முதல் கேள்வி
(வேதபகுதி: ஆதியாகமம் 3:7-13) “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (வச. 9). முதல் தம்பதியினரின் முதல் பாவம் பல விளைவுகளை உண்டாக்கியது. அவர்கள் கண்கள் திறக்கப்பட்டதனால் தங்களை நிர்வாணிகள் என்று அறிந்துகொண்டார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் நிர்வாணிகளாகவே இருந்தார்கள், ஆயினும் அவர்கள் வெட்கப்படாமல் இருந்தார்கள். அப்பொழுது பாவம் வந்தபோதோ, அவர்கள் தங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள், குற்ற மனசாட்சி ஏற்பட்டது, அவர்கள் வெட்கமும், அவமானமும் அடைந்தார்கள். இதை மூடி மறைக்க தாங்களாகவே…