March

மார்ச் 30

இதோ, நெருப்பைக்கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள்அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின ஜுவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள்.என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும் (ஏசா.50:11).

தாங்கள் இருட்டில்நடந்துகொண்டிருந்து, தாங்களே வெளிச்சத்திற்கு வரப் பிரயாசப்படுகிறவர்களுக்கு இது ஒருகடுமையான எச்சரிக்கை. அவர்கள் நெருப்பைக் கொளுத்தி, அ;கினிப்பொறியால்சூழப்பட்டிருக்கிறவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன?

நாம் இருளில் இருக்கும்போது,தேவனை நம்பி அவரைச் சார்ந்திராமல் நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் சோதனையானது, அவர்நம்மைக் கைதூக்கிவிட இடங்கொடாமல் நாமே நம்மைக் கைதூக்கப் பிரயாசப்படுவது என்பதேஇதன் அர்த்தம். இயற்கையின் ஞானத்தைத் தேடுகிறோம். நம் சிநேகிதரின் ஆலோசனையைக்கேட்கிறோம். நமது அறிவினால் ஒரு மடிவுக்கு வர எத்தனிக்கிறோம். கர்த்தரால் வராத ஒருவிடுதலையை ஏற்றுக்கொள்ளச் சோதிக்கப்படுகிறோம்.

இவைகள் யாவும் நாம்கொளுத்திக்கொள்ளும் நெருப்பேயாகும். நம்மைச் சொரி மணலுக்குள் இழுத்துச் செல்லும்காட்டுத் தீபமாகும். கர்த்தர் நம்மை இந்த அக்கினி ஐ{வாலையில் நடக்கவிட்டுவிடுவார். அதனால் அதன் முடிவு துக்கமே.

அருமையானவர்களே! இருட்டானஇடத்தைவிட்டு, கர்த்தருடைய வேளையிலும் கர்த்தருடைய வழியிலுமேயன்றி வெளியேற முயற்சிசெய்யாதீர். உனக்கும் தேவையான படிப்பினைகளை நீ கற்றுக்கொள்ளவே, வேதனைகளின் காலம்ஏற்பட்டிருக்கிறது.

தகுந்த காலத்திற்குமுன்வரும் விடுதலை, உன் ஜீவியத்தில் தேவனின் கிருபையுள்ள கிரியையைத் தடுக்கிறது.நிலைமை பூராவையும் கர்த்தருக்கு ஒப்புவி. அவருடைய பிரசன்னம் இருக்கிற காலம்வரை இருளில்நடக்க மனதாயிரு. தனிமையாய் ஒளியில் நடப்பதைவிட, கர்த்தரோடு இருளில் நடப்பது நல்லதுஎன்பதை நினைத்துக்கொள்.

தேவனுடைய திட்டத்திலும்,அவருடைய சித்தத்திலும் நீ தலையிட்டுக்கொள்வதை விட்டுவிடு. அவருடையதில் ஏதாவதொன்றைநீ தொட்டால் அவருடைய கிரியையை நீ குலைக்கிறாய். கடிகாரத்தின் முள்களை நீ உனக்குஎற்றவாறு திருப்பிக் கொள்ளலாம். ஆனால் சரியான நேரத்தை மாற்ற உன்னால் முடியாது.கர்த்தரின் சித்தம் வெளிப்படுவதை நீ துரிதப்படுத்தலாம். ஆனால் அதனால் நீ கர்த்தரின் வேலைக்கு உதவியாயல்ல, தடையாகவே இருப்பாய். ஒரு ரோஜா மொட்டை நீ மலரச்செய்யலாம்.ஆனால் அதன் அழகை நீ குலைக்கிறாய், எல்லாவற்றையும் நீ அவரிடம் விட்டுவிடு. கையைக்கீழே போடு. உம் சித்தமே, என்னுடையதல்ல என்று சொல்.

அவர் வழி

நான் தங்க விரும்பியபோதுகர்த்தர் போகச் சொன்னார்

(காட்டில் இனிமையாயிருந்தது)

அதன் காரணத்தை அப்போதுநான் அறியவில்லை.

நான் போனபின்பு நான்முன்பு நின்ற பாதையின் குறுக்கே

ஒரு பாறை உருண்டு விழுந்தது.

நான் போக விரும்பியபோது அவர் தங்கச் சொன்னார்

உமது சித்தம் ஆகட்டும் என்றேன்.

ஒருநாள் காலையில்

நான் போயிருக்க வேண்டிய பாதையில்

தலை நசுங்கிக் கிடந்த நாகமொன்று இருந்தது.

என் முன்னால் உள்ள பாதையை நான் காணா விடினும்,

நான் காரணம் கேளேன்.

அவர் வழியில் நான் செல்வேன்.

எனக்குத் தெரியாவிடினும் இயேசு அறிவார்

பத்திரமான வழியை எனக்கென்று தெரிந்தெடுப்பார்.