September

கிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தம்

September 21

“Henceforth there is laid up for me a crown of righteousness, which the Lord, the righteous judge, shall give me at that day: and not to me only, but unto all them also that love his appearing.” (2 Tim. 4:8)

“…them also that love his appearing.” For many years I thought that this expression referred to those believers who had kindly, sentimental feelings about the coming of the Lord. They would be rewarded with a crown of righteousness because their hearts glowed warm when they thought about the Rapture.

But surely it means more than this. To love His appearance means to live in the light of His coming, to behave as if He were coming today.

Thus, to love His appearing means to live in moral purity. For, as John reminds us, “every man that hath this hope in him purifieth himself, even as he is pure” (1 John 3:3).

It means to stay disentangled from the things of this life. We should set our affections on things above, not on things on the earth (Col. 3:2).

It means to serve God’s people, giving them “meat in due season” (Matt. 24:45). The Lord pronounces a special blessing on those who are doing that when He comes.

In short, it means that we won’t do anything that we would not want to be found doing when He appears. We would not go anywhere that would cause shame at His coming. We would not say anything that would be offensive in His presence.

If you knew Christ were coming in a week, how would you spend the intervening days? Does it mean you would give up your job, go to a mountaintop and spend all day reading the Bible and praying? Does it mean you would go into “full-time Christian work,” preaching and teaching day and night?

If we are really walking with the Lord today and living in the center of His will, it would mean carrying on as usual. If, however, we are living for self, then it would require some revolutionary changes.

It is not enough to have kind thoughts about the Savior’s return. The crown of righteousness is reserved for those who love it enough to let the truth mold their lives. It is not enough to hold the truth about His coming; the truth must hold us.

செப்டெம்பர் 21

இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். 2.தீமோத்தேயு 4:8

கிறிஸ்துவின் வருகைக்கான ஆயத்தம்

“அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும்….” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இனிமையான மெய்யுணர்வோடு கூடிய எண்ணங்களையுடைய விசுவாசிகளையே இச்சொற்றொடர் குறிக்கிறது என்று பல ஆண்டுகளாக நினைத்துக் கொண்டிருந்தேன். ‘எடுத்துக்கொள்ளப்படுதல்” என்னும் நிகழ்ச்சியை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம், அவர்களுடைய உள்ளங்கள் பூரிப்படைவதால் நீதியின் கிரீடம் அவர்களுக்குச் சூட்டப்படும் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால், உண்மையில் இச்சொற்றொடரின் பொருள் இதனைக் காட்டிலும் ஆழமானதாகும். „அவருடைய வருகையை விரும்பும்| என்பதன் பொருள், அவருடைய வருகையின் வெளிச்சத்தில் வாழ்வது என்பதேயாகும். அதாவது, இன்றைக்கு அவருடைய வருகை இருக்குமாயின், எவ்வாறு நாம் நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்துகொள்வதேயாகும்.

ஆகவே „அவருடைய வருகையை விரும்பும்| என்னும் சொற்றொடர், ஒழுக்கத்தில் தூய்மையாக வாழ்தல் என்னும் பொருளையே உடையதாக இருக்கிறது. ‘அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமாயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” என்று யோவான் நமக்கு நினைப்பூட்டுகிறார். (1.யோவான் 3:3).

இவ்வுலகீய வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளாதிருப்பது என்பதும் இதன் பொருளாயிருக்கிறது. பூமியில் உள்ளவற்றை அல்ல, மேலானவற்றின் மீது நமது விருப்பத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் (கொலோ.3:2).

தேவனுடைய மக்களுக்குப் பணிவிடை செய்தல் என்பதும் இதன் பொருளாகும். ‘ஏற்ற வேளையில் தன் வேலைக்காரருக்கு உணவளித்தல்” போன்ற செயல்களை அவருடைய வருகையின்போது செய்வோருக்குச் சிறப்பான நற்பேறுகளை வழங்குவதாக வாக்களித்துள்ளார்.

சுருங்கக் கூறின், அவருடைய வருகையின்போது நாம் என்னென்ன செயல்களைச் செய்பவர்களாகக் காணக்கூடாது என்று நினைக்கிறோமோ, அச்செயல்களைச் செய்யாதிருப்பது என்பதே அதன் பொருளாகும். அவருடைய வருகையின்போது அவமானத்திற்குக் காரணமாக விளங்கும் எவ்விடத்திற்கும் நாம் போகமாட்டோம். அவருடைய பிரசன்னத்தில் குற்றமாக விளங்குகிற எச்சொல்லையும் நாம் சொல்ல மாட்டோம்.

இன்னும் ஒரு வாரத்தில் கிறிஸ்து வரப்போகிறார் என்று நாம் அறிவோமென்றால், அந்த இடைப்பட்ட நாட்களை என்ன விதத்தில் கழிப்போம்? உங்களுடைய அலுவலைத் துறந்து, மலைமீது ஏறிச் சென்று நாள் முழுவதும் வேதம் வாசிப்பதும், ஜெபம் செய்வதுமாகச் செலவிடுவது என்பது தான் பொருளா? „முழுநேர கிறிஸ்தவ ஊழியத்திற்கு“ உங்களை ஒப்புவித்து, இரவும் பகலும் பிரசங்கம் செய்து போதித்து நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பது தான் அதன் பொருளா?.
இன்றைக்கு உண்மையாகவே கர்த்தரோடு நடந்து, அவருடைய சித்தத்தைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வீர்களாயின், நடக்க வேண்டியபடி சாதாரணமாக நடக்கிறீர்கள் என்று பொருளாகும். அவ்வாறின்றி, சுயநலத்துடன் வாழ்வோமாயின், புரட்சிகரமான மாறுதலை நாம் அடைய வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதே அதன் பொருளாகும்.

இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்த இனிமையான நினைவுகள் மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது. கர்த்தருடைய வருகையை குறித்த உண்மை, தங்களுடைய வாழ்வை அதற்கேற்றபடி மாறுவதற்கு யாரெல்லாம் அனுமதிக்கிறார்களோ அவர்களுக்கு நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையை நாம் பற்றிக்கொண்டிருப்பது போதாது. அந்த உண்மை நம்மைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

21. September

»Fortan liegt mir bereit der Siegeskranz der Gerechtigkeit, den der Herr, der gerechte Richter, mir zu Vergeltung geben wird an jenem Tag; nicht allein aber mir, sondern auch allen, die seine Erscheinung lieben.« 2. Timotheus 4,8

»Auch allen, die seine Erscheinung lieben.« Viele Jahre lang dachte ich, dass mit diesen Worten die Gläubigen gemeint wären, die freundliche, überschwängliche Gefühle in Bezug auf die Wiederkunft des Herrn hätten. Sie würden mit der Krone der Gerechtigkeit belohnt werden, weil ihre Herzen glühten, sooft sie über die Entrückung nachdachten.

Aber ganz bestimmt ist hier noch mehr gemeint. Seine Erscheinung zu lieben, heißt auch, im Lichte Seines Wiederkommens zu leben, sich so zu verhalten, als ob Er schon heute wiederkäme.

Es bedeutet also, in moralischer Reinheit zu leben. Denn auch Johannes ermahnt uns: »Und jeder, der diese Hoffnung auf ihn hat, reinigt sich selbst, wie er rein ist« (1.Johannes 3,3).

Es bedeutet auch, sich nicht in die Dinge dieses Lebens zu verstricken. Wir sollen unsere Liebe und Zuneigung den himmlischen Dingen zuwenden, nicht denen, die auf dieser Erde wichtig sind (siehe dazu Kolosser 3,2).

Es heißt auch, dem Volk Gottes zu dienen und ihm »Speise zu geben zur rechten Zeit« (siehe Matthäus 24,45). Der Herr hat denen einen besonderen Segen angekündigt, die dabei sind, das zu tun, wenn Er kommt.

Kurz gesagt: Wir sollen nichts tun, bei dem wir nicht überrascht werden wollten, wenn der Herr erscheint. Wir sollten keinen Ort aufsuchen, wo unsere Anwesenheit bei Seinem Kommen uns zur Schande gereichen müsste. Wir sollen nichts Anstößiges sagen, so als ob Er bereits gegenwärtig ist.

Wenn wir wüssten, dass Jesus in einer Woche wiederkäme, wie würden wir dann die Tage bis dahin ausfüllen? Würden wir unsere Arbeit aufgeben, auf einen Berg steigen und den ganzen Tag mit dem Lesen der Bibel und Beten verbringen? Oder würden wir noch schnell in die »vollzeitliche christliche Arbeit« einsteigen und Tag und Nacht predigen und lehren?

Wenn wir heute schon wirklich dem Herrn nachfolgen und ganz nach Seinem Willen leben, dann könnten wir am besten genauso weitermachen wie bisher. Wenn wir aber jetzt nur für uns selbst gelebt haben, dann würde das Wissen um Seine kurz bevorstehende Wiederkunft einige umwälzende Veränderungen verlangen.

Es ist nicht genug, nur ein paar freundliche Gedanken zum Thema Wiederkunft des Herrn zu haben. Die Krone der Gerechtigkeit ist denen vorbehalten, die Jesu Wiederkommen so lieb haben, dass sie es geschehen lassen, wenn die Wahrheit ihr Leben umformt. Es ist nicht genug, wenn wir an der Wahrheit über seine Wiederkunft festhalten; diese Wahrheit muss vielmehr uns festhalten.