பெப்ரவரி 21
கர்த்தரை நோக்கிஅமர்ந்து, அவருக்குக் காத்திரு (சங்.37:7). நீ திரும்பத் திரும்பஜெபித்து, கர்த்தருக்குக் காத்திருந்தும், இன்னும் நீ ஒரு பதிலையும் காணவில்லையா? நீஒன்றும் நடக்கக் காணாததால் ஓய்ந்துபோனாயோ? நீ எல்லாவற்றையும் வீண் என்றுவிட்டுவிடும் தறுவாயிலிருக்கிறாயா? நீ ஒருவேளை சரியான முறையில் காத்திராதிருக்கலாம்.இது உன்னைச் சரியான இடத்திலிருந்து எடுத்து அவர் உன்னைச் சந்திக்கும் இடத்தில்கொண்டுபோய்ச் சேர்க்கலாம். பொறுமையாய்க் காத்திரு(ரோ.8:25). பொறுமை கவலையைப் போக்குகிறது. அவர் வருவேன் என்று சொன்னார். அவரின்வாக்கு அவர் பிரசன்னத்திற்குச் சமம். பொறுமை உன் கண்ணீரைத் துடைக்கிறது.…