March

மார்ச் 21

உங்கள்விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார் (மத்.9:29). முழு விசுவாசம்பெறத்தக்கதாய் ஜெபிப்பதே ஊடுருவும் ஜெபம் எனலாம். ஜெபிக்கும்போதே, ஜெபம்ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேட்கப்பட்டது என்னும் நிச்சயம் ஏற்பட்டு, பெறுவோம் என்றுஉறுதியாய் எதிர்பார்ப்பதால், கேட்கப்பட்ட காரியத்தை அந்தக் காரியம் நடைபெறும்முன்னதாகவே பெற்றுக்கொண்டோம் என்று உணர்கிறோம். எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் அநித்தியமான உலகை நோக்காமல், அவர் வார்த்தை தவறாது என்பதையே விடாதுநோக்கி வந்தால் இவ்வுலக சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றும் அவ்வார்த்தை நிறைவேறுதலைத் தடைபண்ண முடியாது என்பதை அறிவோம். வேறு எந்த உறுதியுமில்லாமல் அவருடையவார்த்தையை நம்பவேண்டும் என்று…

March

மார்ச் 20

துக்கப்படுகிறவர்கள்என்னப்பட்டாலும் எப்போதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும்… (2.கொரி.6:10). ஒரு சிலர் கண்ணீர் வடிப்பதைஏளனமாய் எண்ணுகின்றனர். கிறிஸ்தவன் அழக்கூடாது என்று சொல்லப்படவில்லை. உரோமத்தைக்கத்தரிப்பவன் கைகளின் கீழ் நடுங்கியவாறே அசையாதிருக்கும் ஆட்டைப்போல் நம் ஆத்துமாஅதிகத் துக்கத்தின் கீழ் மௌனமாக இருக்கலாம். அடுத்து அடுத்து வரும் அலைகள்போன்றதுன்பங்களால் இருதயம் உடைந்து போகும் நிலையில் இருக்கையில் துன்பப்படுபவன் சப்தமிட்டுஅழுது தனக்கு விடுதலை தேடலாம். ஆனால் அதைவிட மேலானது ஒன்றுண்டு. கடலில் உப்புத்தண்ணீருக்கு மத்தியில் நல்ல தண்ணீர் ஊற்றுகள் சில சமயம் உண்டாகுமென்று சொல்லுகிறார்கள்.ஆல்பைன் மலையில் மிகுந்த…

March

மார்ச் 19

பிரியமானவர்களே,உங்களைச் சோதிக்கும்படி, உங்கள் நடுவில் பற்றி எரிகிற அக்கினியைக் குறித்து ஏதோபுதுமை என்று திகையாமல்… கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்(1.பேது.4:12-13). தாவீது தன் யாழைகுறையின்றி இசைத்திட அவன் அநேக ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று. இவ்வுலகத்தில்தயங்குகிறவர்களின் இருதயத்திற்கு ஊக்கம் அளிக்கவும், பரலோகப்பிதாவின் வீட்டில்சந்தோஷம் உண்டாக்கத்தக்கதாகவும், துதியும் இன்னிசையுமுள்ள சங்கீதத்தைப் பெற அநேகமணி நேரம் வனாந்தரத்தில் காத்திருத்தல் அவசியம். தாவீதைப்போல் அருமையானகீதம் யாரும் பாடவில்லை. அப்படிப்பட்ட சங்கீதம் பாட ஈசாயின் மகன் என்ன ஆயத்தம்செய்தான்? தீமை செய்கிறவர்களைஎதிர்த்தபோது, கர்த்தரின் உதவிக்காகக் கெஞ்சினான்.…

March

மார்ச் 18

அவரோ மாற்றுத்தரம்ஒன்றும் சொல்லவில்லை (மாற்.15:3). தம்மை குற்றப்படுத்தியமனிதரை இயேசு தெய்வீக வல்லமையாலும், ஒரே பார்வையாலும், ஒரே கண்டிப்பான எச்சரிப்பாலும்கீழே விழச்செய்திருக்கலாம். ஆனால் அச்சமயத்தில் இரட்சகர் மாறுத்தரம் ஒன்றும்சொல்லாதிருந்தது வேதாகமத்திலேயே உன்னதக் காட்சியாகும். மௌனமானதேவஆட்டுக்குட்டியானவர் அவர்களைத் தீமையானவற்றைப் பேசவும், கொடிய செய்கைகளைச் செய்யவும்விட்டுவிட்டு தமது அமைதியின் வல்லமையில் தரித்திருந்தார். நாம் மௌனமாக இருந்துகர்த்தரை நமக்காக காரியத்தை நடத்திடச் செய்ய தேவையான அமைதி ஒன்று உண்டு. நாமாகவேசெய்யும் வழியைத் தேடி, நியாயமானது, ஞானமானது, முன்யோசனையானது எது என்று ஆராய்வதைவிட்டுஓய்ந்து தேவன்…

March

மார்ச் 17

நான் உனக்குச்சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான் (மத்.2:13). நான் போக வேண்டும் என்றுவெகுவாய் விரும்பினும், பிதாவே நீர் வைத்த இடத்தில்நான் இருப்பேன். சேனையின் முன்னணியில்சென்று அவர்களை நடத்த விரும்பினேன் என்று நீர் அறிவீர். இசைக்குத் தக்கதாக காலடிஎடுத்து வைத்து, கொடி பறக்கும் பொழுதுபிறரை ஊக்க எண்ணினேன். போரின் மத்தியில் நேரேநிற்க விரும்பினேன். ஆனால் நீர் வைத்த இடத்தில்தரிப்பேன். நீர் வைத்த இடத்தில் தரித்திருந்து வேலைசெய்வேன். பணித்தளம் குறுகலாய்ச் சிறிதாயிருப்பினும், நிலம் செழிப்பற்றுக் கற்களுள்ளதாய் ஜீவனற்றுத் தோன்றினும்…

March

மார்ச் 16

நம்முடையபிரயோஜனத்திற்காகவே (எபி.12:10). ரால்ப் கோனார் என்பவரின்புத்தகங்களில் அவர் குவன் என்ற ஒரு பெண்ணைப்பற்றி ஒரு கதை கூறுகிறார். குவன் ஒருபிடிவாதமான, முரட்டுக்குணமுள்ள வாலிபப்பெண். சிறு வயதிலேயே தான் நினைத்த வழியில்சென்றாள். ஒரு நாள் அவளுக்கு ஒரு பெரிய விபத்து நேரிட்டதால், அவள் ஜீவிய காலமெல்லாம்நொண்டியாயிருக்க நேர்ந்தது. இதனால் அவள் அதிகமாக முறுமுறுத்து, இன்னும் அதிக முரட்டுக்குணம்உடையவளானாள். இவ்விதமான நிலையில் அவள் இருந்தபொழுது வான வழிகாட்டி என்று மலைதேசத்தாரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு சுவிசேஷப் பிரசங்கியார் அவளைப் பார்க்க…

March

மார்ச் 15

யாக்கோபு என்னும் சிறுபூச்சியே,…. பயப்படாதே…. நான் உன்னைப் புதிதும், கூர்மையுமான பற்களுள்ளயந்திரமாக்குகிறேன் (ஏசா.4:14-15). பற்களுள்ள யந்திரம் புழு.இவ்விரண்டைப்போல் ஒன்றுக்கொன்று மாறுபட்டது ஏதும் உண்டோ. புழு வெகு மிருதுவான ஜந்து.கல்லால் காயப்படும். கடந்து செல்லும் சக்கரத்தின் கீழ் அகப்பட்டு நசுங்குண்டுபோகும்.பற்களுள்ள இயந்திரம் மற்றப் பொருள்களை உடைக்கும். அது உடைபடாது. பாறையிலும் அதுஅடையாளம் செய்யக்கூடும். வல்லமையுள்ள தேவன் ஒன்றை மற்றொன்றாக்கக் கூடியவர். ஆவியில்வல்லமையற்ற ஒரு மனிதனை, அல்லது ஒரு ஜாதியை எடுத்து, தன் ஆவியின் ஊக்குதலால்சரித்திரத்தில் மேன்மையான இடம் பெறும்…

March

மார்ச் 14

மோசே தேவன் இருந்தகார்மேகத்திற்குச் சமீபமாய்ச் சேர்ந்தான் (யாத்.20:21). ஞானவான்களுக்கும்,ஐhக்கிரதையுள்ளவர்களுக்கும் மறைவாக கர்த்தர் இரகசியங்களை இன்னும் வைத்திருக்கிறார். நீஅவைகளைக் குறித்துப் பயப்படாதே. நீ அறியக்கூடாத காரியங்களை ஏற்றுக்கொண்டுதிருப்தியாயிரு. பொறுமையாய்க் காத்திரு. இருளின் பொக்கிஷத்தையும், இரகசியத்தின்மகிமையான ஐசுவரியங்களையும் அவர் உனக்குப் படிப்படியாய் வெளிப்படுத்துவார். இரகசியம்கர்த்தருடைய முகத்தை மறைக்கும் திரையாகும். உன் ஜீவியத்தில் வந்துசேரும் மேகத்தினுள் பிரவேசிக்கப் பயப்படாதே. தேவன் அதிலிருக்கிறார். அதன் மறுபாகம்,அவருடைய மகத்துவத்தால் ஒளிவிடுகிறது. பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள்நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,…

March

மார்ச் 13

தேவரீருடைய வழிகள்நீதியும் சத்தியமுமானவைகள் (வெளி 15:3). இருபந்தைந்து ஆண்டுகளாகநோயற்றிருந்த சார்லஸ் ஸ்பர்ஜனின் மனைவி பின்வரும் சம்பவத்தைக் கூறுகிறார். இருண்டு, பிரகாசமற்றிருந்த ஒரு நாளின் இறுதியில்,இரவு நெருங்குகையில், நான் படுக்கையில் இளைப்பாறிக் கொண்டிருந்தேன். என் சௌகரியமானஅறையில் எங்கும் வெளிச்சமாயிருந்தபோதிலும், வெளியிலிருந்த இருள் சற்று என் ஆத்துமாவில்நுழைந்து அவிக்குரிய தரிசனத்தை மறைப்பதுபோல உணர்ந்தேன். வேதனையென்ற கடினமான வழியில்வழுக்கி விழுந்துவிடாதபடி கர்த்தரின் கரம் என்னைக் கைபிடித்து வழி நடத்துகிறது என்பதைஅறிந்தேன். ஆயினும் அன்று எவ்வளவு முயன்றும் அவர் கரத்தை என்னால் காண…

March

மார்ச் 12

கர்த்தர்….. அன்று இராமுழுவதும்,கீழ்க்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்திலே, கீழ்க்காற்றுவெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது…. அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும்தீவிரமாய் அழைப்பித்து…. கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார். அதுவெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டு போய்ச் செங்கடலிலே போட்டது. எகிப்தின் எல்லையில்எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லல (யாத்.10:13,16,19). கர்த்தர் பூர்வகாலத்தில்இஸ்ரவேலருக்காக, கொடுரப் பார்வோனுக்கு விரோதமாய்ப் போர் புரிந்தபோது, புயல் காற்றுஅவர்களுக்கு விடுதலை கொண்டு வந்தது. எகிப்தியரின் எதிர்ப்பைக் கடைசி முறையாக உன்னதமானசெய்கையால், முறியடிக்க உதவியது இந்தப் புயல்காற்றே. இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னால்கடலும், பக்கங்களில்…