September

கிறிஸ்துவின் தொடர்பினால் உண்டாகும் பிரகாசம்

September 13

“Moses did not know that the skin of his face shone because of his speaking with him.” (Ex. 34:29 NASB)

When Moses came down from Mount Sinai with the stone tablets containing the Ten Commandments, there were two remarkable features. First of all, his face shone. He had been in the presence of the Lord, who revealed Himself in a bright, shining glory cloud known as the Shekinah. The radiance on the face of Moses was a borrowed glow. After speaking with God, the lawgiver carried away some of the splendor and effulgence of the glory. It was a transfiguring experience.

The second notable feature was that Moses did not know that his face was luminous. He was totally unconscious of the unique cosmetic he carried away from communion with the Lord. F. B. Meyer comments that that was the crowning glory of that transfiguration—the fact that Moses was unaware of it.

There is a sense in which Moses’ experience can be ours. When we spend time in the presence of the Lord, it shows. It may actually show in our faces, because there is a close link between the spiritual and the physical. But I do not press the physical, because some cultists often have very benign faces. The important point is that communion with God transfigures a person morally and spiritually. That is what Paul teaches in 2 Corinthians 3:18: “But we all, with open face beholding as in a glass the glory of the Lord, are changed into the same image from glory to glory, even as by the Spirit of the Lord.”

But the crowning glory of that transfiguration is that we ourselves are not conscious of it. Others can tell. They take knowledge of us that we have been with Jesus. But the change is hidden from our own eyes.

How is it that we are blissfully unaware that the skin of our face is shining? The reason is this: The closer we are to the Lord, the more we are aware of our sinfulness, our unworthiness, our wretchedness. In the glory of His presence, we are led to self-abhorrence and deep repentance.

If we were conscious of our own radiance, that would lead to pride and the radiance would instantly be replaced with repugnance, because pride is repugnant.

So it is a blessed circumstance that those who have been on the mount with the Lord and who carry away the borrowed glow do not realize that the skin of their face is shining.

செப்டம்பர் 13

தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். யாத்திராகமம் 34:29

கிறிஸ்துவின் தொடர்பினால் உண்டாகும் பிரகாசம்

பத்துக் கற்பனைகள் அடங்கிய இரண்டு பலகைகளைப் பெற்றுக்கொண்டவனாக, மோசே சீனாய் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்கள் நிகழ்ந்தன. முதலாவது, மோசேயின் முகம் பிரகாசித்தது. கர்த்தருடைய சமூகத்தில் அவன் இருந்தான். ஒளிபொருந்திய மகிமை பிரகாசிக்கக் கூடிய சேக்கினா என்னும் மேகத்தின் மூலமாக அவர் தம்மை அவனுக்கு வெளிப்படுத்தினார். மோசேயின் முகத்தில் தோன்றிய பிரகாசம் அவனுக்குச் சொந்தமானதன்று. தேவனோடு உரையாடிய பிறகு, சிறிதளவு ஒளியையும் மகிமையின் பிரகாசத்தையும் மோசே எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். இது மறுரூபம் ஆகிறதின் அனுபவமாகும்.

குறிப்படத்தக்க இரண்டாவது அம்சம் யாதெனில், அவனுடைய முகம் ஒளிபொருந்தியதாக விளங்கிற்று என்பதை அறியாதிருந்ததேயாகும். கர்த்தரோடு தான் கொண்டிருந்த தொடர்பினால் கிடைத்த ஒப்பனையை அவன் பெற்று வந்திருப்பதைக் குறித்து எவ்வித உணர்வும் அற்றவனாகக் காணப்பட்டான். அதனை மோசே அறியவில்லை. இது மறுரூபமாகுதலின் மகுடம் போன்ற அனுபவம் என்று க.டி மேயர் தமது கருத்தினை வழங்கியுள்ளார்.

ஒருவிதத்தில் மோசேயின் அனுபவம் நம்முடைய அனுபவமாக அமையக்கூடும். கர்த்தருடைய சமூகத்தில் நமது நேரத்தைச் செலவிடும்போது, அது காட்சியளிக்கும். ஆவிக்குரியவற்றுக்கும், சரீரத்திற்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருக்கிற காரணத்தால் அது நம்முடைய முகங்களில் காட்சியளிக்கும். சரீரத் தோற்றத்தைக் குறித்து வலியுறுத்திக்கூற நான் விரும்பவில்லை. ஏனெனில் சில சமயத்தலைவர்களும் கனிவான முகமுடையவர்களாய் இருக்கின்றனர். தேவனோடு கொண்ட தொடர்பினால் ஒருவர் ஒழுக்க ரீதியாகவும், ஆவிக்குரிய வகையிலும் மறுரூபமடைகிறார் என்பதே மிகவும் இன்றியமையாததாகும். அதைத்தான் 2.கொரிந்தியர் 3:18ல் பவுல் கற்றுத் தருகிறார். ‘நாமெல்லாரும் திறந்தமுகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”

ஆயினும், மறுரூபமாகுதலின் மேன்மையான அனுபவத்தை நாம் பெற்றாலும், அதைக்குறித்து உணர்ச்சியற்றவர்களாக இருப்போம். மற்றவர்கள் அதைக்குறித்துச் சொல்வார்கள். நாம் கிறிஸ்துவோடு தொடர்பு கொண்டிருந்தோம் என்பதை அவர்கள் அறிவர். எனினும், அந்த மாற்றம் நம்முடைய கண்களுக்கு மறைக்கப்பட்டிருக்கும்.

நம்முடைய முகம் பிரகாசிக்கிறது என்பதை எவ்வாறு நாம் அறியாதிருக்கிறோம்? அதன் காரணம் இதுவே, நாம் கர்த்தரிடத்தில் மிகவும் நெருங்கும்போது, நமது பாவநிலையை மிகுதியாக அறிவோம். நமது தகுதியற்ற தன்மையையும், வெறுக்கத்தக்க நிலையையும், உணர்வோம். அவருடைய மகிமையின் பிரசன்னத்தில் நம்மையே அருவருக்கக்கூடியவர்களாகவும் ஆழ்ந்த வருத்தம் உடையவர்களாகவும் காணப்படுவோம்.

நமது முகம் பிரகாசிக்கிறது என்ற அறிவு நமக்கு உண்டானால் அது பெருமைக்கு வழிவகுக்கும். உடனடியாகப் பிரகாசம் நின்றுபோய் முரண்பாடான தோற்றமாகவே நமது முகம் காட்சியளிக்கும். ஏனெனில் பெருமை தகுதியற்றதாகும்.

ஆகவே, கர்த்தரோடு நெருங்கிய தொடர்புகொண்டு, அவருடைய பிரகாசத்தில் சிறிதளவு சுமந்து வருகிறவர்கள், தங்களுடைய முகம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதிருப்பதே ஆசீர்வதிக்கப்பட்ட நிலையாகும்.

13. September

»Da wusste Mose nicht, dass die Haut seines Gesichtes strahlend geworden war, als er mit ihm geredet hatte.« 2. Mose 34,29

Als Mose vom Berg Sinai herunterkam mit den Steintafeln in der Hand, auf denen die Zehn Gebote standen, gab es zwei bemerkenswerte Kennzeichen an ihm. Zunächst einmal lag ein Glanz auf seinem Gesicht. Er war in der Gegenwart des Herrn gewesen, der sich in der hellen, strahlenden Wolke der Herrlichkeit offenbart hatte, die unter dem Namen »Schechina « bekannt war. Der Schein auf dem Gesicht des Mose war sozusagen ein verliehener Abglanz. Nach der Unterredung mit Gott trug Mose, der Gesetzgeber, noch etwas von dem Strahlen und Schimmern der
Herrlichkeit an sich. Er hatte eine Erfahrung der Verklärung hinter sich.

Das zweite Kennzeichen war, dass Mose selbst nicht wusste, dass sein Gesicht so leuchtete. Er war sich ganz und gar nicht des einzigartigen Aussehens bewusst, das er in der Gegenwart Gottes angenommen hatte. F.B. Meyer sagt in einem Kommentar dazu, dass die größte Herrlichkeit der Verklärung die Tatsache war, dass Mose selbst überhaupt nichts davon merkte.

In gewisser Hinsicht können wir die gleiche Erfahrung wie Mose machen. Wenn wir eine Zeit in der Gegenwart Gottes verbringen, zeigt sich das. Es kann sich tatsächlich auch in unserem Gesicht ausdrücken, denn es gibt eine enge Verbindung zwischen dem Geistlichen und dem Körperlichen. Aber ich möchte die äußerlichen Anzeichen nicht allzu sehr betonen, denn auch manche Anhänger von sehr zweifelhaften Glaubenskulten haben einen gütigen Gesichtsausdruck. Das Wichtigste ist, dass die Verbindung mit Gott einen Menschen moralisch und geistlich verklärt. Das ist es, was Paulus in 2. Korinther 3,18 meinte: »Wir alle aber schauen mit aufgedecktem Angesicht die Herrlichkeit des Herrn an und werden so verwandelt in dasselbe Bild von Herrlichkeit zu Herrlichkeit, wie es vom Herrn, dem Geist, geschieht.«

Aber die höchste Herrlichkeit einer solchen Verklärung ist die, dass wir selbst nichts davon wissen. Andere werden das merken. Sie erkennen an uns, dass wir mit Jesus zusammen gewesen sind. Aber diese Veränderung ist vor unseren eigenen Augen verborgen.

Wie kommt es, dass wir in seliger Unkenntnis darüber leben, dass die »Haut unseres Gesichtes« so strahlt? Der Grund ist einfach der: Je näher wir dem Herrn sind, desto mehr wird uns unsere Sündigkeit, unsere Unwürdigkeit, unsere Verderbtheit bewusst. Die Herrlichkeit Seiner Gegenwart führt uns zum Erschrecken vor uns selbst und zu tiefer Reue.

Wenn wir uns des Strahlens bewusst würden, hätte das nur Stolz zur Folge, und das Strahlen würde sofort in Widerwärtigkeit verwandelt, denn Stolz ist immer abstoßend.

So ist es ein Segen, dass diejenigen, die mit dem Herrn auf dem Berg gewesen sind und noch den verliehenen Abglanz mit sich tragen, gar nichts davon wissen, dass die »Haut ihres Gesichtes« so strahlt.