September

இயேசுவைக் காணவில்லை

September 12

“But they, supposing him to have been in the company, went a day’s journey.” (Luke 2:44)

When Jesus was twelve, His parents and He went from Nazareth to Jerusalem to keep the Feast of the Passover. Doubtless they traveled with a large crowd of other pilgrims. It was inevitable that boys of the same age would pal together during the festivities. Therefore, on the return trip to Nazareth, Joseph and Mary assumed that Jesus was with the other young people somewhere in the caravan. But He wasn’t. He had stayed behind in Jerusalem. They traveled for a full day before they missed Him. Then they had to backtrack to Jerusalem where they found Him after three days.

There is a lesson in this for us all. It is possible for us to suppose Jesus is in our company when He is not. We may think that we are walking in fellowship with Him when actually sin has come between our souls and the Savior. Spiritual decline is subtle. We are not conscious of our coldness. We think that we are the same as ever.

But other people can tell. They can tell by our talk that we have drifted away from our first love and that worldly interests have taken precedence over the spiritual. They can detect that we have been feeding on the leeks, the onions and the garlic of Egypt. They notice that we have become critical whereas once we were loving and kind. They notice that we use a lot of street talk instead of the language of Zion. Whether they notice it or not, we have lost our song. We are unhappy and miserable ourselves and tend to make other people miserable too. Nothing seems to go right. Money leaks out of our pockets. If we try to witness for the Savior, we have little impact on others. They don’t see that much difference between themselves and us.

Usually it takes a crisis of some kind to reveal to us that Jesus is not in our company. It may be that we hear God’s voice speaking to us through some anointed preaching. Or a friend might put an arm around us and confront us with our low spiritual condition. Or it may be a sickness, the death of a loved one, or some tragedy that brings us to our senses.

When that happens, we have to do what Joseph and Mary did—go back to the place where we last saw Him. We have to go back to the place where some sin broke our fellowship with Him. By confessing and forsaking our sin, we find forgiveness, and begin traveling with Jesus in our company once more.

செப்டெம்பர் 12

அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்தனர். லூக்.2:44

இயேசுவைக் காணவில்லை

இயேசு கிறிஸ்துவுக்கு பன்னிரண்டு வயதாகும்போது, பஸ்கா பண்டிகையை ஆசரிக்கும்படி அவருடைய பெற்றோர்களும் அவரும் நாசரேத்திலிருந்து எருசலேமுக்குச் சென்றனர். பெரும் திரளான பயணிகளுடன் அவர்கள் சென்றிருப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. விழாக்காலங்களில் அவருடைய வயதுச் சிறுவர்கள் தோழமையுடன் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆகையால் ஊருக்குத் திரும்பும்வேளையில் இயேசு கிறிஸ்து தம் வயது இளைஞர்களோடு சேர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பார் என்று யோசேப்பும் மரியாளும் எண்ணிக்கொண்டனர். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் எருசலேமிலேயே தங்கிவிட்டார். அவரைக் காணவில்லை என்று அறிவதற்குள் ஒரு முழுநாள் பயணத்தை முடித்துவிட்டனர். அவர்கள் மீண்டும் எருசலேமிற்குச் சென்று மூன்றுநாள் கழித்து அவரை அங்கே கண்டுபிடித்தனர்.

நம் யாவருக்கும் இதில் ஒரு படிப்பினை உள்ளது. இயேசு கிறிஸ்து நம்மோடு கூட இல்லாதபோது, அவர் நம்மோடு இருப்பதாக எண்ணிக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட வாய்ப்புண்டு. அவரோடு கூட ஐக்கியம் கொண்டவர்களாக நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்று நினைப்போம். உண்மையில் நமது ஆத்துமாவிற்கும் நமது இரட்சகருக்கும் இடையே பாவம் நுழைந்திருக்கும். ஆவிக்குரிய வீழ்ச்சி சாதுரியமாகச் செயல்புரியும். நாம் குளிர்ந்து போயிருப்பதை அறியாதிருப்போம். எப்பொழுதும் போலவே இருக்கிறோம் என்றே நாம் நினைக்கிறோம்.

ஆனால் நமது நிலையைக் குறித்து மற்றவர்களால் சொல்ல முடியும். ஆதி அன்பைவிட்டு நாம் விலகிச்சென்று விட்டோம் என்பதை நம்முடைய பேச்சைக் கொண்டு அவர்களால் சொல்ல முடியும். ஆவிக்குரிய விருப்பங்களை விடுத்து, உலகீய விருப்பங்களில் நாம் நாட்டம் உடையவர்களாயிருக்கிறோம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். நாம் எகிப்தின் பூண்டுகளிலும், வெங்காயங்களிலும், வெள்ளரிக்காய்களிலும், நமது பசியை ஆற்றிக் கொண்டிருப்பதையும் கண்டு பிடிப்பார்கள். நாம் அன்பு செலுத்துகிறவர்களாகவும், இரக்கம் பாராட்டுகிறவர்களாகவும் இருந்தோம். ஆனால் இப்பொழுதோ குறைகூறுகிறவர்களாக மாறிவிட்டோம் என்பதை அவர்கள் கவனிக்கின்றனர். சீயோனின் மொழியைப் பேசுவதற்கு மாறாக, தெருப்பேச்சைப் பேசுகிறவர்களாக இருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கின்றனர். அவர்கள் கவனிக்கின்றாhகளோ இல்லையோ, நமது கீதத்ததை இழந்தவர்களாயிருப்போம். மகிழ்ச்சி அற்றவர்களாகவும், துயர் அடைந்தவர்களாகவும், நாம் இருப்பதோடு மற்றவர்களையும் அவ்விதமாக மாற்றிவிடுகிறோம். ஏதொன்றும் சரியாக நடப்பதில்லை. நமது கையைவிட்டுப் பணம் செலவழிந்து போகிறது. இரட்சகருக்காக நாம் சான்றுபகர முயற்சி செய்தாலும் அதில் யாரும் தொடப்படுவதில்லை. அவர்கட்கும் நமக்கும் எவ்வித வேறுபாட்டையும் அவர்கள் காண்பதில்லை.

இயேசு கிறிஸ்து நம்மோடுகூட இல்லை என்பதை நமக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஏதோவொரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதுண்டு. ஆவியின் நிறைவோடுகூடிய ஒரு பிரசங்கத்தின் மூலம் தேவனுடைய சத்தத்தைக் கேட்போம். அல்லது ஒரு நண்பர் நமது தோளில் கையைப்போட்டுக் கொண்டு, நமது ஆவிக்குரிய வீழ்ச்சியை உணர்த்தும்படி பேசுவார். அல்லது அது ஒரு நோயாக இருக்கலாம். பிரியமானவருடைய மரணமாகவும் இருக்கலாம். அல்லது ஒரு விபத்து நம்மை நம்முடைய சுயநினைவிற்குக் கொண்டுவரும்.

அவ்வேளையில், யோசேப்பும் மரியாளும் செய்ததைப்போன்று நாமும் செய்ய வேண்டும். எங்கே அவரைக் கடைசியில் சந்தித்தோமோ, அங்கே சென்று பார்க்கவேண்டும். அவரோடுகூட நாம் கொண்டிருந்த ஐக்கியத்தை எந்தப் பாவம் முறித்து விட்டதோ, அந்த இடத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். பாவத்தை அறிக்கையிட்டு, விட்டுவிலகுவதால் பாவமன்னிப்பை நாம் கண்டடைவோம். இயேசு கிறிஸ்துவோடு மீண்டும் இணைந்து ஐக்கியம் கொண்டவர்களாக நடந்து செல்வோம்.

12. September

»Da sie aber meinten, er sei unter der Reisegesellschaft, kamen sie eine Tagereise weit und suchten ihn unter den Verwandten und Bekannten.« Lukas 2,44

Als Jesus zwölf Jahre alt war, gingen seine Eltern mit ihm von Nazareth nach Jerusalem, um das Passahfest zu feiern. Sicher wanderten sie zusammen mit einer großen Menge anderer Pilger. Dabei war es selbstverständlich, dass Jungen im selben Alter sich während der Festtage miteinander anfreundeten. Daher nahmen Joseph und Maria auf der Rückreise zunächst an, dass Jesus irgendwo in dem großen Zug bei den anderen jungen Leuten wäre. Aber da war er nicht. Er war in Jerusalem geblieben. Sie wanderten einen ganzen Tag lang, bevor sie ihn überhaupt vermissten. Dann mussten sie den Weg zurückgehen nach Jerusalem, wo sie ihren Sohn schließlich nach drei Tagen wiederfanden.

Es gibt hierbei für uns alle etwas zu lernen: Es ist durchaus möglich, dass wir selbstverständlich meinen, Jesus würde uns begleiten, und es ist gar nicht so. Wir glauben vielleicht, wir lebten in Gemeinschaft mit Ihm, und in Wirklichkeit hat sich schon die Sünde zwischen uns und den Heiland gedrängt. Der Abfall vom Glauben geht ganz unmerklich vor sich. Wir sind uns dann gar nicht bewusst, dass sich unsere Liebe zu Ihm mit der Zeit abgekühlt hat. Wir denken, wir wären noch genauso wie früher.

Aber andere Menschen können uns darauf aufmerksam machen. Sie stellen an unserem Reden fest, dass wir uns von unserer ersten Liebe weit entfernt haben und dass weltliche Interessen die Oberhand über die geistlichen gewonnen haben. Sie können entdecken, dass wir uns schon länger von den Fleischtöpfen Ägyptens ernähren. Sie merken, dass wir dort kritisch geworden
sind, wo wir früher liebevoll und freundlich waren. Sie hören, dass wir eher die Sprache der Straße reden als die des Volkes Gottes. Und ob sie es merken oder nicht, wir haben die Lust am Singen verloren. Wir sind selbst unglücklich und elend und neigen dazu, auch andere Menschen unglücklich zu machen. Nichts scheint mehr richtig zu klappen. Das Geld rinnt uns
durch die Finger. Und wenn wir versuchen, ein Zeugnis für den Heiland abzulegen, dann machen wir nur wenig Eindruck auf andere. Denn sie sehen gar nicht so viel Unterschied zwischen sich und uns.

Normalerweise ist dann irgendeine Art von Krise nötig, um uns darauf zu stoßen, dass Jesus gar nicht mehr bei uns ist. Es kann sein, dass wir plötzlich Gottes Stimme hören, die uns in einer besonders gesegneten Predigt anspricht. Oder ein Freund legt uns den Arm um die Schulter und zeigt uns unsere armselige geistliche Verfassung auf. Oder vielleicht ist es eine Krankheit, der Tod eines lieben Menschen oder irgendein tragisches Ereignis, das uns wieder zur Besinnung bringt.

Wenn das geschieht, müssen wir genau dasselbe tun, was Joseph und Maria taten – zurückgehen bis zu dem Ort, an dem wir Jesus zuletzt gesehen haben. Wir müssen an die Stelle zurück, an der irgendeine Sünde unsere Gemeinschaft mit Ihm zerbrochen hat. Und wenn wir unsere Sünde bekennen und uns von ihr abwenden, finden wir auch Vergebung, und dann beginnen wir die Reise von neuem, aber diesmal in Gemeinschaft mit Jesus.