May

மே 11

மே 11 தீயையும் தண்ணீரையும்கடந்து வந்தோம். செழிப்பான இடத்தில் எங்கைளக் கொண்டுவந்து விட்டீர் (சங்.66:12). ஓய்வைப்போராட்டத்தின்மூலம் பெறுபவனே நிறைவான ஓய்வினைப் பெறுவான். இது முரணாக இருக்கிறது.போராட்டத்தினின்று கிடைக்கும் அமைதி, புயலுக்குப் பின் ஏற்படும் அமைதியைப்போன்றதல்ல. ஆனால், அது புயுலுக்குப்பின் ஏற்படும் கொந்தளிப்பின் தூய்மையானஅமைதியாகும். செல்வந்தனாக, துயரம்அனுபவியாதவனாக இருப்பவனுக்கு மன அமைதியும், மனவலிமையும் கிடையாது. அவனுடைய பண்புகள் இன்னும்சோதனைகளுக்குள்ளாகவில்லை. ஒரு சிறு அதிர்ச்சியைக்கூட தன்னால் எவ்வாறுதாங்கிக்கொள்ளமுடியும் என்று அவன் அறியான். புயலைச் சந்தித்துப் போராடாத மாலுமி,பததிரமாகத் தன் கலத்தைச்…

May

மே 10

மே 10 நானோ….விசுவாசியாதிருந்தால் கெட்டுப் போயிருப்பேன் (சங்.27:13). சோர்ந்துபோகாதே இந்த நிலையில் வரும்சோதனை எத்தனை பெரியது. அதில் ஆன்மா துவண்டு போகிறது. இதயம் நோய்வாய்ப்படுகிறது.நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களினாலும் இழப்புகளினாலும் ஏற்படும் போராட்டங்களினால்,நமது விசுவாசம் ஆடிப்போகிறது. இனி நான் இதைத்தாங்கமாட்டேன். இச் சோதனையால் எனக்கு மயக்கமே ஏற்பட்டுவிடும். யாது செய்வேன்.சோர்ந்து போகாதே என்று ஆண்டவர் கூறுகிறார். ஆனால், சோர்ந்து மயக்கமாகும் நிலையில்உள்ளவன் என்னதான் செய்யமுடியும்? உடல் நலம் குன்றி நீசோர்வு அடையும்பொழுது நீ செய்வதென்ன? உன்னால் யாதும்…

May

மே 9

மே 9 ஆபிரகாமோ, பின்னும்கர்த்தருக்கு முன்பாக நின்றான் (ஆதி.18:2). ஆண்டவருக்குநண்பனாயிருப்பவன்தான் அவரிடத்தில் பிறருக்காகப் பரிந்து பேசமுடியும். ஒருவேளைஆபிரகாமுடைய விசுவாசத்தின் உயர்வும், ஆண்டவரிடம் அவன் கொண்டிருந்த நட்புறவும்எளியவர்களாகிய நம்மால் எட்ட முடியாதவனாக இருக்கலாம். இதனால் மனம் தளர்ந்துபோகவேண்டாம். விசுவாசத்தில் ஆபிரகாம் வளர்ந்தான். படிப்படியாகத்தான் வளர்ந்தான்.தாண்டிக்குதித்து அவன் வளரவில்லை. நாமும் அவனைப்போல் விசுவாசத்தில் வளரலாம். எவனொருவனுடைய விசுவாசம்வெகுவாகச் சோதிக்கப்பட்பொழுது வெற்றியும் அடைந்தானோ, அவனுக்குத்தான் மிகக்கடினமானசோதனைகள் வரும். மிகவும் சிறப்பானவிலைமதிப்புள்ள இரத்தினக்கற்கள் கவனத்துடன் வெட்டப்பட்டு மெருகேற்றப்படுகின்றன.விலைமதிப்பில் அதிகமாகும் உலோகங்கள் உயர் வெப்பத்தில்…

May

மே 8

மே 8 அக்கினியின் நடுவிலேஉலாவுகிறதை (தானி.3:25). அவர்களுடைய நடமாட்டத்தைஅந்தச் சூளையின் நெருப்பினால் தடைப்படுத்த முடியவில்லை. நெருப்பின் மத்தியில் அவர்கள்உலாவிக்கொண்டிருந்தனர். அது தங்களது முடிவிற்கு அவர்கள் சென்று கொண்டிருந்த வழிகளில் ஒன்று.துயரத்தினின்று விடுதலையைக் கிறிஸ்து நாதரின் வெளிப்பாடு காட்டவில்லை. ஆனால்,துயரத்தின்மூலம் விடுதலையை அது காட்டுகிறது. நிழல்கள் என்னைச்சூழ்ந்து என் பாதையை இருள்மயமாக்குகையில், நான் இருண்ட ஒரு சுரங்கப்பாதை வழியாகத்தான்சென்று கொண்டிருக்கிறேன் என்பதை, என் ஆண்டவரே, எனக்குக் காட்டும். ஒருநாள் யாவும்நலமாகிவிடும் என்னும் அறிவே எனக்குப் போதுமானது. உயிர்த்தெழுதலின்மகிமையாகிய ஒலிவிமலையின்…

May

மே 7

மே 7 சோர்ந்து போகாமல்எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும் என்பதைக் குறித்து, அவர் அவர்களுக்கு ஒரு உவமையைச்சொன்னார் (லூக்.18:1). பரிந்துரை ஜெபத்திற்கு பலசோதனைகள் ஏற்படுவதுண்டு. எவருக்கும் சாதாரணமாக இக்காரியத்தில் ஏற்படும் சோதனைதொடாந்து ஜெபிக்காமல் விட்டுவிடுதல். ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து நாம் ஜெபிக்கஆரம்பிக்கிறோம். ஒருநாள், ஒருவாரம், ஒரு மாத காலத்திற்கு நாம் தொடாந்து ஜெபித்தும்பலன் ஏதும் கிடைக்கவில்லை. நாம் சோர்வு அடைந்து விடுகிறொம். அக் காரியத்திற்காகஜெபிப் பதை நிறுத்திவிடுகிறோம். இது ஒரு பெருந்தவறாகும்.பலவற்றைத் தொடங்கியும், ஒன்றை முடிக்காத வலையில்…

May

மே 6

மே 6 கர்த்தருடைய இரகசியம்அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது (சங்.25:14). தெய்வச் செயலால் நடக்கும்நிகழ்ச்சிகள் பலவுண்டு. அவை வெளிநோக்கிற்கு மிகப் பயங்கரமானவையாகவும்,கொடுரமானைவையாகவும் தோன்றும். ஆனால் ஆண்டவருடைய பிள்ளைகள் அவைகளினின்று பல இரகசியங்களைஅறிந்துகொள்ளக் கூடும். இவைகள்விசுவாசம் ஆழ்ந்து நோக்கி, இது ஆண்டவருடைய இரகசியம் என்று கூறுகிறது. விசுவாசியாதவன்மேல்போக்காகத்தான் பார்க்கிறான். விசுவாசியோ, கூர்ந்து நோக்கி, மறை பொருளைக்காண்கிறான். விலையேறப்பெற்ற வைரங்களைச் சில வேளைகளில் சாதாரணமாகத் தோன்றும் பொட்டலங்களில்அனுப்புவார்கள். அப்பொழுது அவற்றின் மதிப்பு வெளியில் தெரியாது. ஆரம்ப காலத்தில் இஸ்ரவேலர் ஆண்டவரைத் தொழுதுவந்த…

May

மே 5

மே 5 அவர்கள் பாடித்துதிசெய்யத் தொடங்கினபோது…. அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் (2.நாளா.20:22). நம்முடைய துன்பங்களைகுறித்து விவாதம் செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஆண்டவரைப் பாடித் துதிக்கஆரம்பித்தால் எத்தனை நலமாயிருக்கும்! நமக்குத் தடைகள் என்று எண்ணும் காரியங்கள்ஆயிரமாயிரமாயிருக்கின்றன. அக் காரியங்களனைத்தையும், நாம் இசையெழுப்பும் இன்னிசைக்கருவிகாகப் பயன்படச் செய்யலாமே. அதை எவ்வாறு செய்வதென்பதை நாம்தெரிந்துகொள்ளவேண்டும். சில மனிதர்கள் ஆழ்ந்துசிந்திப்பவர்களாயிருக்கிறார்கள். சிலர் தியானம் செய்கிறவர்களாகிவிடுகின்றனர். மற்றும்சிலர் வாழ்க்கையின் சம்பவங்களை எடைபோட்டுப் பார்க்கின்றனர். ஆண்டவர் இயற்கையாய்ச்செய்யும் காரியங்களை ஆராய்ச்சி செய்து ஏன் தாங்கள் தங்களுடைய…

May

மே 4

மே 4 அவர் காயப்படுத்திக்காயங்கட்டுகிறார். அவர் அடிக்கிறார். அவருடைய கை ஆற்றுகிறது (யோபு 5:18). பெருந்துயரத்தின் சேவை பெரிய நிலநடுக்கம்ஏற்பட்டிருந்தது. அதனால் சிதைவுற்ற குன்றுகளினடியில் நாம் செல்லும்பொழுது, பெருஞ்சேதம்விளைவித்த அந் நில நடுக்கத்தின்பின் ஆழ்ந்த அமைதிக் காலங்கள் இருக்கக் காண்கிறோம்.இடிந்து, உருண்டு, விழுந்த பாறைகளினடியிலே, முகம் பார்க்குமளவுக்கு அமைதியான தெளிவானநீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அல்லிமலர்கள் மலர்ந்துள்ளன. கரையிலுள்ளநாணலில் சிறு அசைவு காணப்படுகிறது. இடிந்து, சிதைந்து நாசமாகிப்போன சிற்றூர் மறுபடியும்எழும்புகிறது. துயரங்களும், சாவுகளும் மறக்கப்பட்டுப்போயின. வெண்மையானஊசிக்கோபுரத்தையுடைய தேவாலயத்திலிருந்து தெய்வீக…

May

மே 3

மே 3 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ, அவன் இரட்சிக்கப்படுவான்(யோவே.2:32). நான் ஏன்அவரை நோக்கிக் கூப்பிடுவதில்லை? அவர் என் அருகிலேயே இருக்கும்பொழுது, நான் ஏன் என்அயலகத்தாரைத் தேடி இங்குமங்கும் அலையவேண்டும்? நான் ஏன் அமர்ந்து, சிந்தித்துத்திட்டங்களைத் தீட்டவேண்டும்? என்னையும், என் பாரங்களனைத்தையும் சுருட்டி எடுத்து என்ஆண்டவர்மேல் நான் ஏன் வைத்து விடக்கூடாது? நான் ஏன் என் உயிருள்ள கர்த்தரை நோக்கிநேராக ஓடிச் செல்லவில்லை? வேறு எங்கும் நான் விடுதலையைத் தேடி அலைவது வீண் அன்றோ? என்ஆண்டவரிடத்தில் நான்…

May

மே 2

மே 2 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார். அவருடையஇராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது (சங்.103:19). கொஞ்சகாலத்திற்குமுன்பு, ஓர் இளவேனிற்காலக் காலையில் என் வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்தபொழுதுஒரு குளிரான புழுதிக் காற்று கீழ்த்திசையிலிருந்து எழும்பி வர நான் கண்டேன். என்கதவிலுள்ள தாழ்ப்பாள்களைத் திறந்துகொண்டே பொறுமையற்றவனாக, இக் காற்று மாறாதா?என்று கூற இருந்தேன். ஆனால் வார்த்தைகள் தடைப்பட்டன. நான் அவ் வாக்கியத்தை முடிக்கவேஇல்லை. என்வழியில் நான் தொடர்ந்து செல்லும்பொழுது இச்சம்பவம் எனக்கு ஓர் உவமையாக மாறிவிட்டது.ஒரு தேவதூதன்…