February

பெப்ரவரி 21

கர்த்தரை நோக்கிஅமர்ந்து, அவருக்குக் காத்திரு (சங்.37:7).

நீ திரும்பத் திரும்பஜெபித்து, கர்த்தருக்குக் காத்திருந்தும், இன்னும் நீ ஒரு பதிலையும் காணவில்லையா? நீஒன்றும் நடக்கக் காணாததால் ஓய்ந்துபோனாயோ? நீ எல்லாவற்றையும் வீண் என்றுவிட்டுவிடும் தறுவாயிலிருக்கிறாயா? நீ ஒருவேளை சரியான முறையில் காத்திராதிருக்கலாம்.இது உன்னைச் சரியான இடத்திலிருந்து எடுத்து அவர் உன்னைச் சந்திக்கும் இடத்தில்கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

பொறுமையாய்க் காத்திரு(ரோ.8:25). பொறுமை கவலையைப் போக்குகிறது. அவர் வருவேன் என்று சொன்னார். அவரின்வாக்கு அவர் பிரசன்னத்திற்குச் சமம். பொறுமை உன் கண்ணீரைத் துடைக்கிறது. ஏன் விசனமாய்,நம்பிக்கையற்றிருக்கவேண்டும்? உன் தேவை உனக்குத் தெரிவதைவிட அவருக்கு நன்றாய்த்தெரியும். அவற்றிலிருந்து இன்னும் அதிகமான மகிமை கொண்டுவருவதே அவருடைய நோக்கம்.பொறுமை சுயமாய் வேலை செய்வதை நீக்குகிறது. நமப்பிக்கையே அவர் உன்னிடம் விரும்பும்காரியம். (யோ.6:29). நீ நம்பும்போது யாவும் நலம் என்று காண்பாய். பொறுமை தேவையைப்போக்குகிறது. நீ விரும்பும் காரியம் வாய்க்கவேண்டும் என்னும் ஆசை, அக்காரியம்கிடைப்பதில் கர்த்தருடைய சித்தம் நிறைவேறவேண்டும் என்ற ஆசையை விடப் பலமாயிருக்கலாம்.

பொறுமைபலவீனப்படுதலைப்போக்குகிறது. கர்த்தர் தாமதம் செய்வதில்லை. அன்றி, அக்காலங்களில்உனக்கு அதிக ஆதரவு தேடி உன்னையும் ஆயத்தமாக்குகிறார். பொறுமை நிலைதடுமாறுதலைத் தடுக்கும். நான் காலூன்றி நிற்கும்படி செய்யும் (தானி.8:28). கர்த்தரின் அஸ்திபாரங்கள்உறுதியாயிருக்கும். அவருடைய பொறுமை நமக்குள் இருக்கும்போது, நாம் காத்திருக்கும்போதுஉறுதியாயிருப்போம்.

பொறுமையாயிருக்கும்போதுநாம் பிரார்த்தனை செய்வோம். சில சமயங்களில் பொறுமையினால் நீடியசாந்தத்தோடும்மகிழ்ச்சியோடும் இருக்கிறோம். அதுவே சிறந்த தன்மையாய் இருக்கிறது (கொலோ.1:11).பொறுமையானது மேற்கூறிய எல்லா வகையிலும், பூரணக்கிரியை செய்யக்கடவது (யாத்.1:4).நீங்கள் பொறுமையாய்க் காத்திருக்iகியல் அதிகம் பெற்றுக்கொள்வீர்கள்.

உள்ளான பாடம்படிக்கும்படி

நீதியினூடே சென்றாலும்,

அதன்றி வேறேவழியில்லை

பொறுமை பூரணக்கிரியை செய்யட்டும்.