உபத்திரவத்தினூடாக வளர்ச்சி
(வேதபகுதி: யாத்திராகமம் 1:9-14) “நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ண வேண்டும்” (வச. 10). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய முதல் எண்ணம் பயம். போர் ஏற்பாட்டால், இஸ்ரவேலர் எதிரியோடு சேர்ந்துவிடுவாhர்கள் என்ற பயம். அவர்களுடைய ராணுவ வீரர்கள், அவர்கள் வைத்திருக்கிற போர் ரதங்கள், இன்னும் பல ஆயுதங்கள்; இவற்றின்மேல் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. தங்களுடைய பலவீனம், அவநம்பிக்கை, பயம் இவற்றை மறைக்க இஸ்ரவேலரைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்றைக்கு உலகமெங்கும் கிறிஸ்தவர்களைக் எண்ணம் இப்படியானதாகவே இருக்கிறது.…