July

மேலான முதலீடு

July 31

“There is no man that hath left house, or brethren, or sisters, or father, or mother, or wife, or children, or lands, for my sake, and the gospel’s, but he shall receive a hundredfold now in this time, houses, and brethren, and sisters, and mothers, and children, and lands, with persecutions; and in the world to come eternal life.” (Mark 10:29, 30)

The greatest of all investments is the investment of one’s life for Jesus Christ. The important considerations in any investment are the safety of the principal and the rate of return. Judged on this basis, no investment can compare with the life that’s lived for God. The principal is absolutely safe because He is able to keep that which we have committed unto him (2 Tim. 1:12). As for the income, it boggles the mind by its immensity.

In today’s passage, the Lord Jesus promises to repay one hundredfold. That amounts to a 10,000% rate of interest—something that is unheard of in the world. But that is not all!

Those who have forsaken the comforts of a home in order to serve the Lord Christ are promised the warmth and conveniences of many homes, where they are shown the kindness of God for Jesus’ sake.

Those who forego the delights of marriage and a family, or who sever other tender earthly ties for the Gospel’s sake, are promised a worldwide family, many of whom actually become closer than blood-relatives.

Those who forsake lands are promised lands. They leave behind the privilege of owning a few acres of real estate, and gain the immeasurably greater privilege of claiming countries and even continents for the precious Name of Jesus.

They are also promised persecutions. At first this seems to be a sour note in an otherwise harmonious symphony. But Jesus includes persecutions as a positive return on one’s investment. To share the reproach of Christ is greater treasure than all the wealth of Egypt (Heb. 11:26).

Those are the dividends in this life. Then the Lord adds, “…and in the world to come eternal life.” This looks forward to eternal life in its fullness. Though eternal life itself is a gift received by faith, there will be differing capacities for enjoying it. Those who have left all to follow Jesus will share a greater degree of reward in the City Foursquare.

When we consider the transcendent returns from a life invested for God, it’s strange that more people do not participate. Investors can be extremely shrewd when it comes to stocks and bonds, yet strangely dense when it comes to the best investment of all.

யூலை 31

“என்னிமித்தமாவது, சுவிசேஷத்தினிமித்தமாகவும்,வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது, விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 10:29-30.

மேலான முதலீடு

ஒருவர் தமது வாழ்க்கையை கர்த்தராகிய கிறிஸ்துவுக்காக முதலீடு செய்வதே, எல்லா முதலீடுகளிலும் தலை சிறந்ததாகும். முதலீடு செய்கிறபோது முதலின் பாதுகாப்பு, அதிலிருந்து பெறுகிற ஆதாயம் இவ்விரண்டையும் கவனிக்க வேண்டியது இன்றியமையாததாகும். இதன் அடிப்படையில் முடிவெடுப்போமென்றால், தேவனுக்காக வாழ்கிற வாழ்க்கையாகிய முதலீடு ஒப்பற்றதாகும். அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் காத்துக்கொள்ள வல்லவராயிருப்பதால் அது மிகுந்த பாதுகாப்புடையது ஆகும் (2.தீமோ.1:12). வருமானத்தைப் பொறுத்தமட்டில், அதனுடைய அளவைக் கண்டு நமதுள்ளம் திடுக்கிடுகிறது.

இன்றைய வேதப்பகுதியில், நூறத்தனையாகத் திருப்பித் தருவதாகக் கர்த்தர் வாக்குரைத்திருக்கிறார். அதனைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, இது வரை கேட்டிராத வகையில் அது 10000 வீத வட்டித்தொகையாகும். ஆனால் அதோடு கூட முடிவடைந்து போவதில்லை!.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஊழியம் செய்வதற்காக தனது இல்லத்தில் வசதிகளைத் துறந்த மனிதர்களுக்கு, பலவீடுகளில் கிறிஸ்துவின் நிமித்தம் அன்பான வரவேற்பும், வசதிகளும், இரக்கம் பாராட்டுதலும் வாக்களிக்கப்பட்டுள்ளன. இல்லற உறவுகளையும், குடும்பத்தையும், இன்னும் பல இனிய உறவுகளையும், நற்செய்திப் பணிக்காக இழந்தோருக்கு, உலகம் முழுவதும் குடும்பச் சூழ்நிலைகள் வாக்குரைக்கப்பட்டுள்ளன. சொந்த உறவினர்களைக்காட்டிலும், அத்தகையோரில் பலர் நெருக்கமுடையவர்களாக நடந்து கொள்கின்றனர். நிலங்களைத் துறந்தோருக்கு, நிலங்களை வாக்குரைத்துள்ளார். சில ஏக்கர் நிலத்தை அவர்கள் விட்டுக்கொடுத்திருக்கலாம். மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்துவின் திருப்பெயருக்காக பலநாடுகளையும், கண்டங்களையும், பெற்றிடும் பெரிதான சிலாக்கியத்தை அவர்கள் அடைவார்கள்.

அவர்களுக்குப் பாடுகளும் வாக்களிக்கப்பட்டுள்ளன. எல்லாம் இசைவாய்த் தோன்றுகிறபோது, இதுமட்டும் வருத்தத்தைத் தோற்றுவிக்கிறதாக இருக்கிறது. ஆனால் பாடுகளும் கூட இந்த முதலீட்டினால் பெறும் நற்பேறாகவே இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்டுள்ளது. எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தை அதிக பாக்கியமாகும் (எபி.11:26).

இதுவரை சொல்லப்பட்ட யாவும் ஆதாயத்தில் கிடைக்கும் பங்குவீதமாகும். ‘மறுமையிலே நித்திய ஜீவனையும் அடைவான்” என்று கர்த்தர் தொடர்ந்து உரைத்துள்ளார். இங்கே நித்திய ஐPவன், அதனுடைய முழு அளவில் எதிர்பார்க்கப்படுகிறதைக் காண்கிறோம். நித்திய ஐPவனே விசுவாசத்தினால் கிடைக்கும் பரிசுப்பொருளாக இருப்பினும், அங்கே வெவ்வேறு அளவில் அதனை அனுபவிக்கும் திறன் காணப்படும். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டிய எல்லாவற்றையும் துறந்தோர் பரிசுத்த நகரத்தில் மாபெரும் வெகுமதியைப் பெறுவர்.

தேவனுக்காக முதலீடு செய்து வாழ்வதினாலே அடையக்கூடிய மேலான ஆதாயத்தைப் பற்றி ஆராய்ந்தோம். பங்குச் சந்தையில் பலர் அதிக சாதுரியமாக முதலீடு செய்கின்றனர். இருந்தபோதிலும், எல்லாவற்றுக்கும் மேலான முதலீட்டைப் பொருத்தமட்டில், தேவபணியில் பலர் முதலீடு செய்வதில்லை என்னும் உண்மை மிகுந்த வியப்பையும், வருத்தத்தையும் தருகிறது.

31. Juli

»Da ist niemand, der Haus oder Brüder oder Schwestern oder Vater oder Mutter oder Frau oder Kinder oder Acker verlassen hat um meinet- und um des Evangeliums willen, der nicht hundertfältig empfange, jetzt in dieser Zeit Häuser und Brüder und Schwestern und Mütter und Kinder und Äcker mit Verfolgungen und in dem kommenden Zeitalter ewiges Leben.« Markus 10,29.30

Die größte aller Investitionen ist die Investierung unseres Lebens für Jesus Christus. Die entscheidenden Überlegungen bei jeder Investition sind die Sicherheit des Kapitals und die Höhe der Verzinsung. Auf dieser Grundlage beurteilt, kann sich absolut keine Investition in dieser Welt mit einem Leben vergleichen, das für Gott gelebt wird. Das Kapital ist absolut sicher, weil Er mächtig ist, das Ihm von uns anvertraute Gut zu bewahren (2. Timotheus 1,12). Was den Ertrag betrifft, so wird uns schwindlig bei dem Gedanken an seine Unermesslichkeit.

In unserem heutigen Abschnitt garantiert der Herr Jesus, alles hundertfach zurückzuzahlen. Das entspricht einer 10000%igen Verzinsung – etwas bis dato absolut Unerhörtes. Aber das ist nicht alles!

Denjenigen, die die Annehmlichkeiten ihrer Heimat verlassen haben, um dem Herrn Jesus zu dienen, wird die Wärme und Annehmlichkeit vieler Häuser verheißen, wo ihnen um Jesu willen Gottes Güte erzeigt wird.

Denjenigen, die auf die Freuden der Ehe oder einer Familie verzichten oder die andere irdische Bande um des Evangeliums willen zertrennen, wird eine weltweite Familie verheißen, von denen viele näher ans Herz wachsen als Blutsverwandte.

Denjenigen, die Länder verlassen, werden Länder verheißen. Sie verzichten auf das Vorrecht, einige Quadratmeter Grundbesitz ihr Eigen zu nennen, und erhalten dafür das unendlich größere Vorrecht, Länder oder ganze Kontinente für den kostbaren Namen Jesu in Anspruch nehmen zu dürfen.

Ihnen werden auch Verfolgungen verheißen. Auf den ersten Blick klingt das wie eine bittere Note in der ansonsten harmonischen Symphonie. Aber der Herr Jesus rechnet die Verfolgungen auch zu den positiven Erträgen aus unserer Investition. Die Schmach des Christus teilen zu dürfen, ist größerer Reichtum als alle Schätze Ägyptens (siehe Hebräer 11,26).

Und das sind erst die Dividenden in diesem Leben! Denn der Herr fügt dann hinzu: »… und in dem kommenden Zeitalter ewiges Leben«. Das richtet unseren Blick auf das ewige Leben in seiner ganzen Fülle. Obwohl das ewige Leben in sich selbst eine Gabe ist, die durch Glauben empfangen wird, werden wir es in unterschiedlichem Umfang genießen. Diejenigen, die alles verlassen haben, um dem Herrn Jesus nachzufolgen, werden in der Himmlischen Stadt größeren Lohn erhalten.

Wenn wir über die überwältigenden Erträge nachdenken, die ein für Gott investiertes Leben erbringt, dann ist es seltsam, dass sich nicht mehr Menschen beteiligen. Investoren können überaus klug und gerissen sein, wenn es um Aktien und Wertpapiere geht, und doch sind sie seltsam begriffsstutzig, wenn ihnen die beste aller Investitionen angeboten wird.