ஏப்ரல் 12
ஏப்ரல் 12 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் (லூக்.4:1). இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார் என்றாலும், அவர் சோதிக்கப்பட்டார். ஒரு மனிதன் தேவனன்டை நெருங்கி இருக்கையில்தான் சோதனை தன் முழு பலத்துடன் அவனைத் தாக்குகிறது. சாத்தான் வெகு பெரிய செயல்களைச் சாதிக்கும் எண்ணம் கொண்டவன் என்று கூறியுள்ளார் ஒருவர். அவன் இயேசுவின் சீடர்களில் ஒருவனைக் கிறிஸ்துவை நான் அறியேன் என்று சொல்லக்கூடச் செய்தான். மார்ட்டின்…