September

கிறிஸ்தவ நம்பிக்கையின் மேன்மைகள்

September 15

“Hope maketh not ashamed; because the love of God is shed abroad in our hearts by the Holy Ghost which is given unto us.” (Rom. 5:5)

Sometimes words in the Christian vocabulary have a different meaning than they have in ordinary usage. “Hope” is one of those words.

As far as the world is concerned, to hope often means to look forward to something unseen but with no certainty of fulfillment. A man in deep financial trouble may say, “I hope everything will turn out all right,” but he has no assurance that it will. His hope may be nothing but wishful thinking. The Christian hope also looks forward to something unseen, as Paul reminds us in Romans 8:24: “Hope that is seen is not hope: for what a man seeth, why doth he yet hope for?” All hope deals in the realm of the future.

But what makes the Christian hope different is that it is based on the promise of the Word of God and is therefore absolutely certain. “We have this hope as an anchor for the soul, firm and secure” (Heb. 6:19 NIV). Hope is “faith laying hold of God’s Word and living in the present assurance of what God has promised or predicted” (Woodring). “Notice that I am using hope to mean ‘certainty.’ Hope in Scripture refers to future events that will happen come what may. Hope is not a delusion to buoy our spirits and keep us going forth blindly to an inevitable fate. It is the basis of all Christian living. It represents ultimate reality” (John White).

Because the believer’s hope is based on God’s promise, it can never lead to shame or disappointment (Rom. 5:5). “Hope without God’s promises is empty and futile, and often even presumptuous. But based on the promises of God, it rests upon His character and cannot lead to disappointment” (Woodring).

The Christian hope is spoken of as a good hope. Our Lord Jesus and God our Father have loved us and have given us “everlasting consolation and good hope through grace” (2 Th. 2:16).

It is called a blessed hope, referring particularly to the coming of Christ: “Looking for that blessed hope and the glorious appearing of the great God and our Savior Jesus Christ” (Tit. 2:13).

And it is called a living hope. “In his great mercy he has given us new birth into a living hope through the resurrection of Jesus Christ from the dead” (1 Pet. 1:3 NIV).

The Christian’s hope enables him to endure seemingly endless delays, tribulation, persecution, and even martyrdom. He knows that these experiences are only pinpricks compared to the coming glory.

செப்டெம்பர் 15

நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்படியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. ரோமர் 5:5

கிறிஸ்தவ நம்பிக்கையின் மேன்மைகள்

சிலவேளைகளில், கிறிஸ்தவர்களால் குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தப்படுகிற சொற்கள், மற்றவர்களால் வேறுபொருளில் பயன்படுத்தப்படுகின்றன. ‘நம்பிக்கை” என்னும்சொல் அதற்கொரு எடுத்துக்காட்டாகும்.

இவ்வுலகத்தைப் பொருத்தமட்டில், காணாத ஒன்றை எதிர் நோக்குவது நம்பிக்கையாகும். ஆனாலும் அது நடக்குமா நடக்காதா என்ற உறுதியற்ற தன்மை அந்த நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். பொருளாதாரச் சிக்கலில் அகப்பட்டுக்கொண்ட ஒருவன் ‘எல்லாம் சரியாகி விடும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறுகிறான். என்றாலும் அவ்வாறு நடக்கும் என்ற உறுதி அவனுக்கு இல்லை. அவனுடைய விருப்பத்தின் நினைவுகளே அந்த நம்பிக்கையாகும். கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையும் இதுபோன்று காணாதவற்றை எதிர்நோக்குவதாக இருக்கிறது. இதனை, ‘காணப்படுகிறதை நம்புவது நம்பிக்கையல்ல, ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? என்று பவுல் நினைவுபடுத்துகிறார். எல்லா நம்பிக்கையும் வருங்காலத்திற்கு உரியதாயிருக்கிறது.

ஆனால் கிறிஸ்தவர்களது நம்பிக்கை தேவனுடைய வார்த்தைகளில் உள்ள வாக்குறுதியைச் சார்ந்ததாயிருக்கிறது. ஆகவே அது நடைபெறுவது உறுதி என்பதே மற்றவர்களுடைய நம்பிக்கையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ‘அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” (எபி.6:19). ‘தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொள்ளும் விசுவாசம், மேலும் தேவன் வாக்குரைத்தவை மற்றும் முன்னுரைத்தவை ஆகியவை இன்று தரும் உறுதியில் வாழ்வது என்பதே நம்பிக்கையாகும்.” என்று வுட்ரிங் என்பார் கூறியுள்ளார். நம்பிக்கை என்னும் சொல்லை |நிச்சயம்| என்னும் பொருளில் பயன்படுத்துவதைக் கவனியுங்கள். என்னவாயினும், எதிர் காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளையே வேதம் நம்பிக்கை என்று கூறுகிறது. நம்பிக்கை என்பது நம்முடைய ஆவிக்கு உற்சாகமூட்டும் மாயத்தோற்றமல்ல. தவிர்க்க முடியாத விளைவுகளை அடையம்படி கண்களை மூடிக்கொண்டு நடக்கச் செய்கிற ஏமாற்று வேலையுமல்ல. கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படையாக நம்பிக்கை விளங்குகிறது. முடிவாக உண்மை நிலையை நம்பிக்கையானது சுட்டிக் காட்டுகிறது.” (ஜான் வொய்ட்).

விசுவாசிகளுடைய நம்பிக்கை தேவனுடைய வாக்குறுதியைச் சார்ந்திருப்பதால், அது ஏமாற்றத்திற்கோ, அவமானத்திற்கோ, அவர்களை வழிநடத்தாது (ரோமர்5:5). ‘தேவன் தருகிற வாக்குறுதியின்றி கொள்கிற நம்பிக்கை வெறுமையும், வீணுமாகும். பெரும்பாலும் அது அளவிற்குமீறிய அகந்தையாகக் காணப்படும். ஆனால், தேவனுடைய வாக்குறுதியின் அடிப்படையில் கொண்டிருக்கிற நம்பிக்கை அவருடைய பண்பைச் சார்ந்திருக்கிறது. அது ஏமாற்றத்தை உண்டாக்குவதில்லை.” (வுட்ரிங்).

கிறிஸ்தவர்களது நம்பிக்கை நல்நம்பிக்கை என்றழைக்கப்படுகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனும் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, ‘நித்திய ஆறுதலையும், நல்நம்பிக்கையையும், கிருபையாய் நமக்குக் கொடுத்துள்ளார்.” (2.தெச.2:16).

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்திற்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர் பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது”. என்பதால் இந்த நம்பிக்கை, குறிப்பாக இயேசு கிறிஸ்துவின் வருகையின் மீது கொண்டுள்ள நம்பிக்கை ஆனந்த பாக்கியம் என்றழைக்கப்படுகிறது. (தீத்து 2:13).

இது ஐPவனுள்ள நம்பிக்கை என்றழைக்கப்படுகிறது. ‘அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, ஐPவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே மறுபடியும் nஐநிப்பித்தார்.” (1.பேது.1:4)

முடிவேயில்லை என்று தோன்றுகிற கால தாமதத்தையும், உபத்திரவத்தையும், பாடுகளையும், உயிர்த்தியாகத்தையும், பொறுமையோடு சகிக்கும் திறனை கிறிஸ்தவ நம்பிக்கை அளிக்கிறது. இந்த அனுபவங்கள் யாவும் வரப்போகிற மகிமையோடு ஒப்பிடுங்கால் வெறும் முள்குத்துவது போன்றதே என்று விசுவாசி அறிவான்.

15. September

»Die Hoffnung aber lässt nicht zuschanden werden, denn die Liebe Gottes ist ausgegossen in unsere Herzen durch den Heiligen Geist, der uns gegeben worden ist.« Römer 5,5

Manchmal haben Begriffe im Wortgebrauch der Christen einen anderen Sinn als in der Umgangssprache. »Hoffen« ist einer davon.

Im weltlichen Bereich bedeutet »hoffen« meist, sich auf etwas noch nicht Sichtbares zu freuen, wobei die Erfüllung dieser Hoffnung keineswegs sicher ist. Ein Mann, der in tiefen finanziellen Schwierigkeiten steckt, sagt vielleicht: »Ich hoffe doch, dass noch alles gut wird.« Aber er hat keine Gewissheit, dass es auch wirklich so wird. Seine Hoffnung ist vielleicht nichts anderes als Wunschdenken. Die christliche Hoffnung freut sich auch auf etwas, was noch unsichtbar ist, wie Paulus uns in Römer 8,24 sagt: »Eine Hoffnung aber, die gesehen wird, ist keine Hoffnung. Denn
wer hofft, was er sieht?« Alle Hoffnung hat jedenfalls mit der Zukunft zu tun.

Aber was die christliche Hoffnung von allem anderen unterscheidet, ist, dass sie sich auf die Verheißungen im Worte Gottes gründet und daher absolut gewiss sein kann. »Diese Hoffnung haben wir als einen sicheren und festen Anker der Seele« (Hebräer 6,19). Woodring sagt: »Hoffnung ist Glaube, der sich auf Gottes Wort verlässt und in der gegenwärtigen Sicherheit lebt, dass das, was Gott versprochen oder vorhergesagt hat, auch eintrifft.« Und John White hat geschrieben: »Sie werden merken, dass ich Hoffnung im Sinne von ›Gewissheit‹ gebrauche. Die Hoffnung in der
Heiligen Schrift bezieht sich auf zukünftige Ereignisse, die eintreffen werden, ganz gleich, was kommt. Sie ist keine Vorspiegelung, die unsere Laune wieder bessern soll und uns bei der Stange hält, damit wir weiter blind einem unausweichlichen Schicksal entgegengehen. Sie ist vielmehr die Grundlage allen christlichen Lebens. Sie stellt die letzte Wirklichkeit dar.«

Weil sich die Hoffnung des Glaubenden auf die Verheißungen Gottes gründet, kann sie niemals zuschanden werden oder in Enttäuschung untergehen. Woodring sagt: »Eine Hoffnung ohne die Versprechen Gottes ist leer und nichtig und oft auch überheblich. Aber wenn sie sich auf Gottes Verheißungen gründet, verlässt sie sich auf Seine Treue und kann gar nicht enttäuscht werden.«

Die christliche Hoffnung ist eine gute Hoffnung. Unser Herr Jesus Christus und Gott, unser Vater, lieben uns und haben uns »in Gnade ewigen Trost und gute Hoffnung « gegeben (siehe 2. Thessalonicher 2,16).

Sie wird auch eine glückselige Hoffnung genannt, besonders in Bezug auf das Wiederkommen des Herrn: »… indem wir die glückselige Hoffnung und Erscheinung der Herrlichkeit unseres großen Gottes und Heilandes Jesus Christus erwarten« (Titus 2,13).

Und schließlich ist es auch eine lebendige Hoffnung. »… der nach seiner großen Barmherzigkeit uns wiedergeboren hat zu einer lebendigen Hoffnung durch die Auferstehung Jesu Christi aus den Toten« (1. Petrus 1,3).

Die Hoffnung befähigt den Christen dazu, schier endloses Warten, Mühsal, Verfolgung und sogar das Martyrium auszuhalten. Denn er weiß, dass alle solche Erfahrungen nichts weiter sind als Nadelstiche, verglichen mit der kommenden Herrlichkeit.