கம்பி போன்றது. அதன்மூலம் ஆண்டவர் நாம் கேட்கும்முன்னரே நமது ஜெபங்களுக்கு மின் வேகமாகப் பதில் தருகிறார். நாம் ஜெபித்துக்கொண்டிருக்கும்பொழுதே அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், விசவாசமாகிய தந்திக்கம்பி அறுந்து போனால், எவ்வாறு அவருடைய…

June

யூன் 13

யூன் 13 என்னுடைய (சொந்த)சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். (யோ.14:27). இளைப்பாறுதல் என்றகருத்தை விளக்க தங்கள் கற்பனைகளை இரு ஓவியர்கள் ஓவியங்களாகத் தீட்டினர். ஒருவருடையஓவியத்தில் நெடுந் தொலைவில் மலைகளும் அவற்றின் மத்தியில் அமைதியான ஓர் ஏரியும்சித்தரிக்கப்பட்டிருந்தது. மற்றவருடைய ஓவியம் ஓலமிடும் நீர்வீழ்ச்சி ஒன்றைக் காட்டியது.ஒடிந்து விழுந்து விடுவோமோ என்னும் நிலையிலுள்ள மரக்கிளைகள் ஒன்று வரையப்பட்டிருந்தது.மரக்கிளையை நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நனைத்தன. அக்கிளையில் ஓர் இராபின்பறவை தன் கூட்டை அமைத்து அதில் அமர்ந்திருப்பது சித்தரிக்கப்பட்டிருந்தது. முதலாவது ஓவியம் காட்டியதுவெறும் தேக்கம். இரண்டாவது…

June

யூன் 12

யூன் 12 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய்எல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்… (1.கொரி.1:5). பெருந்துன்பம் தயரத்தினால்,ஜெபம் செய்யத் தூண்டப்பட்டு, நாளடைவில் தனது துன்பத்தையே மறந்து, பக்தி வாழ்க்கையில்ஈடுபட்டுத் தங்கள் ஆத்துமா உற்சாகப்படுத்தப்பட்ட மக்களை நீ சந்தித்ததுண்டா? இளவேனிற்காலம் ஒன்றின்பின் பகுதியில் ஒருநாள் புயல் ஒன்று வீசக்கண்டேன். கருமேகங்கள் வானத்தை மறைத்திருந்தன.மின்னல் பாய்ந்த பொழுதிலன்றி, காரிருளே எங்கும் நிறைந்திருந்தது. காற்றடித்தது.வானத்தின் மதகுகள் திறந்து விடப்பட்டதுபோன்ற மழை கொட்டியது. எவ்வளவு பெருஞ்சேதம்உண்டாயிற்று. வெளியில் ஒரு சிலந்திக்கூடும் விடப்படவில்லை. பலத்த கிளைகள் கொண்டதேக்கு மரத்தையும் முறித்தது. மின்னல்…

June

யூன் 11

யூன் 11 கர்த்தருடையஊழியக்காரன்… எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனுமாயிருக்க வேண்டும் (2.தீமோ.2:24). நம்மிலுள்ள கல்லானபாகத்தையெல்லாம் ஆண்டவர் நம்மை வெற்றிகொண்டு எடுத்துப் போடும்பொழுதும், நாம் இயேசுகிறிஸ்துவின் சிந்தைக்குள்ளாக ஆழ்ந்த காட்சிகளைக் காணும்பொழுதும்தான் புறாவைப்போன்றமென்மையான ஆவி தெய்வபயமற்ற இருள் நிறைந்த இவ்வுலகில் எவ்வளவு அரிது என்று உணருகிறோம். ஆவியானவரின் கிருபைகள்தற்செயலாகத் தாமதமாக வந்து இறங்குகிறவையல்ல. கிருபையின் நிலைகளை நாம் கண்டு கொண்டுஅவற்றைப் பற்றிக்கொள்ளாவிடில், அவற்றை நமது சிந்தையில் வளர்க்காவிடில், அவவை நமது இயற்கையில்ஒன்றிப்போய் நமது நடத்தையில் வெளிப்படமாட்டா. கிருபையின் ஒவ்வொருமுன்னேற்ற நிலையையும் முதலில்…