Tamil Christian Assembly

Genesis ExodusLeviticusNumbersDeuteronomyJoshuaJudgesRuth1.Samuel2.Samuel1.Kings2.King1.Chronicles2.ChroniclesEzraNehemiahEstherJobPsalmsProverbsEcclesiastesSongs of SalomonIsaiahJeremiahLamentationsEzekielDanielHoseaJoelAmosObadiahJonahMichaNahumHabakkukZephaniahHaggaiZechariahMalachiMatthewMarkLukeJohnActsRomans1.Corinthians2.CorinthiansGalatiansEphesiansPhilippiansColossians1.Thessalonians2.Thessalonians1.Timothy2.TimothyTitusPhilemonHebrewsJames1.Peter2.Peter1.John2.John3.JohnJudeRevelation

Home


வேதாகம நூல்கள்

ஆதியாகமம்

 

பெயர் விளக்கம்

எபிரேய மொழியில் ஆதியாகமம் 1:1 பெரேசித் (ஆதியிலே) என துவங்குகிறது. இதனுடைய பொருள் தொடக்கம். துவக்கமும் முடிவுமில்லாத இறைவனைத்தவிர மற்ற படைப்புகள் அனைத்தின் தொடக்கம் அல்லது ஆரம்பத்தை இப்புத்தகம் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. இதன் ஆங்கில பெயர் ஜெனிசிஸ் (Gensis) கிரேக்க வார்த்தையான ஜெனசாஸ் மூலம் உருப்பெற்றது.

ஆசிரியர் 

இப்புத்தகத்தின் குறிப்புகளிலிருந்து நான்கு விதமான பகுதிகள் அல்லது பிரிவுகள் (யெகோவா, ஏலோகிம், ஆசாரியர், உபபந்தம்) இணைத்திருப்பதை காணமுடிகிறது அதாவது நான்குவிதமான மூலங்கள் (Source) இப்புத்தகத்தை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை சற்று ஒன்றுக்கொன்று வேறுபாடானவை. இதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலின் ஆசிரியர் யார் என்பதைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் பொதுவாக மோசே இந்நூலை தொகுத்தவர் அல்லது எழுதியவர் என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.

காலம்

 உலகம் உருவான நாள்முதல் சுமார் கி.மு. 1800 ஆண்டுவரையுள்ள சம்பவங்களை ஆதியாகமம் தெரிவிக்கின்றது.

வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் மோசேயின் காலம் ஏறத்தாழ சரியாக கூறமுடியும். 1இராஜாக்களின் புத்தகத்தில் (6:1) சாலமோன் அரசாண்ட 4ம் வருடம், அதாவது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டுச் 480 வது வருடம் எருசலேம் தேவாலயக் கட்டடப்பணி ஆரம்பமானது. சாலமோன் நாலாவது ஆட்சி ஆண்டு சுமார் கிமு. 966. எனவே 1446 வது ஆண்டு மோசே வழிநடத்துதல் பணியை மேற்கொண்டார். இப்புத்தகத்தை மோசே எழுதியிருப்பாரானால் 40 வருட வனாந்திர வாழ்க்கையின் கடைசியில் இந்நூலை எழுதியிருக்ககலாம் எனக் கருதப்படுகிறது.

பின்னணி

ஆதியாகமம் 1-38 அதிகாரங்களில் காணப்படும் நாகரீகம், படைப்பு, வம்சவரலாறு, ஜலப்பிரளயம், புவியியல், மக்களின்-யாத்திரை, ஆடுமேய்த்தல், நிலம் சம்மந்தமான காரியங்கள் அகியவை மெசபட்டோமிய வாழ்க்கைக்கு மிக ஒத்துக் காணப்படுகிறது. இவற்றில் நடைபெற்ற பெரும்பான்மையான சம்பவங்கள் மெசபட்டோமியாவில் நடைபெற்றதாகவே காணப்படுகிறது. ஆசிரியர் மனிதனின் முதல் வீடான ஏதேன் தோட்டத்தை இப்பகுதியாகவே காண்பிக்கிறார். பாபேல் கோபுரம் கட்டப்பட்டதும், ஆபிரகாம் பிறந்த இடம், ஈசாக்குக் பெண்கொண்டது, யாக்கோபு 20 வருடங்களாக வாழ்ந்தது ஆகியவை இப்பகுதியை மையமாகக் கொண்டது.


39-50 அதிகாரங்கள் எகிப்திய பாரம்பரியத்தை விளக்கக்கூடியதாக அமைகிறது.

நோக்கமும் - செய்தியும்

ஆதியாகமம் படைப்பின் முழுவிபரத்தையும் தெளிவாக்குகிறது. தேவன் படைப்பின் காரணராகவும், படைப்பின் சிகரமாக மனிதனை தன்னுடைய சாயலின்படி படைத்ததையும், அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து உலகை ஆசீர்வதித்ததையும் தெரிவிக்கிறது. முதல் படைப்பான ஆதாம், ஏவாள் என்பவர்கள் கீழ்படியாமல் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து அதற்கு தன்டனையாக சாபத்தை பெற்றுக்கொண்டதையும் விளக்குகிறது. எனினும் இறைவனை செய்லாற்றுகிறவராகவே சித்தரிக்கிறது. இரட்சிப்பின் ஆரம்பமாக இறைவன் ஒரு நபரை, குடும்பத்தை வம்சத்தை தெரிந்து கொண்டு, உலகத்திற்கு ஆசீர்வாதத்தை கொடுக்க விரும்புவதை தெரிவிக்கிறது. பல கடவுள் வணக்கதிற்கு வழிதவறிய மக்களை ஒரு கடவுள் வணக்கத்திற்கு நேராக வழிநடத்தியதை விவரிக்கிறது.

ஆதியாகமத்தில் தொடக்கங்கள்
 
1. ஆதியாகமம் 1:1-25 உலகத்தின் தொடக்கம்
2. ஆதியாகமம் 1:26-2:25 மனித குலத்தின் தொடக்கம்
3. ஆதியாகமம் 3:1-7 பாவத்தின் தொடக்கம்
4. ஆதியாகமம் 3:8-24 இரட்சிப்பு உறுதிமொழியின் தொடக்கம்
5. ஆதியாகமம் 4:1-15 குடும்ப வாழ்வின் தொடக்கம்
6. ஆதியாகமம் 4:16-9:29 மனிதன் உண்டாக்கிய நாகரீகத்தின் தொடக்கம்
7. ஆதியாகமம் 10-11 உலக நாடுகளின் தொடக்கம்
8. ஆதியாகமம் 12-50 எபிரேய மக்களின் தொடக்கம்
   

 

பிரதான பக்கம்