March

மார்ச் 11

கர்த்தருடைய தாசனாகியமோசே மரித்த பின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவைநோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப் போனான். இப்பொழுது நீயும் அந்த ஐனங்கள்எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து…. போங்கள் என்றார் (யோசு.1:1-2). நேற்று மரணம் உன்குடும்பத்தில் நுழைந்து வீட்டை வெறுமையாக்கிற்று. எல்லாவற்றையும் விட்டுவிட்டுநம்பிக்கையின் இழப்பின் மத்தியில் உட்காரவே உன் எண்ணம் தூண்டுகிறது. ஆனால் அப்படிநீ எண்ணுவது தகாது. நீ போர்க்களத்தின் முன்னிலையில் நிற்கிறாய். அபாயம் கிட்டுகிறது.ஒரு நிமிடம் தயங்கினால், பரிசுத்த முயற்சியை நீ…

March

மார்ச் 10

விசுவாசத்தினாலேநீதிமான் பிழைப்பான் (எபி.10:38). தோற்றங்களும்,உணர்ச்சிகளும் விசுவாசம் என்றெண்ணப்படுகின்றன. இன்பமளிக்கும் உணர்ச்சிகளும், ஆழ்ந்ததிருப்தி கொடுக்கும் அனுபவங்களும் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் அவைமாத்திரமே கிறிஸ்தவ ஜீவியம் அல்ல. சோதனைகளும், போராட்டங்களும், மனச்சஞ்சலங்களும்,பரீட்சைகளும் வழியெல்லாம் இருக்கின்றன. அவைகளைத் துர்ப்பாக்கியங்கள் என்றுஎண்ணக்கூடாது. நமக்குத் தேவையான ஒழுங்கு முறையின் ஒரு பகுதியென்று கொள்ளவேண்டும். நாம் இயேசுவின்முன்கீழ்ப்படிந்து நடந்து, இந்தப் பற்பலவித அனுபவங்களிலும் நம்முடைய உணர்ச்சியைப் பெரிதும்பாராட்டாது, கிறிஸ்துவை நம்முடைய இருதயத்தில் வசிப்பவராகக் கொள்ளவேண்டும். அநேகர்விசுவாச வழியில்லாது, உணர்ச்சி வழி செல்ல முயலுகிறார்கள்.…

March

மார்ச் 9

கொடு முடியிலிருந்து (ம்)….. கீழே பார் (உன்.4:8). அழுத்தும்பாரம் கிறிஸ்தவனுக்கு இறக்கையை அளிக்கிறது. இது எதிர்மாறான வார்த்தைபோல் தோன்றினாலும்அதுவே பாக்கியமான சத்தியம். தாவீது கசப்பான கஷ்டத்தை அனுபவிக்கையில், ஆ எனக்குப்புறாப்போல் சிறகுகள் இருந்தால் நான் பறந்துபோய் இளைப்பாறுவேன் (சங்.55:6) என்றுகதறினான். இவ்விதமாக எண்ணுகையில் தன் விருப்பம் கைக்கூடி வரக்கூடியதே என்று உணர்ந்ததாகத்தெரிகிறது. ஏனென்றால் அவன் கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னைஆதரிப்பார் (சங்.55:22) என்று அதே அதிகாரத்தில் சொல்லுகிறான். பாரம் என் வார்த்தை யேகோவா உனக்கு…

March

மார்ச் 8

தேவரீர் சொன்னபடியே செய்தருளும்…. உமது நாமம் என்றைக்கும்மகிமைப்படவும் கடவது (1.நாளா.17:23-24). இதுவேபாக்கியமான ஜெபம். அநேக தடவைகளில் வாக்குப்பண்ணப்படாத காரியங்களைக் கேட்கிறோம்.நாம் சிறிது காலம் கேட்டுக்கொண்டேயிருந்த பின்னரும் அது கர்த்தருடைய சித்தத்திற்கு இசைந்ததாஎன்று இலகுவில் நாம் அறிந்து கொள்கிறதில்லை. தாவீது தன் ஜீவியத்தில் கண்டதுபோல்சில சமயங்களில் நாம் கேட்பது கர்த்தருடைய சித்தத்திற்கு எற்றதுதான் என்று நம்பத்தக்ககாரியங்களுண்டு. வேதாகமத்திலிருந்து அது நமக்கென்று விசேஷ செய்தியாய் அமைத்திருப்பதாகக்கண்டு, அவர் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றக் கெஞ்சும்படி ஏவப்படுகிறோம். அச்சமயங்களில்ஜெபத்தில் உறுதியான விசுவாசம் கொண்டு, நாம்…

March

மார்ச் 7

நாங்கள் எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம் (2.கொரி.7:5). கர்த்தர்ஏன் இவ்வாறு ஓயாத கொடிய உபத்திரவங்களைக் கொடுத்து எங்களைச் சோதித்தார்? ஏனெனில்கஷ்டத்துக்கும் சோதனைக்கும் விலகியிருக்கும்போது, நாம் அறிவதைவிட இப்பொழுது நன்றாய்அவருடைய பலத்தையும், கிருபையையும் அறியும்படியே, பொக்கிஷம் மண்பாண்டங்களில் இருக்கிறது.பலத்தின் மகிமை கர்த்தருடையதேயன்றி நம்முடையதல்ல. இது நாம்அவர்மேல் சார்ந்திருப்பதை நன்றாய் உணரச்செய்கிறது. நாம் அவரையே சார்ந்திருப்பதற்கும்,நம்மை முற்றிலும் அவர் கரத்தில் ஒப்படைப்பதற்கும், அவருடைய கரிசனையின் பேரில்எப்போதும் சார்ந்து கொள்வதற்கும் அடிக்கடி கர்த்தர் நமக்குப் போதித்து வருகிறார். நமதுசுயபலத்தில் சாராது அவர் கரத்தின் ஆதரவின்றி…

March

மார்ச் 6

நாங்கள் நம்பியிருந்தோம் (லூக்.24:21). எம்மாவூருக்குப் போகும்வழியில் சீடர்கள் இயேசுவிடம் நாங்கள் நம்பியிருந்தோம் என்பதற்குப் பதிலாக நாங்கள்இன்னும் நம்பியிருக்கிறோம் என்று சொல்லவில்லையே என்று நான் அதிக விசனமடைவதுண்டு. இதுமுடிந்துபோன காரியம். அதிக வருந்தத்தக்க காரியம். அவர்கள் அவரிடம் எல்லாம்நாங்கள் நம்பியிருந்ததற்கு மாறாக இருக்கிறது. எங்கள் நம்பிக்கை வீணானதுபோல்தோன்றுகிறது. ஆனாலும் நாங்கள் நம்பிக்கையை விடோம். அவரைத் திரும்பக் காண்போம்என்று நம்பகிறோம் என்று சொல்லிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும். அப்படியல்ல,அவர்கள் தாங்கள் இழந்துபோன விசுவாசத்தை எடுத்துரைத்து அவரோடு நடந்து சென்றார்கள். இயேசுஅவர்களைப் பார்த்து…

March

மார்ச் 5

நாம் ஆரம்பத்திலேகொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில்,கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம் (எபி.3:14). நாம் கடைசியாக எடுத்துவைக்கும் அடியே நமக்கு வெற்றியைக் கொடுக்கிறது. மோட்சப் பட்டண வாசலண்டைநெருங்குகையில்தான் அநேகத் தீமைகள் நெருங்கி வருவதாக மோட்சப் பயணம் என்னும் நூலில்எழுதப்பட்டிருக்கிறது. அங்கேதான் சந்தேகம் என்ற மாளிகையிலிருந்தது. களைத்த பிரயாணியைமயக்கி, சாவென்னும் நித்திரைக்குள்ளாகும்படியான மயக்க பூமியும் அங்கேதான் இருந்தது.மோட்ச வாசல் நாம் காணத்தக்கதாக இருக்கும்போதுதான், நரக வாசல் அதன் சகலகொடுரத்தோடும் நம்மைக் கிட்டிச் சேருகிறது. நாம் நன்மை செய்வதில்சோர்ந்துபோகாமலிருப்போமாக. சோர்ந்துபோகாமலிருந்தால்…

March

மார்ச் 4

விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப்பின்பற்றுகிறவர்களாயிருந்து… (எபி.6:12). தாங்கள் அடைந்துள்ளஉன்னதப் பதவியிலிருந்து விசுவாச வீரர்கள் நம்மைக் கூப்பிட்டு, ஒருதடவை மனிதன் செய்ததைத்திரும்பவும் செய்யக்கூடும் என்கிறார்கள். விசுவாசம் தேவை என்பது மாத்திரமல்ல, விசுவாசம்பூரணமாய்க் கிரியை செய்யப் பொறுமையுங்கூட வேண்டும் என்கிறார்கள். நாம்சந்தேகப்படுவதினாலும் உற்சாகம் இழந்து போவதினாலும் சில வேளைகளில் கர்த்தரின்கையிலிருந்து விலகிப்போகிறோம். அவர் நமக்குக் கற்றுக்கொடுக்க இருக்கும் போதனைகளை இழந்துவிடுகிறோம்.இவ்வாறு நிகழாதபடி நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டும். குப்பைமேட்டில் போடப்படுவதற்கு மாத்திரமே நான் பயப்படுகிறேன் என்று ஒரு கொல்லன் சொன்னான். நான்ஓர்…

March

மார்ச் 3

அப்பொழுது அது (அசுத்தஆவி) சத்தமிட்டு அவனை மிகவும் அலைக்கழித்துப்புறப்பட்டுப்போயிற்று (மாற்.9:26). தீமைபோராட்டமில்லாமல் நம்மை விட்டுப்போகாது சந்தோஷமான வனபோஜனத்திற்குரியஅனுபவத்தினால் நாம் பரிசுத்த ஆவியானவரின் சுதந்திரத்தைப் பெறமுடியாது. எப்போதும்போர் செய்தே பெறவேண்டும். ஆத்துமாவின் இரகசிய பீடத்தில் இப்படியே நடந்து வருகிறது.நமது உள்ளத்தில் ஒவ்வொரு சக்தியும் மிகுந்த துன்பத்தின் மூலமாகவே ஆவிக்குரிய விடுதலையைஅடைகிறது. மரியாதையான விண்ணப்பத்தினால் அப்போலியோனை (மோட்சப்பயணம் என்னும்நூலில் கிறிஸ்தியானை எதிர்த்த பிசாசை) அப்பால் போகச் செய்ய இயலாது. அவன் வழியைமறைத்து காலை விரித்துக்கொண்டிருக்கிறான். நாம் முன்னேறிச் செல்லும் வழியில்…

March

மார்ச் 2

விடியற் காலத்தில் நீ ஆயத்தமாகி, மலையில் உச்சியில் என்சமுகத்தில் வந்து நில். உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது (யாத்.34:23). காலையில்தியானிப்பது வெகு அவசியமானது. நீ கர்த்தரைப் பார்க்குமுன் அந்த நாளைப் பார்க்காதே.கர்த்தரின் முகத்தைக் காணுமுன் மற்றவரின் முகத்தைப் பார்க்காதே. உன் சுய பலத்தைக்கொண்டேநீ ஒரு நாளைத் தொடங்கினால் நீ வெற்றியை எதிர்பார்க்க முடியாது. உன் இருதயத்தில்கர்த்தரைத் தியானித்து அவரோடு சில நிமிடங்களேனும் அமைதியாய்த் தரிந்திருந்து அதனால்ஏற்படும் சிற்சில யோசனைகளின் சக்தியோடு உன் அன்றாட வேலையைத் தொடங்கு. உன்மேன்மையுள்ள…