Tamil Christian Assembly

Genesis ExodusLeviticusNumbersDeuteronomyJoshuaJudgesRuth1.Samuel2.Samuel1.Kings2.King1.Chronicles2.ChroniclesEzraNehemiahEstherJobPsalmsProverbsEcclesiastesSongs of SalomonIsaiahJeremiahLamentationsEzekielDanielHoseaJoelAmosObadiahJonahMichaNahumHabakkukZephaniahHaggaiZechariahMalachiMatthewMarkLukeJohnActsRomans1.Corinthians2.CorinthiansGalatiansEphesiansPhilippiansColossians1.Thessalonians2.Thessalonians1.Timothy2.TimothyTitusPhilemonHebrewsJames1.Peter2.Peter1.John2.John3.JohnJudeRevelation

Home


வேதாகம நூல்கள்

யாத்திராகமம்

 

 

பெயர் விளக்கம்

யாத்திராகமம் என்ற கிரேக்க சொல்லுக்கு "புறப்பாடு" அல்லது "வெளிவழி" எனப்பொருள் (எபிரேயர் 11:22) ஆதியாகமத்தில் காணப்படும் எல்லா தோல்விகளுக்கும் விடுதலையாக, எழுச்சிமிக்கதாக, இறைவன் மனிதனை காப்பதற்கு செயலாற்றுபவராக, மீட்பின் பணியைக் கூறுகிறது.

ஆசிரியர்

யாத்திராகம புத்தகத்தின் ஆசிரியர் குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும் யாத்திராகமத்தில் உள்ள பல பகுதிகள் மோசே எழுதியதாக உறுதிப்படுகிறது. (17:14 24:4 34:27). மேலும் யோசுவா 8;:30ல் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி என குறிப்பிடுகிறதை வாசிக்கிறோம். புதிய ஏற்பாட்டிலும் இதற்கான குறிப்புகளைக் காணலாம். (உதா. மாற்கு 7:10, 12:26, லூக்கா 2:22-23)

காலம்

உலக வரலாறு, எகிப்து சாம்ராஜ்யத்தின் மன்னன் பார்வோன் மூன்றாவது துத்மஸ் மற்றும் அவனது மகன் இரண்டாவது அமுன்ஹோதேப் காலத்தில் யூத மக்கள் அடிமைப்படுத்தப்பட்டதாக கூறுகிறது. இதைத்தொடர்ந்து வேத குறிப்பின்படி யாத் 1:11 ல் ராமசேஸ் என்னும் பெயர்கொண்ட பார்வோன் முதலாம் சேத்தி மற்றும் அவனுடைய மகன் இரண்டாம் ராமசேஸ் காலத்தில் இஸ்ர வேலர் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றனர். வருடமாகும். பாரம்பரிய குறிப்பின் அடிப்படையில் கி.மு. 1446 ஆகும். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில் இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

நோக்கமும் செய்தியும்

யாத்திராகமம் பழைய ஏற்பாட்டில் இரட்சிப்பின் மேன்மையைக் கூறுகிற முன் நூலாக இருக்கிறது. இந்நூல் இருளும் துக்கமும் நிறைந்த நிலையில் தொடங்குகிறது. இருந்தாலும் மகிமையில் முடிகிறது. இந்நூல் இறைவன் அடிமையாக்கிய தம் மக்களைத் தம் அன்பினால் மீட்பதற்கு எவ்வாறு இறங்கி வந்தார் என்று தொடங்கி விடுதலையாக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவர் எவ்வாறு இறங்கிவந்தார் என்று கூறி முடிகிறது.

யாத்திராகமத்தில் இறைவன், தன் பெயர் (யாத்திராகமம் 3:14) குணாதிசயங்கள், இரட்சிப்பு, சட்டம் (நியாயப்பிரமாணம்) தான் வழிபடப்படவேண்டிய முறை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். முதல் உடன்படிக்கையின் நடுவரான மோசே தெரிந்தெடுக்கப்படுதல், ஆசாரியத்துவத்தின் ஆரம்பம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைவன் வரலாற்றிற்கும் ஆண்டவராயிருந்து அற்புதங்களை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலருடைய துன்பங்கள் அல்லது எகிப்தியர் மீது வந்த வாதைகள் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டதே. பார்வோன், எகிப்தியர், இஸ்ரவேலர் அனைவரும் அவருடைய வல்லமையை கண்டனர். இறைவன் எகிப்திய தேவர்களுக்கெல்லாம் தேவன் என்பதை விளக்கும் புத்தகமாக இது அமைந்துள்ளது.

 

பிரதான பக்கம்