மயக்கம் நிறைந்த கண்கள்
2025 மார்ச் 13 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:18 “எலிசா கர்த்தரை நோக்கி; இந்த ஜனங்களுக்குக் கண் மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்”(வச.18). தன்னுடைய வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபித்த எலிசா, இப்பொழுது எதிரிகளின் கண்களில் மயக்கம் உண்டாகும்படி ஜெபித்தான். இந்த ஜெபத்தையும் கர்த்தர் கேட்டருளினார். இந்த உலகத்தில் நம்முடைய எதிரிகள் எத்தனை சக்திவாய்ந்தவர்களாக இருந்தாலும், தேவனுடைய வல்லமைக்கும், அவருடைய யதார்த்தத்திற்கும் குருடர்களாகவே இருக்கிறார்கள். இவர்களால் ஒருபோதும் தேவனுடைய…