எஜமானனைப் புரிந்துகொள்ளாத வேலைக்காரன்
2025 மார்ச் 3 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:20-23 “தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்”(வச. 20). பெரிய செல்வந்தனும், செல்வாக்குமிக்கவனுமாகிய நாகமானிடமிருந்து எலிசா எதையும் பெற்றுக் கொள்ளாததைக் கண்ட கேயாசி மிகவும் அதிர்ச்சியடைந்தான். கூடவே இருந்தும் தன் குருநாதரின் சிந்தை அறியாத சீடனாகவே கேயாசி காணப்பட்டது ஆச்சரியமே. பல தருணங்களில் நம்முடைய எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின்…