Tamil Christian Assembly

Genesis ExodusLeviticusNumbersDeuteronomyJoshuaJudgesRuth1.Samuel2.Samuel1.Kings2.King1.Chronicles2.ChroniclesEzraNehemiahEstherJobPsalmsProverbsEcclesiastesSongs of SalomonIsaiahJeremiahLamentationsEzekielDanielHoseaJoelAmosObadiahJonahMichaNahumHabakkukZephaniahHaggaiZechariahMalachiMatthewMarkLukeJohnActsRomans1.Corinthians2.CorinthiansGalatiansEphesiansPhilippiansColossians1.Thessalonians2.Thessalonians1.Timothy2.TimothyTitusPhilemonHebrewsJames1.Peter2.Peter1.John2.John3.JohnJudeRevelation

Home


வேதாகம நூல்கள்

லேவியராகமம்

 

    

லேவியராகமம் எபிரேய பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பிலிருந்து இப்பெயரைப் பெற்றது. யூத கோத்திரத்தில் தேவனுடைய பணிக்காக பிரித்தெடுக்கப்பட்ட லேவியர் கடைபிடிக்க வேண்டிய மற்றும் செயல்படவேண்டிய முறைகளைப்பற்றி இப்புத்தகம் கூறுவதால் இப்பெயர் பெற்றது.

ஆசிரியர்

ஆதியாகமம், யாத்திராகமம் போலவே இப்புத்தகமும் மோசே எழுதினார் என பெரும்பான்மையோரால் நம்பப்படுகிறது.

காலம்

சுமார் கி.மு. 1446 முதல் 1406 கி.மு. வரை இஸ்ரவேலர் சீன் வனாத்திரத்தில் ஆண்டவரோடு ஆராதனை செய்ய சொல்லப்பட்ட முறைகளையே இப்புத்தகத்தில் நாம் காண்கிறோம். இக்கால கடைசியில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கக்கூடும். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில்; இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

நோக்கமும் செய்தியும்

லேவியராகமத்தின் மையக்கருத்து பரிசுத்தமாகும் (11:44) இறைவன் பரிசுத்தமானவர், எனவே மக்களும் பரிசுத்தத்தோடு தொழுதுகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. கர்த்தரின் உறவிலிருந்து பிரிந்து வாழும் மனிதனின் வாழ்க்கையை சீர்படுத்தி, கர்த்தரோடு சமாதானம் செய்து குற்றத்தை நிவர்த்தி செய்து அவரை ஆராதிக்கவும், சமுதாய ஒற்றுமையை ஏர்படுத்தவும், கர்த்தர் தந்த ஆசிர்வாதங்களை நினைவுகூர்ந்து ஸ்தோத்திரம் செலுத்தவும் இஸ்ரவேலருக்கு வழி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பலி என்பது மனிதனால் பயன்படுத்தப்பட்டது. பலி செலுத்தப்பட வேண்டிய விலங்கும் அதனுடைய நேர்த்தியும் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராதனை காரியங்களும், பலிகளும் செலுத்தவேண்டியவர்களாக ஏற்படுத்தப்பட்ட ஆசாரியர்களின் கடமைகளும் பணிகளும் விளக்கப்பட்டுள்ளது இஸ்ரவேலர் தங்களை தூய்மையாக காத்துக்கொள்ள செய்யவேண்டிய காரியங்களும் விவரிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்களும், இல்லாவிட்டால் கிடைக்கும் சாபங்களும் எழுதப்பட்டுள்ளன.
 

பிரதான பக்கம்