March

மார்ச் 22

நாற்பது வருடம்சென்றபின்பு சீனாய் மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிறஅக்கினியிலே அவனுக்குத் தரிசனமானார். எகிப்திலிருந்து என் ஜனத்தின் உபத்திரவத்தை நான்பார்த்து அவர்கள் பெருமூச்சைக் கேட்டு அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன். ஆகையால் நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார் (அப்.7:30,34).

பெரிய ஊழியத்திற்காகவெகுகாலங் காத்திருக்க வேண்டியிருந்தது. கர்த்தர் தாமதிக்கும்போது அவர் செயலற்று இருப்பதில்லை.தம்முடைய அயுதங்களைத் தயார் செய்கிறார். அவர் நமது பயத்தை உறுதி பெறச் செய்கிறார்.குறிப்பிட்ட வேளையில் நாம் நம்முடைய வேலைக்கு ஆயத்தமாயிருப்போம். நசரேயனாகிய இயேசுகூடமுப்பது வருடம் தம் வேலையதை; துவக்குமுன் ஞானத்தில் வளர்ந்து வந்தார்.

தேவன் ஒருபோதும்ஆத்திரப்படார். யாரை அவர் அதிகமாய்ப் பயன்படுத்த விரும்புகிறாரோ, அவர்களோடு அநேகவருடங்களைச் செலவிடுகிறார். ஆயத்தப்படுத்தும் நாட்கள் அதிகம் என்றாவது, வெகு சுவையற்றவைஎன்றாவது அவர் ஒருபோதும் எண்ணுவதில்லை.

கஷ்டங்கள் ஏற்படும்பொழுதுபொறுக்க முடியாமலிருப்பது அவற்றின் கால அளவுதான். கடும் வேதனையும் சிறிது நேரம்தான்என்றால் பொறுத்திருக்கலாம். ஆனால் ஒரு துக்கம் பல ஆண்டுகளாக நீடித்திருந்தால்நாள்தோறும் அதை அனுபவிக்கும்பொழுது அதிலிருந்து விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்iயும்,நமக்கு இல்லாவிட்டால் நம்மால் அதைத் தாங்கமுடியாது. தேவனுடைய கிருபையில்லாவிட்டால்நமது உள்ளம் தளர்ந்து துன்பத்திலேயே ஆழ்ந்துபோகும். யோசேப்பு நீண்டகாலச் சோதனையைஅனுபவித்தான். நீடித்த வேதனை என்னும் நெருப்பால் கர்த்தர் தமது பாடங்களைச் சுட்டுமுத்திரையிடுகிறார். வெள்ளியைச் சுத்திகரித்துப் புடமிடுகிறவராக உட்காருவார். எவ்வளவு நேரம்வெள்ளி உலையிலிருக்க வேண்டுமென்று அவர் அறிவார். ஒரு கைதேர்ந்த பொற்கொல்லன்,பிரகாசிக்கும் இந்த இளகிய உலோகத்தில், தன் உருவம் தெரிந்ததும், நெருப்பைஎடுத்துவிடுகிறான். தேவனுடைய கரத்தின் நிழலில் மறைந்திருக்கும் அழகிய திட்டத்தின்பயனை இப்போது நாம் காணமுடியாதிருக்கலாம். ஆனால் விசுவாசத்தால் அங்கே அவர்சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் என்று நாம் அறிவோம். கர்த்தரை நம்புகிறவர்களுக்குச்சகலமும் நன்மைக்கேதுவாய் நடக்கிறது என்று நாம் குதூகலத்தோடு சொல்லும்வரை, அவர்சாந்தமாய்க் காத்திருக்கிறார். விடுதலையடைய நாம் ஆவலாய் எதிர்ப்பதைவிடயோசேப்பைப்போல் துக்கமாகிய பள்ளிக்கூடத்தில், எல்லா போதனைகளையும்,சரிவரக்கற்றுக்கொள்ள அதிக கவனமாயிருக்க வேண்டும்.

நாம் ஆயத்தமடைந்தவுடன்விடுதலை நிச்சயமாய் வரும். அனுபவித்த சோதனைகளினாலன்றி, இப்போது நமக்குக்கொடுக்கப்பட்டிருக்கும், உன்னத ஊழியத்தைச் செய்யக் கூடியவர்களாய் நாம் ஆகியிருக்கமுடியாது என்பதை உணருவோம். தேவன் நமக்கு வருங்காலத்திற்காகவும், உன்னதஊழியத்திற்காகவும், பெரும் பாக்கியத்திற்காகவும் பயிற்றுவிக்கிறார். நாம்சிம்மாசனத்திற்குத் தகுதியான குணங்களுடையவர்களானால் தேவனுடைய வேளை வரும்போது நம்மைஎதுவும் தடைசெய்ய முடியாது. தேவக்கரத்திலிருந்து நாளைத் தினத்தைக் களவாடாதே. தேவன்உன்னோடு பேசி, தம்முடைய சித்தத்தை உனக்கு வெளிப்படுத்தும்படி அவகாசம் கொடு.

அவர் தாமதித்து வரார். அவருக்கு நம்மை நன்கு தெரியும். வீணாகக் கவலைப்படாதே. அவர் வரும்வரை இளைப்பாறு.

நிமிட முள்ளும், மணிகாட்டும் முள்ளும, சரியான வேலையைக் காட்டும்போது அவர் வேலை செய்வார். அவர் எது நன்மைஎன்று அறிவார். வேளைக்குப் பிந்தார். நீ கலக்கமடையாது அவர் வரும்வரை ஓய்ந்திரு.