January

ஐனவரி 11

என் ஜனத்தை ஆற்றுங்கள்….. என்று… தேவன் சொல்லுகிறார் (ஏசா.40:1). ஆறுதலைச் சேர்த்து வையுங்கள். இதுவே தீர்க்கதிரிசியின் ஊழியம். உலகம் எண்ணில்லாத ஆறுதலற்ற இருதயங்ககளால் நிறைந்திருக்கிறது. நீ இந்த ஊழியத்தைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமுன் அற்கு ஏற்ற பயிற்சி அடையவேண்டும். உன்னுடைய பயிற்சி மிகக் கடினமானது. இந்த ஆறுதலைப் பூரணமாய் நீ அளிப்பதற்கு முன்னதாக, எண்ணிறந்த இருதயங்களிலிருந்து, இரத்தக்கண்ணீர் வடியச் செய்யும் அதே கஷ்டங்களை நீ அனுபவிக்கவேண்டும். இவ்விதமாய் உன் சொந்த ஜீவியமே ஆறுதலளிப்பதாகிய தெய்வீக செய்கையை நீ…

January

ஐனவரி 10

அவர்கள்…. ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு…. (அப்.16:6). ஆரம்ப காலத்து நற்செய்தி பிரசங்கிகள் கர்த்தரால் நடத்தப்பட்ட முறைகளைப் பார்த்தால் ஆச்சரியமாயிருக்கிறது. தவறான வழியில் செல்ல முயன்றபோதெல்லாம் தடைபண்ணப்படுவதே பெரும்பாகமாயுள்ளது. அவர்கள் இடப்புறம் திரும்பி ஆசியா நாட்டிற்குப்போக ஆசைப்பட்டபொழுது பரிசுத்த ஆவியானவர் தடைபண்ணினார். பின்வரும் காலங்களில் அநேக பிரதேசத்தில் பவுல் தன்னுடைய பெரிய வேலைகளைச் செய்யப்போகிறார். ஆனால் அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியானவரால் தடைபண்ணப்பட்டார்கள். தகர்க்க முடியாத சாத்தானின் கோட்டையை எதிர்க்க இன்னும் எற்ற சமயம்…

January

ஐனவரி 9

ஆனால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோ.8:18). ஒரு பட்டுப் பூச்சியின் கூட்டை ஓர் ஆண்டுவரை வைத்திருந்தேன். அதன் அமைப்பு விநோதமாயிருந்தது. அந்தக் கூட்டின் முகப்பில் ஒரு சிறு பிளவு இருந்தது. அதன் வழியாய் அதன் உடல் சிரமத்தோடு வெளிவரும். அது வெளியேறிய பின் அந்தக் கூடு, புழு உள்ளே இருக்கும் கூடுபோன்று ஒரு சேதமுமின்றியிருக்கும். நூல் கிழிந்து சிக்கியிருக்காது. அதன் உள்ளிருந்து வரும் புழுவின் உடம்பையும், வெளியேறும் பிளவின்…

January

ஐனவரி 8

நான்….. ஏற்ற காலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன். ஆசீர்வாதமான மழைகள் பெய்யும் (எசேக்.34:26). இன்று காலை உன் பருவநிலை என்ன? வறட்சியான காலமோ? அப்படியானால் மழை பெய்யவேண்டிய காலம் அதுவே. அதிக பாரமான கரியமேகங்கள் சூழ்ந்த காலமா? அவ்வாறாயின் அதுவே மழைக்காலம். உன் நாளுக்குத்தக்கதாக உன் பலனும் இருக்கும். நான் ஆசீர்வாதமான மழைகளைக் கொடுப்பேன். மழைகள் என்று பன்மையிலே கூறப்பட்டது சகலவிதமான ஆசீர்வாதங்களையும் தேவன் நமக்கு அருளுவார் என்பதைக் குறிக்கிறது. தேவனின் ஆசீர்வாதங்கள் யாவும் தங்க ஆபரணத்திலுள்ள சங்கிலிகள்போல்…

January

ஐனவரி 7

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன் (பிலி.4:11) பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எவ்வித சௌகரியங்களும் அற்ற சிறையிலிருக்கும்போது மேற்கண்ட வார்த்தைகளை எழுதினார். ஒருநாள் அதிகாலையில் ஓர் அரசன் தன் தோட்டத்திற்குச் சென்றபோது அங்குள்ள யாவும் காய்ந்து வாடிப்போயிருந்ததாகக் கண்டான். அவன் வாயிலண்டை நின்ற ஒரு மரத்தை நோக்கி அதன் காரணத்தை வினவினான். அம்மரம்தான் பைன் மரத்தைப்போல உயரமாயும், அழகாயும் இல்லாததால் மனம் குன்றிச் சாகவேண்டுனெ;று தீர்மானித்ததாகச் சொல்லிற்று. பைன் மரம் தான் திராட்சைக் கொடியைப்போல் இனிய பழங்களைக்…

January

ஐனவரி 6

நீதண்ணீர்களைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை (ஏசா.43:2). தேவன் நாம் கடப்பதற்கு முன்னே பாதைகளைத் திறந்து வைக்கிறதில்லை. நமக்கு உதவிதேவையாயிருப்பதற்கு முன்னே உதவி செய்வேன் என்று வாக்களிக்கிறதில்லை. நமக்கு உதவிதேவையாயிருப்பதற்கு முன்னே உதவி செய்வேன் என்று வாக்களிக்கிறதில்லை. நம்முடையவழிகளிலுள்ள தடைகளையும் நாம் சேருமுன்னே அவைகளை நீக்குவதில்லை. ஆனால் அவசியமானபோதுநமக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அவர் கைகளை நீட்டுகிறார். அநேகர் இதை மறந்து தங்களுக்குஎதிர்காலத்தில் வரக்கூடும் என்று நினைக்கிற கஷ்டங்களுக்காக எப்பொழுதும் கவலைகொள்ளுகிறார்கள். அவர்கள் தேவன் தங்களுடைய பாதையை அநேக…

January

ஐனவரி 5

கர்த்தாவே, உம்மைத் தவிர எங்களுக்குச் சகாயம் செய்வார் ஒருவரும் இல்லை (2.நாளா.14:11) பொறுப்பு யாவும் அவரைச் சேர்ந்ததே என்று கடவுளுக்கு ஞாபகமூட்டுங்கள். உம்மைத் தவிரஎங்களுக்குச் சகாயம் செய்வார் ஒருவரும் இல்லை. ஆசாவிற்கு விரோதமாய் வந்தவர்கள் அநேகர்.பத்து இலட்சம்பேர் கொண்ட சேனையும் முந்நூறு இரதங்களும் அவனுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுவந்தன. அத்துணை பெரிய சேனையை எதிர்த்துச் செல்வது அவனுக்கு முடியாத காரியமாய்த்தோன்றிற்று. அவனுக்குத் துணை நிற்கக்கூடிய கூட்டுப்படைகளுமில்லை. ஆகையால் கர்த்தர்ஒருவரையே அவன் நம்பவேண்டியிருந்தது. சிறிய துன்பங்கள் ஏற்படும்பொழுது நீமற்றவர்களிடமிருந்து உதவி…

January

ஐனவரி 4

இயேசுஅவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன்,இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான் (யோ.4:50) நீங்கள்ஜெபம்பண்ணும்போது….. விசுவாசியுங்கள் (மாற்.11:24) குறிப்பிட்டு ஜெபிக்கவேண்டிய ஒரு காரியம் இருக்கும்பொழுது, கர்த்தரை நம்பி உங்கள்ஜெபத்திற்கு விடை பெற்று அதற்காக அவருக்கு நன்றி செலுத்தும் வரையில் ஜெபியுங்கள்.ஜெபத்திற்கு விடை வெளியரங்கமாய் கிடைக்கத் தாமதமாகும்பொழுது அவிசுவாசத்தோடுஜெபிக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஜெபம் அனுகூலமாயிராமல், தடையாயிருக்கும். அவ்வாறுஜெபித்தால், ஜெபித்து முடிக்கும்போது உங்கள் விசுவாசம் பலம் குன்றியதாக அல்லது முழுவதும்அற்றுப்போய் விட்டதாக மாறக் காண்பீர்கள்.…

January

ஐனவரி 3

எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைகளுக்கும், பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாகமெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் (ஆதி.33:14). யாக்கோபு தன் மந்தைகளின் கால்நடைகளுக்கும், பிள்ளைகளையும் குறித்த இந்தச் சித்திரம் கரிசனையைஎவ்வளவு ஆழமாய்க் காட்டுகிறது. ஒரு தினமேனும் அவர்களின் சக்திக்கு மிஞ்சி விரட்டப்படஅவனுக்கு சம்மதம் இல்லை. ஏசாவைப்போன்ற பலசாலி எதிர்பார்க்கக்கூடிய அத்துணை வேகத்தில்அல்ல, அவர்களின் பலத்துக்கு தக்கபடியே அவன் அவர்களை நடத்த விரும்புகிறான். ஒருநாளில்எவ்வளவு தூரந்தான் செல்லக்கூடும் என்பதைத் திட்டமாய் அறிந்திருக்கிறான். அதைமுக்கியமாக மனதில்கொண்டே தன் பிரயாண ஒழுங்குகளைச் செய்தான். அநேக…

January

ஐனவரி 2

உயர உயரச் சுற்றிலும் சுற்றுக் கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றி சுற்றி அகலம் வர வர அதிகமாயிருந்தது. ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலை வழியாய் மேல் நிலைக்கு ஏறும் வழியிருந்தது (எசேக்.41:7). இன்னும் முன்னேறிச் செல்க உன் பாதை இன்று அதற்காக ஜெபிக்கிறேன் ஆண்டுகள் செல்லும் காலம் மறையும் பருவங்கள் மாறிப்போகும். இன்னும் மேல் நோக்க இவ்வாண்டிலும் இன்னும் உன் பதை அறியாதே பின்னும் விடாது மேல் நோக்கியே செல்க…