February

பெப்ரவரி 19

கனி கொடுக்கிற கொடிஎதுவோ, அது அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி அதைச் சுத்தம் பண்ணுகிறார் (யோ.15:2).

தன்னையே குறியாக வைத்துவந்த அநேக உபத்திரவங்களைக்கண்டு ஒரு கர்த்தருடைய பிள்ளை மலைத்துப் போனாள். இலையுதிர்காலத்தில் அப்பெண் ஒரு திராட்சத் தோட்டத்தைக் கடந்து சென்றாள். அந்தத் தோட்டம்சுத்தம் செய்யப்படாமல் கொடிகளில் இலைகள் நிறைந்து அவ்விடம் முழுவதும் கவனிக்கப்படாமல்பாழாய்க் கிடப்பதையும் கண்டாள். அப்போது தெய்வீகத் தோட்டக்காரனாகிய தேவன்அவளுக்கு ஓர் உண்மையைத் தெரிவித்தார். அதை அவள் மற்றவர்களுக்குக் கூற விரும்புகிறாள்.

என் அருமைப் பிள்ளையே,உன் ஜீவியத்தில் கஷ்டங்கள் அடுத்தடுத்து வருவதைக் குறித்து மலைத்துள்ளாயா? அந்தத்திராட்சத் தோட்டத்தைப் பார்த்து நீ ஒரு பாடம் கற்றுக்கொள். திராட்சத்தோட்டத்திலிருந்து அவ்வருடம் ஒரு பயனும் கிடையாது என்று காண்பதினால், தோட்டக்காரன்அதை வெட்டாமலும், சுத்திகரியாமலும், கொத்திவிடாமலும், களை எடுக்காமலும்விட்டுவிடுகிறான். அதன் கனிதரும் காலம் கடந்துபோயிற்று. மேலும் பாடுபடுவதால் பயனில்லைஎன்பதால் அது சும்மா விட்டுவிடப்பட்டது. பயனற்ற ஜீவியத்திற்குப் பாடு கிடையாது. இச்சத்தியத்தைஅறிந்தபின் நான் உன்னைச் சுத்திகரிப்பதை விட்டுவிட விரும்புகிறாயா? நான் உன்னைக்கஷ்டப்படுத்தாது விட்டுவிடட்டுமா என்பதே அச்செய்தி. இச்செய்தியால் ஆறுதலடைந்த மனம்உபாதைகள் நீங்க வேண்டாம் என்று சொல்லிற்று.

கனி கொடுக்கும்கொடியே கத்திக்கு இரையாகும்

கத்தியால்வெட்டப்பட்டே அது புத்துயிர் பெறும்

துளிர்க்கும் ஒவ்வொருதுளிரும் வெட்டப்பட்டாலும்

துளிர்க்கும் இலையும்,பற்று நரம்பும் அழிக்கப்படினும்

உன் ஆசையும் கனவும்உன் ஒவ்வொரு நம்பிக்கையும்

மாண்டுபோயினும்கர்த்தரின் அன்பின் கரம்

இதைச் செய்தது என்றுமகிழ்ந்திரு

வெட்டினாலும்உடைத்தாலும்

முன்பு சிறிது கனிகொடுத்த நீ

இன்னும் அதிகப் பயன்தரவே

இவை யாவும்செய்யப்பட்டன.