ஐனவரி 22
இயேசு வனாந்தரமான ஓர் இடத்திற்குத் தனியே போனார் (மத்.14:13). நிறுத்தக்குறியில் பாட்டு இல்லை. ஆனால் பாடல் உண்டாக்கக்கூடிய ஏது அதில் இருக்கிறது. நம்முடைய ஜீவியமாகிய பாதையின் இடையில் சில சமயங்களில் பாட்டு நின்றுவிடுகிறது. அப்பொழுதெல்லாம் நாம் கீதம் முற்றிற்று என்று எண்ணுகிறோம். தேவன் வியாதி, நம் எண்ணம் கைகூடாமை, நம் முயற்சிகள் வீணாதல் ஆகியவற்றினால் நம்மைச் சில சமயங்களில் கட்டாயமாக ஓய்வு எடுக்கச் செய்கிறார். நம்முடைய ஜீவிய கீதம் திடீரென்று நிறுத்தப்படுகிறது. சிருஷ்டிகருக்கு ஓயாது ஏறெடுக்கப்படும் கீதத்தில்,…