January

ஐனவரி 21

அவைகளில் ஒன்றையும் குறித்து கவலைப்படேன் (அப்.20:24). எபிரோனில் தாவீது முடிசூட்டப்பட்டவுடன் பெலிஸ்தர் அனைவரும் தாவீதைத் தேடி வந்தார்கள் என்று சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம் (2.சாமு.5:17). கர்த்தரிடமிருந்து விசேஷமாக ஏதாவது ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது சாத்தான் நம்மைத் தேடிவருகிறான். நாம் கர்த்தருக்காக செய்யும் எந்த ஊழியத்தின் ஆரம்பத்திலும், சத்துரு நம்மைச் சந்தித்தால் அது இரட்சிப்புக்கு முன் அடையாளம் என்று எண்ணி, இரட்டிப்பான ஆசீர்வாதம், வல்லமை, வெற்றி, இவைகளைக் கொடுக்கும்படி தேவனை வேண்டுவோமாக. சக்தி எதிர்ப்பினால் உண்டாக்கப்படுகிறது. வெடிக்கும் சக்தி, எதிர்ப்பைத்தாண்டிச்…

January

ஐனவரி 20

நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம். முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும் (பிர.7:3). கர்த்தரின் கிருபையினால் துக்கம் வரும்பொழுது அது நமது ஜீவியத்திற்கு ஏராளமான நன்மையைத் தருகிறது. துக்கம் இருதயத்தின் ஆழத்தைத் தெரியப்படுத்தி, இதுவரை மறைந்திருந்த ஊழியம் செய்யும் தன்மையை வெளிக்கொண்டுவருகிறது. அற்ப சந்தோஷத்தை விரும்புகிவர்களிடம் ஆழமில்லை. அவர்களுடைய இயற்கையிலுள்ள அற்பத்தனத்தை அவர்கள் அறிவார்கள். நமக்குண்டாகும் துக்கங்கள் இருதயத்திலிருந்து நற்கனியுண்டாக்க அதன் அடி மண்ணைக் கிளப்பி உழும் தேவனுடைய கரத்திலுள்ள ஏர்களாகும். நாம் ஒருபோதும் பாவம் செய்யாதவர்களாக உன்னத நிலையில்…

January

ஐனவரி 19

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் (லூக்.18:1). எறும்பினிடம் செல். தாமர்லேன் என்பவர் தன் இளவயதில் நடந்த ஒரு விஷயத்தைத் தன் சிநேகிதருக்கு சொல்வது வழக்கம். நான் ஒருமுறை சத்துருவிடமிருந்து தப்ப ஓர் இடிந்த கட்டடத்தில் அடைக்கலம் புகவேண்டியதாயிற்று. நான் அவ்விடத்தில் அநேக மணி நேரம் தனித்து உட்கார்ந்தேன். என் நம்பிக்கையற்ற நிலைமையை எண்ணி வருந்துவதை மாற்றத் தன்னைவிட பெரிய தானியத்தை இழுத்துக்கொண்டு, உயர்ந்த சுவரின்மேல் ஏறின ஓர் எறும்பைக் கவனித்தேன். அது தன் இலக்கு நிறைவேற எத்தனை முறை…

January

ஐனவரி 18

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2.கொரி.2:14). வெளித்தோற்றத்திற்குத் தோல்வியாகக் காணப்படுபவைகளிலிருந்தே கர்த்தர் சிறந்த வெற்றியைப் பெறுகிறார். அநேக முறைகளில் சத்துரு சிறிது காலம் மேற்கொள்ளுகிறான். கர்த்தரே அப்படிப் காணப்படச் செய்கிறார். சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி துன்மார்க்கனின் வழிகளைத் தலை கீழாக மாறச் செய்கிறார். இவ்விதமாக நம்மைச் சிறந்த வெற்றியடையச் செய்கிறார். தொடக்கத்தில் சத்துரு பார்வைக்கு ஜெயம் பெறுவதுபோல் இல்லாவிட்டால் நாம் இவ்வளவு சிறந்த வெற்றியை அடையமாட்டோம். எபிரெய வாலிபர்கள் மூவர் எரிகிற அக்கினியில்…

January

ஐனவரி 17

தானியேலே! ஜீவனுள்ள தேவனுடைய தாசனே! நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா (தானி.6:20). ஜீவனுள்ள தேவன் என்ற வார்த்தைகளை வேத புத்தகத்தில் எத்தனைமுறை வாசிக்கிறோம்? ஆனால் அதைத்தான் நாம் அடிக்கடி மறந்துபோகிறோம். ஜீவனுள்ள தேவன் என்று எழுதியிருக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால் நம்முடைய அன்றாடக வாழ்க்கையில் அதை மறந்துவிடுவதுபோல் வேறெதையும் மறப்பதில்லை. மூவாயிரம் அல்லது நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன் அவர் எப்படியிருந்தாரோ, அப்படியே இப்பொழுதும் மாறாமல் இராஜரீகம் செய்கிறார். அவரை நேசித்துத்…

January

ஐனவரி 16

அப்பொழுது பலத்த சுழல் காற்று உண்டாகி….. (மாற்.4:37). ஜீவியத்தில் சுழல் காற்றுகள் சில திடீரென வருகின்றன. ஒரு பெரிய துக்கம், மிகுந்த ஏமாற்றம், கீழே அமிழ்த்தும் தோல்வி. இவைபோன்றவை மெதுவாக வருகின்றன. தொடக்கத்தில் ஒரு மனிதனின் கையளவு மட்டுமே எனத்தோன்றுகிற அற்பமான துன்பம் ஆகாயத்தை மூடுமளவு பரவி நம்மை நிலைகுலையச் செய்யும். ஆயினும் இந்தச் சுழல் காற்றில்தான் தேவன் நம்மைத் தம் சேவைக்கு ஆயத்தப்படுத்துகிறார். தேவனுக்கு ஒரு தேக்கு மரம் தேவையாயிருக்கும்போது, அதை சுழல் காற்று வீசி,…

January

ஐனவரி 15

அன்று ராத்திரியில் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி…. (ஆதி.26:24) ஈசாக்கு பெயர்செபாவுக்குப்போன அன்றிரவே தேவன் அவனுக்குத் தரிசனமானார். அத்தரிசனம் தற்செயலாகக் கிடைத்ததென்று நீ எண்ணுகிறாயா? அது வேறு எந்த இரவிலும் நடந்திருக்கலாம் என்று நினைக்கிறாயா? அப்படியானால் நீ எண்ணவது தவறு. ஈசாக்கு பெயர்செபாவுக்குச் சென்ற அன்று இரவில் அவர் வெளிப்படுவானேன்? ஏனென்றால் அன்றிரவுதான் அவன் துன்பப்பட்டான். அற்பக் கிணறுகளின் உரிமையைக் குறித்து அடுத்தடுத்துப் பன்முறை சின்னஞ்சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. சிறு கவலைகள் அடிக்கடி ஏற்படும்பொழுது அது அதிகக் கவலையைப்…

January

ஐனவரி 14

அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு…. (யோ.10:4) இது நமக்கும் அவருக்கும் கசப்பான வேலை. புறப்பட்டுப்போவது நமக்குக் கசப்பு. நமக்கு வேதனை உண்டாகச் செய்வது தேவனுக்கு கசப்பு. ஆனால் வேதனை கொடுக்கப்படவேண்டியது அவசியம். எப்பொழுதும், சந்தோஷமான சௌகரியமான இடத்திலேயே தங்கிவிடுவது நம்முடைய நல்வாழ்விற்கு ஏற்றதல்ல. ஆகையால் அவர் நம்மை வெளியே விடுகிறார். ஆடுகள் தொழுவத்தை விட்டுச்சென்று மலைச்சரிவுகளில் அலைந்து திரிவதாலேயே பலம் பெறுகின்றன. மக்கள் வீட்டைவிட்டு சென்று வயலில் அறுவடை செய்யவில்லையெனில் தானியங்கள் அழிந்துவிடும். நாம் செல்லவேண்டுமென்று…

January

ஐனவரி 13

இவை யாவற்றிலும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம் (ரோ.8:37). இதுவே வெற்றியைக் காட்டிலும் பெரிது. நாம் தோல்வியினின்றும், சேதத்தினின்றும் தப்பித்துக் கொண்டது மாத்திரமல்ல, நம் சத்துருக்களை அழித்து உச்சிதமான கொள்ளைப் பொருள்களைப் பெற்று, இந்தப் போராட்டம் வந்ததற்காகக் கர்த்தரைத் துதிக்கக்கூடியவர்களாயிருக்கிறோம். எப்படி நாம் வெற்றி வீரருக்கு மேலாவோம்? இந்தப் போராட்டத்தினால் ஆவிக்குரிய சிட்சை பெறுகிறோம். அது நமது விசுவாசத்தைப் பெலப்படுத்தி ஆவிக்குரிய நற்குணங்களை நிலைநாட்டுகிறது. நம்மை ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒருமுகப்படுத்தி நிலைநாட்டச் சோதனைகள் அவசியம். அவை…

January

ஐனவரி 12

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்பொது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக்.1:2-3). தேவன் தம் ஜனத்தைப் பாதுகாக்க அவர்களைச் சுற்றி ஒரு வேலியை ஏற்படுத்துகிறார். ஆனால் அவர்கள் அதைத் தவறாக அர்த்தப்படுத்தி அவருடைய செயலை அறியாதிருக்கிறார்கள். யோபினுடைய அனுபவமும் இதுவே (யோபு 3:23). ஆனால் சாத்தான் அந்த வேலியின் உபயோகத்தை அறிந்திருந்தான் (யோபு 1:10). துன்பங்களாகிய இலைகள் ஒளியை ஓரளவு மறைத்தாலும் அவற்றினிடையே ஒளிவர வழியுண்டு.…