September

நாம் யாரைப் பணிந்து கொள்ளுகிறோம்

September 17

“And he causeth all, both small and great, rich and poor, free and bond, to receive a mark in their right hand, ofrin their foreheads: and that no man might buy or sell, save he that had the mark, or the name of the beast, or the number of his name.” (Rev. 13:16, 17)

The mark of the beast! During the Tribulation period a powerful and evil ruler will arise, ordering all people to receive a mark in their forehead or in their right hand. Those who refuse will suffer the wrath of the beast. Those who submit will suffer the wrath of God. Those who refuse will reign with Christ in His millennial glory. Those who submit will be tormented with fire and brimstone in the presence of the holy angels, and in the presence of the Lamb.

As we read this, we can feel quite detached from it all, knowing that it belongs to the future, and believing that the Church will be raptured home to heaven in the meantime. And yet there is a sense in which the mark of the beast is with us now. There are times in life when we are forced to choose between loyalty to God and bowing to a system that is opposed to God.

There are times when, in order to gain employment, for instance, we are asked to accept conditions that are clearly contrary to divine principles. It is easy to rationalize at such times. Unless we can work, we can’t buy groceries. And unless we can get food, we can’t survive. And we have to live, don’t we? Under this false excuse, we agree to the demands and, in effect, take the mark of the beast.

Whatever threatens our food supply or our continued existence throws us into panic, and we are tempted to sacrifice almost anything to avert that threat. The same arguments that men will use to justify worshiping the image in the Tribulation period are the arguments that present themselves to us today when we must choose between God’s truth and our own lives.

The idea that we must live is false. What we must do is obey God and love not our lives unto death.

F. W. Grant wrote, “On the coin for which we sell the truth, there is at all times, faint as it may be, the image of Antichrist.” So the question is not, “Would I refuse to take the mark of the beast if I were living in the Tribulation?” but rather “Do I refuse to sell the truth now?”

செப்டெம்பர் 17

அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறுறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. வெளி:13:16,17.

நாம் யாரைப் பணிந்து கொள்ளுகிறோம்

மிருகத்தின் முத்திரை! மகா உபத்திரவ நாட்களில் மிகுந்த வல்லமையும் கொடூரமும் நிறைந்த ஒருவன் அரசாட்சி செய்வான். எல்லா மனிதர்களும் தங்களுடைய நெற்றிகளிலாவது வலது கைகளிலாவது ஒரு முத்திரையைப் பெறவேண்டுமென்று கட்டளையிடுவான். மறுத்துரைப்போர் மிருகத்தின் கோபத்தைச் சந்திக்க வேண்டும். மிருகத்தின் ஆணைக்குக் கீழ்ப்படிவோர், தேவனுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும். மறுத்துரைப்போர் கிறிஸ்துவின் மகிமை நிறைந்த ஆயிரமாண்டு ஆட்சியில் அவரோடுகூட அரசாளுவர். மிருகத்தின் ஆணைக்கு கீழ்ப்படிவோர் யாவரும் தூய தேவதூதர்கள் மற்றும் ஆட்டுக்குட்டியானவருடைய முன்னிலையில் தீயிலும் கந்தகத்திலும் வேதனையடைவர்.

இதனை நாம் படிக்குங்கால், இவையாவும் எதிர்காலத்தில் நடக்கப்போகிறவை, அதற்குமுன் சபையானது விண்ணுலகிற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக, இதற்கும் நமக்கும் சம்பந்தமும் இல்லையென்று நடந்துகொள்கிறோம். என்றாலும், ஒரு வகையில் மிருகத்தின் முத்திரை நம்மோடுகூட இப்பொழுது இருக்கிறது. தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக நடந்து கொள்வதா அல்லது தேவனுக்கு எதிரான முறைமைகளுக்குத் தலை வணங்குவதா, எதைத் தெரிந்துகொள்வது என்று கட்டாயப்படுத்தும் சூழ்நிலைகள் வாழ்க்கையில் ஏற்படுவதுண்டு.

எடுத்துக்காட்டாக, ஒரு வேலையை ஏற்றுக்கொள்ளும்போது தெய்வீகக் கொள்கைக்கு மாறுபட்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பகுத்தறிவு எது என்று விளக்கமளிப்பது எளிது. நாம் வேலை செய்யவில்லையெனில், மளிகைப் பொருட்களை வாங்கமுடியாது. உணவு உண்ணவில்லையெனில் நாம் வாழமுடியாது. நாம் வாழ வேண்டும், இல்லையா? இவ்வாறு தவறான காரணங்களைக் காட்டி, நிபந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோம். உண்மையில், மிருகத்தின் முத்திரையை ஏற்றுக்கொள்கிறோம்.

உணவுப்பொருட்கள் கிடைப்பதையும், தொடர்ந்து நாம் வாழ்வதையும் எது அச்சுறுத்தினாலும், உடனடியாக நாம் பீதியடைகிறோம். அந்த அச்சத்திலிருந்து விடுபட எதையும் தியாகம்செய்ய முன்வருகிறோம். தேவனுடைய வாழ்க்கை உண்மையா, அல்லது சொந்த வாழ்க்கையா எதைத் தொரிந்துகொள்வது என்ற கேள்வி அவ்வப்போது எழுகிறது. உபத்திரவக் காலத்தில் சொரூபத்தைப் பணிந்துகொள்வதை நியாயப்படுத்த என்னென்ன வாதம் செய்வார்களோ, அவற்றையே அப்படிப்பட்ட நேரங்களில் நம்மோடு வாதிடுகிறவர்கள் நம்முன் வைக்கிறார்கள்.

நாம் கட்டாயமாக வாழ வேண்டும் என்னும் கருத்து தவறானதாகும். தேவனுக்குக் கீழ்படிவதையே நாம் தெரிந்து கொள்ளவேண்டும். மரணத்திற்கென்று வாழ்வதை நாம் விரும்பலாகாது.

‘சத்தியத்தை விற்று நாம் காசைப் பெறுகிற எல்லாவேளைகளிலும் அந்திக் கிறிஸ்துவின் சொரூபம், மிக மங்கலாகவேனும் எளிதில் தொரியும்” என்று F. W. கிராண்ட் என்பார் எழுதியுள்ளார். ‘உபத்திரவ காலத்தில் வாழ்வேனாயின் மிருகத்தின் முத்திரையை நிராகரிக்க வேண்டுமா?” என்று கேள்விகேட்க வேண்டியதில்லை. மாறாக, இக்காலத்தில் சத்தியத்தை விற்பதற்கு நான் மறுப்பைத் தெரிவிக்க வேண்டுமல்லவா?” என்றே கேட்போமாக.

17. September

»Und es bringt alle dahin, die Kleinen und die Großen, und die Reichen und die Armen, und die Freien und die Sklaven, dass man ihnen ein Malzeichen an ihre rechte Hand oder an ihre Stirn gibt; und dass niemand kaufen oder verkaufen kann, als nur der, welcher das Malzeichen hat, den Namen des Tieres oder die Zahl seines Namens.« Offenbarung 13,16.17

Das Malzeichen des Tieres! In der Zeit der großen Trübsal wird ein mächtiger und böser Herrscher aufstehen, der befiehlt, dass alle Menschen ein Zeichen auf ihre Stirn oder an ihre rechte Hand bekommen müssen. Diejenigen, die sich dann weigern, werden den Zorn des Tieres zu spüren bekommen. Und die, die sich fügen, werden den Zorn Gottes zu erleiden haben. Die, die sich weigern, werden mit Christus zusammen im Tausendjährigen Reich regieren. Die, die sich fügen, werden mit Feuer und Schwefel gequält werden vor den heiligen Engeln und vor dem Lamm.

Wenn wir das lesen, scheint uns alles vielleicht weit entfernt; wir wissen, dass das erst in ferner Zukunft geschehen wird, und wir glauben, dass die Gemeinde bis dahin schon längst in den Himmel entrückt worden ist. Und doch ist das Zeichen des Tieres in einem bestimmten Sinn schon heute bei uns zu finden. Es gibt Zeiten im Leben, wo wir gezwungen sind, uns zu entscheiden zwischen der Treue zu Gott und der Verbeugung vor einem System, das sich dem Herrn entgegenstellt.

Es gibt beispielsweise Zeiten, in denen wir dringend eine Arbeitsstelle suchen und bei der Bewerbung gebeten werden, Bedingungen zu akzeptieren, die in klarem Gegensatz zu göttlichen Grundsätzen stehen. In solchen Zeiten fällt uns das Argumentieren nicht schwer: Wenn wir keine Arbeit haben, können wir keine Lebensmittel kaufen. Und wenn wir nichts zu essen bekommen, können wir nicht überleben. Und wir müssen doch schließlich leben, oder? Mit diesen falschen Entschuldigungen willigen wir in die Forderungen ein, und so erhalten wir tatsächlich das Zeichen des Tieres.

Alles, was unsere Lebensmittelversorgung oder die Fortdauer unserer Existenz bedroht, lässt uns panisch reagieren, und dann sind wir versucht, fast alles zu opfern, nur um diese Bedrohung abzuwenden. Die Argumente, die Menschen später einmal in der Zeit der großen Trübsal benutzen werden, um zu rechtfertigen, dass sie das Bild angebetet haben, sind genau dieselben
wie die, die sich uns heute anbieten, wenn wir uns zwischen Gottes Wahrheit und unserem eigenen Leben entscheiden müssen.

Die Vorstellung, dass wir unter allen Umständen leben müssen, ist falsch. Wir müssen vielmehr Gott gehorchen und nicht unser eigenes Leben bis zum Tod lieben.

F.W. Grant hat geschrieben: »Auf der Münze, für die wir die Wahrheit verkaufen, ist immer, mag es auch nur ganz schwach erkennbar sein, das Bild des Antichristen eingeprägt.« So lautet die Frage also nicht: »Würde ich wohl widerstehen können und das Zeichen des Tieres nicht annehmen, wenn ich in der Zeit der großen Trübsal leben würde?« Sie heißt vielmehr: »Weigere ich mich schon heute, die Wahrheit zu verkaufen?«