நன்றி கூறுதலின் சுகந்த வாசனை
(வேதபகுதி: ஆதியாகமம் 8:1-22) “சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; … நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.” (வச. 21). நோவா பேழையை விட்டு வெளியேறிய பிறகு முதலாவது செய்த காரியம் கர்த்தருக்கு நன்றி செலுத்தியதாகும். இந்த மனிதனுக்கு தேவனைக் கனப்படுத்துவது என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு அவற்றைப் பலியிட்டு…