May

மே 12

மே 12

விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும் (மாற்.9:23).

இவ் வசனத்தில் எல்லாம்என்று கூறப்படும் காரியம் எளிதில் கிடைப்பதல்ல. ஏனெனில் ஆண்டவர் எப்பொழுதும் நமக்குவிசுவாச வழியையே கற்றுத்தர விரும்புகிறார். விசுவாசத்தைப் பயிற்சிபெறுவதில்லவிசுவாசத்தைச் சோதிக்கும் சோதனைகளும் இடம் பெறவேண்டும். விசுவாசத்தின் கட்டுப்பாடுகள்,விசுவாசத்தின் வளர்ச்சியின் வெவ்வேறு படிகளில் வளர்ச்சி, விசுவாசத்தில் வெற்றி இவற்றிற்கும்பயிற்சி பெற இடம் இருக்கவேண்டும்.

விசுவாசத்தின்கட்டுப்பாடுகளின் மூலமாகவே ஏற்படுவது ஒழுக்கமுறை வளர்ச்சி. உமது வேண்டுதலை உமதுஆண்டவரிடத்தில் ஏறெடுத்து விட்டாய். ஆனால், பதில் வரவில்லை. நீ செய்யப்போவதென்ன?

இறைவாக்கினைநம்பிக்கொண்டே இரு. நீ சிந்திக்கும் காரியங்களினாலோ, காணும் காரியங்களினாலோ உன்நம்பிக்கை மாறிவிடவேண்டாம். இவ்வாறு நீ உறுதியாய் நிற்கையில், உனது ஆற்றலும் அனுபவமும்வளர்ச்சியடையம். உனது உறுதியினின்று நீ மாறாதிருத்தலுக்கும், இறைவாக்கினுக்குள்மாறுபாடாகத் தோன்றும் நிலையை நீ காணுகையில் உன் விசுவாசம், உன்னை எவ்வகையிலும்வலுவுள்ளவனாக்கும்.

அடிக்கடி ஆண்டவர் தமதுபதிலை வேண்டுமென்றே தாமதப்படுத்தகிறார். இத் தாமதமே உன் ஜெப த்திற்கான பதிலாக இருக்கும்.

வேதாகமத்தில் கூறப்பட்டஎல்லாச் சிறந்த மனிதரின் வாழக்கைகளிலும், ஆண்டவர் இவ்வகையிலேயேசெயலாற்றியிருக்கிறார். அபிரகாம், மோசே, எலியா, இவர்களெல்லாரும் ஆரம்பத்திலேயேமேன்மை பெற்றவர்களாயிருக்கவில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தின் கட்டுப் பாடுகள்நிறைந்த வளர்ச்சியினாலேயே மேன்மை பெற்றனர். அவ்வாறுதான் அவர்கள் தங்களுக்கெனஆயத்தப்படுத்தின இடங்களுக்கு ஏற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

ஆண்டவர் யோசேப்பைஎகிப்து நாட்டின் அரியணைக்கு ஏற்றவானக உருவாக்கப் பயிற்சி கொடுத்தார். யோசேப்பைப்பற்றி நாம் சங்கீதப் புத்தகத்தில் அவருடைய (கர்த்தருடைய) வசனம் அவரைப் புடமிட்டதுஎன்று வாசிக்கிறோம். கேவலாமான உணவும், கடினமான படுக்கையும் கொண்ட சிறைச்சாலையின்வாழ்க்கை யோசேப்பைப் புடமிடவில்லை. அருடைய இளவயதில் அவருடைய பிற்கால வளமானவாழ்வையும், மரியாதையையும்பற்றி அவருடைய இருதயத்தில் பேசப்பட்ட ஆண்டவருடைய வார்த்தைஅவரைப் புடமிட்டது. அவருடைய சகோதரரைக் காட்டிலும் அவர் மதிப்புபெறவேண்டியவர். இக்காரியம்எப்பொழுதும் அவருடைய மனதிலிருந்தது. ஆனால் அவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும்இது நிறைவோறாததுபோல் தோன்றியது. நியாயமாகத் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலைபெற்றாhகள். அநியாயமாய்ச் சிறையிலடைக்கப்பட்ட யோசேப்போ தனியனாகச் சிறையில்அவதிப்பட்டார்.

இந்த நேரத்தில் அவருடையஆன்மா சோதிக்கப்பட்டது. ஆனால், இதே நேரந்தான் அவருடைய ஆன்மீக வளர்ச்சிக்கானகாலமாயிற்று. அதனால்தான், விடுதலைச் செய்தி வந்தபொழுது யோசேப்பு மூர்க்கரான சகோதரரைஅன்புடனும் பரிவுடனும் ஒப்புரவுகொள்ளும் மென்மையான பணிக்கு ஆயத்தமாக்கப்பட்டிருந்தான்.

இதுபோன்ற அனுபவங்கள்எத்தகைய சித்திரவதைகளும் ஏற்படுத்த முடியாது. ஆண்டவர் கூறியிருந்தார். அனால் செய்யாதுதாமதித்தார். இது மிகவும் கடினமான நிலையே. ஆனால் இது நமக்கு ஆண்டவரைப்பற்றிய அறிவைத்தருகிற கட்டுப்பாடு. இது இல்லாவிட்டால் அவ்வறிவு நமக்குக் கிடைக்காது.