September

பெற்றோர் சிட்சிக்கும் பிள்ளைகள்

September 16

“Discipline your son while there is hope, and do not desire his death.” (Prov. 19:18 NASB)

We live in a permissive society. Especially in the area of child-training, people listen to the advice of psychologists and sociologists rather than to the teachings of God’s Word. Many adults who were brought up by parents who dared to discipline them determine to allow their children freedom and self-expression. What are the results?

Such children grow up with a deep sense of insecurity. They are misfits in society. They find it difficult to cope with problems and troubles, and seek release in drugs and liquor. A few years of discipline would have made the rest of life much easier for them.

Not surprisingly they live undisciplined lives. Their personal appearance, their living quarters, their personal habits all betray their careless and disorderly mindset.

They are satisfied with mediocrity or less. They lack the drive to excel in sports, music, art, business and other areas in life.

Such children become alienated from the parents. These parents thought they would win the undying love of their children by withholding punishment. Instead they won the hatred of their offspring.

Their rebellion against parental authority extends to other areas of life—to school, employment and government. If their parents had only broken their wills early in life, they would have made it easier for their children to submit in the normal areas of life.

Rebellion spreads to moral standards set forth in the Scriptures. Young rebels flout the divine commands concerning purity and abandon themselves to loose and reckless living. They manifest a deep loathing for whatever is good, and a love for whatever is unnatural, obscene and hideous.

Finally, parents who fail to break the will of a child through discipline make it harder for that child to be saved. Conversion involves the breaking of the will in its rebellion against the rule of God. That is why Susannah Wesley said, “The parent who studies to subdue selfwill in his child works together with God in the renewing and saving of a soul. The parent who indulges it does the Devil’s work, makes religion impractical, salvation unattainable, and does all that in him lies to damn his child, soul and body, forever.”

செப்டெம்பர் 16

நம்பிக்கையிருக்கும் மட்டும் உன் மகனைச் சிட்சைசெய், ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவிடாதே. நீதி.19:18

பெற்றோர் சிட்சிக்கும் பிள்ளைகள்

பிறருடைய எண்ணங்களுக்கு இசைந்து கொடுக்கிற சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம். குறிப்பாக, சிறுபிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கிறதைப் பொறுத்தமட்டில், திருமறை தரும் அறிவுரைகளைக் காட்டிலும், உளநூல் ஆய்வாளர்கள் மற்றும் சமுதாய வாழ்க்கை நூல் ஆய்வாளர் தரும் அறிவுரைகளுக்கு மனிதர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். கண்டித்து ஒழுங்காக வளர்க்கத் துணிவுகொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்கள், பின்னர் தங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் சுதந்திரதையும் அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த பேச்சுரிமையையும் வழங்கத் தீர்மானிக்கின்றனர். அதன் விளைவுகள் யாவை?

அவ்வாறு வளர்க்கப்படுகிற பிள்ளைகள் பாதுகாப்பின்மை உணர்வோடு வளர்க்கின்றனர். சமுதாயத்தில் அவர்கள் பொருத்தமற்றவர்களாக காணப்படுகின்றனர். சிக்கல்களும், பிரச்சனைகளும், வாழ்க்கையில் எழுப்பும்போது அவற்றை அவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. அத்தருணங்களில் மதுவையும் போதைப்பொருட்களையும் நாடுகின்றனர். சில ஆண்டுகள் கண்டிப்பான ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருப்பார்களாயின், அவர்களுடைய எஞ்சிய வாழ்நாட்காலம் முழுவதும் நேர்த்தியாக அமைந்திருக்கும்.

ஒழுங்கற்ற வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில் எவ்வித வியப்பும் இல்லை. அவர்களுடைய முகப்பொலிவு, உறைவிடம், பழக்கவழக்கங்கள் யாவையும், அக்கறையற்றதும் ஒழுங்கற்றதுமான மனநிலைக்கு சான்றாக விளங்கும்.

சாதாரண நிலையிலோ அல்லது இதற்கும் கீழாகவோ இருந்தால் போதும் என்று அவர்கள் மனநிறைவு அடைகின்றனர். விளையாட்டு, இசை, கலை, தொழில், இன்னும் பல அம்சங்களில் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஊக்கம் இல்லாதிருப்பர்.

அப்படிப்பட்ட பிள்ளைகள் பெற்றோர்களைவிட்டு விலகிச் செல்வர். தண்டனை கொடுக்கவில்லையென்றால் அவர்களிடத்திருந்து மாற்றமில்லா அன்பைப் பெறலாம் என்று அந்தப் பெற்றோர்கள் நினைக்கின்றனர். மாறாக, அவர்களுடைய பிள்ளைகளின் வெறுப்பையே சம்பாதிக்கின்றனர்.

பெற்றோர்களுடைய அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கும் பிள்ளைகள் அதே மனப்பான்மையைப் பிற இடங்களிலும் காட்டுகின்றனர். பள்ளிகளிலும், அலுவலங்களிலும,; அரசாங்கத்திலும், அது வெளிப்படுகிறது. அவர்களுடைய வாழ்க்கையின் தொடக்கத்தில் சொந்த விருப்பங்களைப் பெற்றோர்கள் முறியடித்திருந்தால், பிள்ளைகள் தங்களுடைய வாழ்க்கையில் பலநிலைகளில் நேர்த்தியாக நடந்து கொள்பவர்களாக விளங்குவார்கள்.

வேதம் நியமித்துள்ள ஒழுக்கத்தின் கூறுகளிலும், எதிர்த்துச் செயல்புரியும் தன்மை பரவுகிறது. பரிசுத்தத்தைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ள தெய்வீகக் கட்டளைகளைக் கலகம்செய்யும் இளைஞர்கள் காற்றில் பறக்க விடுகின்றனர். கட்டுப்பாடற்றதும், முரட்டுத் துணிச்சலுமான வாழ்க்கையை அவர்கள் வாழ்கின்றனர். நன்மையானது ஏதுவாயினும் அதில் ஆழ்ந்த வெறுப்பைக் காட்டுகின்றனர். இயற்கைக்கு மாறுபட்டதும், இழிவானதும், அருவருக்கத்தக்கதுமானவற்றில் பிரியம் கொள்கின்றனர்.

இறுதியாக, சிறுபிள்ளைகளுடைய சித்தத்தை ஒழுக்கத்தின் கண்டிப்பினால் முறியடிக்கத் தவறுகிறவர்கள், அவர்கள் இரட்சிப்படைவதைக் கடினமாக்குகின்றனர். தேவனுடைய விதிகளுக்கு மாறாக எதிர்த்து நிற்கிற ஒருவரது சித்தமானது முறியடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய இரட்சிப்பிற்கு அவசிமான ஒன்றாகும். ஆகவேதான், ‘பிள்ளைகளின் சுயசித்தத்தை நொறுக்க விரும்புகிற பெற்றோர், அந்தப் பிள்ளைகளின் ஆத்துமாக்கள் புதிப்பிக்கப்பட தேவனோடு இணைந்து செயல்புரிகிறவர்களாக இருக்கின்றனர். தங்கள் விருப்பப்படி செயல்பட அனுமதிக்கிற பெற்றோர் பிசாசின் கிரியைகளைச் செய்கின்றனர். வேதத்தை அனுபவத்தில் கடைப்பிடிக்கக் கூடாததாகவும், இரட்சிப்பை அடையக்கூடாததாகவும் அந்தப் பெற்றோர்கள் ஆக்குகின்றனர். அப்பிள்ளையை, அதாவது அதனுடைய ஆத்துமா, சரீரம், ஆகியவற்றை என்றென்றைக்கும் நரகத்திற்கு உரியதாக்குகின்றனர்” என்று சூசன்னா வெஸ்ஸி இயம்பியுள்ளார்.

16. September

»Züchtige deinen Sohn, solange noch Hoffnung da ist; aber lass dich nicht dazu hinreißen, ihn zu töten!« Sprüche 19,18

Wir leben in einer Gesellschaft, die sehr vieles duldet. Besonders auf dem Gebiet der Kindererziehung hören die Leute eher auf den Rat der Psychologen und Soziologen als auf die Lehren des Wortes Gottes. Viele Erwachsene, die selbst von Eltern erzogen wurden, die es noch sehr wohl wagten, sie zu züchtigen, entschließen sich jetzt, ihren Kindern viele Freiheiten und den ungehinderten Ausdruck ihrer eigenen Persönlichkeit zu gestatten. Und mit welchem Ergebnis?

Solche Kinder wachsen mit einem tiefen Gefühl der Unsicherheit auf. Sie sind Versager in der Gesellschaft. Sie finden es schwierig, mit Problemen und Sorgen fertig zu werden, und flüchten sich in Drogen oder Alkohol. Ein paar Jahre Strenge hätten ihnen den Rest ihres Lebens ganz bestimmt viel einfacher gemacht.

Es ist keine Überraschung, dass solche jungen Leute ein ungeordnetes Leben führen. Ihre äußere Erscheinung, ihre Wohnverhältnisse, ihre persönlichen Gewohnheiten verraten ihre sorglose und chaotische Grundeinstellung.

Sie sind mit dem Mittelmäßigen oder mit noch weniger zufrieden. Sie haben keinerlei Antrieb, sich im Sport, in der Musik und Kunst, in geschäftlichen Dingen oder in anderen Lebensbereichen besonders hervorzutun.

Solche Kinder entfremden sich ihren Eltern leicht. Jene dachten, sie würden die ungebrochene Liebe ihrer Kinder gewinnen, weil sie sie niemals bestraften. Doch stattdessen ernten sie den Hass ihrer Sprösslinge.

Die Rebellion gegen die elterliche Autorität erstreckt sich auch auf andere Bereiche: auf die Schule, die Arbeitgeber und die Regierung. Wenn die Eltern den Eigenwillen ihrer Kinder schon früh unterdrückt hätten, dann hätten sie es ihnen leichter gemacht, sich in normalen Lebenverhältnissen unterzuordnen.

Der Widerstand weitet sich aus auf die moralischen Grundsätze, die in der Heiligen Schrift festgelegt sind. Die jungen Rebellen verhöhnen die göttlichen Gebote zur Reinheit und leben ungebunden und rücksichtslos dahin. Sie zeigen eine tiefe Verachtung für alles, was gut ist, und eine Liebe zu allem, was unnatürlich, obszön und scheußlich ist.

Und schließlich erschweren Eltern, die dem Eigenwillen ihres Kindes nicht frühzeitig durch Strafen Einhalt gebieten, es ihrem Kind, den Weg zur Errettung zu finden. Denn zur Bekehrung gehört ja auch der Zerbruch, die Aufgabe des Eigenwillens, der gegen die Herrschaft Gottes aufbegehrt. Deshalb hat Susannah Wesley gesagt: »Eltern, die sich bemühen, den Eigenwillen ihres Kindes zu unterdrücken, arbeiten mit Gott zusammen in der Erneuerung und Errettung seiner Seele. Doch Eltern, die ihr Kind gewähren lassen, tun damit die Arbeit des Teufels, machen die
Religion undurchführbar, die Errettung unerreichbar und tun alles, um ihr Kind mit Leib und Seele für immer zu verdammen.«