வாக்குமாறாத தேவன்
2025 பிப்ரவரி 11 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,14 முதல் 17 வரை) “அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான்”(வசனம் 16). தேவனுடைய தீர்க்கதரிசிக்குச் செய்த நன்மைக்குப் பிரதிபலனாக தீர்க்கதரிசியின் தேவனிடமிருந்து குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டாள். இவள் தனக்குப் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்யவில்லை, ஆயினும் அன்பினிமித்தமாகச் செய்கிற கிரியைகளுக்குப் பலன் அளிக்கிற ஆண்டவர் இந்தப் பெண்மணிக்கு இரக்கம் பாராட்டினார். அடுத்த பத்து மாதத்தில் நீ ஒரு குமாரனைப்…