March

மனசாட்சியில் தெளிவாயிருத்தல்

2025 மார்ச் 2 (வேத பகுதி) 2 ராஜாக்கள் 5,18 முதல் 19 வரை  “ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக”(வசனம் 18). நாகமான் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தான். “இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிட வேண்டும்”  (வசனம் 18) என்பது முதலாவது கோரிக்கை. இரண்டாவது, “என் ஆண்டவன் (அரசன்) பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணிய வேண்டியதாகும்”…

March

மெய்யான மனமாற்றத்தை வெளிப்படுத்துதல்

2025 மார்ச் 1 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,17)  “அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை”(வசனம் 17). நாகமான் தன் நாட்டுக்கு எடுத்துச் செல்லும்படி இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கோரிக்கை வைத்தான் (வசனம் 17). முன்பு யோர்தானில்…

February

பண ஆசைக்கு விலகியிருத்தல்

2025 பிப்ரவரி 29 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,16)  “அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்”(வசனம் 16). தனக்குச் சுகங்கொடுத்த கர்த்தருடைய ஊழியக்காரனை பொருளாதார உதவியினால் தாங்க வேண்டும் என்று நாகமான் தீர்மானித்தது நல்லதொரு செயல்தான். ஆயினும் எலிசாவோ அதற்குச் சிறிதளவேனும் இடங்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய தொகையேனும் அவன் வாங்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.…

February

இரட்சிப்பின் விளைவுகள்

2025 பிப்ரவரி 28 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5,15  “அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன் … என்றான்”(வசனம் 15). நாகமான் சுகம் பெற்றபின் எலிசாவைச் சந்தித்து நன்றி சொல்லும்படி திரும்பி வந்தான். குணமாக்கப்பட்ட பத்துக் குஷ்டரோகிகளில் திரும்பி வந்து ஆண்டவருக்கு நன்றி சொன்ன ஒரேயொருவனைப் போல நாகமான் இருந்தான். தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய…

February

இரட்சிப்பு என்னும் மறுபிறப்பு

2025 பிப்ரவரி 27 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,14)  “அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்”(வசனம் 14). நாகமான் தன் ஊழியக்காரர்களின் வார்த்தையைக் கேட்டு, யோர்தானுக்குச் சென்று எலிசா சொன்னபடியே ஏழு தடவை நீரில் மூழ்கினான். நீரில் மூழ்கும் ஒவ்வொரு தடவையும் அவனுடைய விசுவாசத்தின் படிக்கற்களாக உள்ளன. அவன் ஒவ்வொரு தடவை மூழ்கி எழுந்திருக்கும்போதும் தொழுநோய் சுகமாகிவிட்டதா என்று…

February

தாழ்மையால் வரும் ஆசீர்வாதம்

2025 பிப்ரவரி 26 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,10 முதல் 13 வரை)  “அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்”(வசனம் 10). நாகமான் தன் பரிவாரங்களோடு எலிசாவைத் தேடிவந்தான். ஆனால் எலிசாவோ அவனை நேரடியாகச் சந்திக்காமல், தன் உதவியாளரை அனுப்பி, யோர்தான் ஆற்றில் ஏழுதரம் மூழ்கும்படி சொல்லச் சொன்னான். ஒரு படைத்தளபதியாக மிகுந்த கனத்தோடும்…

February

சிறப்பான அழைப்பு

2025 பிப்ரவரி 25 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,8 -9)  “அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்”(வசனம் 9). இஸ்ரவேலின் அரசன் தனது இயலாமையால் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான். தொழு நோயைக் குணப்படுத்தக்கூடிய வல்லமை தேவனுக்கு மட்டுமே உண்டு என்று அறிந்துகொண்டவனால், அந்தத் தேவனுடன் உறவை உண்டாக்கிக்கொள்ள முயலாமல் போனது அவனுடைய மனக்கடினத்தையே காட்டுகிறது. நமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் இடைவெளி உண்டாகிற போது அந்த அறிவைப் பயன்படுத்தி தேவனோடுள்ள உறவை…

February

முறிந்துபோன உறவு

2025 பிப்ரவரி 24 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,4 முதல் 7 வரை)  “அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான்”(வசனம் 4). இஸ்ரவேல் நாட்டு சிறு பெண்ணின் சொல்லைக் கேட்டு, நாகமான் தன் மன்னனிடத்தில் அறிவித்தான். மன்னனும் சந்தோஷமடைந்து நிருபத்தோடும், வெகுமதிகளோடும் இஸ்ரவேல் நாட்டின் அரசனிடத்தில் அனுப்பினான். இஸ்ரவேலின் ராஜா நிருபத்தைப் படித்து தன் ஆடையைக் கிழித்துக்கொண்டான். தன்னால் உதவ முடியாது என்று…

February

ஒரு சிறிய மிஷனெரி

2025 பிப்ரவரி 23 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,2 முதல் 3 வரை)  “சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்”(வசனம் 2). நாகமான் என்னும் மகா பராக்கிரமசாலியைப் பற்றி சொல்கிற இந்த அதிகாரம், இஸ்ரவேல் நாட்டிலிருந்து சிறைப்பிடிக்கப்பட்டு சிரியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு சிறு பெண்ணைப் பற்றியும் நமக்கு அறியத் தருகிறது. இவள் மெய்யான தேவனாகிய கர்த்தரை விசுவாசிக்கிற பலவீனமான ஒரு சிறு…

February

படரும் பாவங்கள்

2025 பிப்ரவரி 22 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 5,1)  “மகா பராக்கிரமசாலியாகிய அவனோ (நாகமானோ) குஷ்டரோகியாயிருந்தான்” (வசனம் 1). நாகமான் மகா பராக்கிரமசாலியாக இருந்தாலும் அவனைப் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை இருந்தது. அவன் ஒரு தொழுநோயாளி. தொழுநோயால் அவனுடைய உடல் பாதிக்கப்பட்டிருந்தது. அவனுக்குப் புகழ் உண்டாக்கத்தக்க பல நல்ல காரியங்கள் இருந்தன. அவன் வெற்றிமேல் வெற்றி பெற்றவனாயிருந்தான். ஆயினும் அவனாலும் தோற்கடிக்க முடியாத ஒரு எதிரியாக இந்தத் தொழுநோய் இருந்தது. இது படிப்படியாக அவனை அழிக்கக்கூடிய…