மே 1
மே 1 பொய்யுரையாத தேவன் (தீத்து1:3). ஒரு காரியம் திட்டமாகநடந்தே தீரும். அது மெய்யானது என்று ஆண்டவர் கூறியிருப்பதால், அதைக் கண்டு, அதுமெய்யாகவே இருப்பதால் மகிழ்ச்சிகொண்டு, ஆண்டவரே அதைக் கூறியிருப்பதால் அதைக்குறித்து அமைதி கொண்டிருப்பதே விசுவாசம் ஆகும். நம்முடைய மனோ வலிமையினால் அக் காரியம்நடந்தே தீரும் என்று நிச்சயித்துக் கொள்வதல்ல விசுவாசம். விசுவாசம் இறைவனதுவாக்குறுதிகளை நம்புகிறது. வாக்குறுதியாயிருக்கும் ஒரு காரியம் நிகழ்வது நமது ஒத்துழைப்பைப்பொறுத்தது. ஆனால் அதை விசுவாசம் தன்னுடையதாக்கிக்கொள்ளும்பொழுது, அது ஓர் இறைவாக்காக(தீர்க்கதரிசனமாக) ஆகிவிடுகிறது. ஆண்டவர்…