October

தேவ அன்பின் வெளிப்பாடு

October 29

“But whoso hath the world’s goods, and beholdeth his brother in need, and shutteth up his compassion from him, how doth the love of God abide in htm?” (1 John 3:17 RV)

In medical circles, it would be unthinkable to have a cure for cancer and not share it with cancer patients throughout the world. To withhold the cure would betray a callous and inhumane lack of compassion.

The Apostle John paints a parallel picture in the spiritual realm. Here is a man, a professing believer, who has accumulated a fair amount of wealth. He lives in luxury, comfort and ease. All around him is a world of enormous spiritual and physical need. Millions throughout the world have never heard the Gospel. They live in darkness, superstition and hopelessness. Many of them are suffering the ravages of famine, war and natural disaster. The man of wealth is oblivious to all this need. He is able to block out the moans of a sobbing, suffering humanity. He could help if he wanted to, but he prefers to hold on to his money.

It is at this point that John drops his bomb. He asks, “How does the love of God abide in him?” The question implies of course, that the love of God does not dwell in him. And if the love of God does not dwell in him, there is valid reason for doubting that he is a true believer.

This is very serious. The church today exalts the man of wealth, appoints him to the board of elders, and points him out to visitors. The sentiment prevails, “It’s nice to see rich Christians.” But John asks, “If he is a real Christian, how can he hold on to all that surplus wealth when so many are starving for bread?”

It seems to me that this verse forces us to one of two courses of action. On the one hand we can reject the plain meaning of John’s words, stifle the voice of conscience and condemn the man who dares preach the message. Or we can receive the word with meekness, use our wealth to meet our brother’s need, and have a conscience void of offense toward God and man. The believer who is satisfied with a modest standard of living so that everything above that can go into the work of the Lord can live at peace with God and with his needy brother.

ஒக்டோபர் 29

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சல் உண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? 1.யோவான் 3:17.

தேவ அன்பின் வெளிப்பாடு

மருத்துவத் துறை வட்டாரத்தில், புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடும் என்பது நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒன்றாகும். உலகம் முழுவதும் புற்றுநோய் நோயாளிகளிடம் இவ்வுண்மையை மருத்துவர்கள் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் ஒருவர் குணப்படுவதைத் தடுத்தி நிறுத்திவைப்பது கொடூரமானதும், பரிவற்ற மனிதத்தன்மையை வெளிப்படுத்துவதுமாயிருக்கிறது.

ஆவிக்குரியவற்றில், இதற்கு இணையான ஒரு சித்திரத்தை அப்போஸ்தலனாகிய யோவான் வரைந்து காட்டுகிறார். இங்கே தன்னை விசுவாசி என்று அறிக்கை செய்கிற ஒருவன், மிகுந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கிறான். சுகபோகமாகவும் எல்லா வசதிகளோடும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனைச் சுற்றிலும், ஆவிக்குரிய மற்றும் சரீரப் பிரகாரமான தேவைகள் மிகுந்த உலகம் இருக்கிறது. உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இதுவரை நற்செய்தியைக் கேட்டதில்லை. இருளிலும், மூடநம்பிக்கையிலும், நம்பிக்கையற்ற நிலையிலும், அவர்கள் வாழ்கின்றனர். பஞ்சம், போர், மற்றும் இயற்கையின் சீற்றம் ஆகியவற்றின் நாசத்திற்கு அவர்களில் பலர் ஆளாகித் துன்புறுகின்றனர். இந்தத் தேவைகள் அனைத்தையும் அச்செல்வந்தன் அசட்டை செய்கிறான். அவர்களுடைய அழுகையையும் தவிப்புகளையும் அவனால் தடுத்து நிறுத்த முடியும். அவன் நினைத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். ஆனால் அவன் தன் செல்வத்தைப் பற்றிக்கொள்கிறான்.

இந்த நேரத்தில்தான் யோவான் ஒரு வெடிகுண்டைப் போடுகிறார், ‘அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுவதெப்படி?” என்னும் கேள்வியை எழுப்புகிறார். அவனிடத்தில் தேவ அன்பு வாசமாயில்லை என்பதே அக்கேள்வியின் விடையாகும். தேவனுடைய அன்பு அவனிடத்தில் நிலைத்திராவிடில், அவன் உண்மையான விசுவாசியில்லை என்று ஐயங்கொள்ளத் தகுதியான காரணங்கள் உள்ளன.

இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். அச்செல்வந்தனை இந்நாட்களில், சபை போற்றிப்புகழ்ந்து, கண்காணிகளில் ஒருவராக நியமிக்கிறது. மற்றவர்களுக்கு அவரை ஒரு மாதிரியாகக் காட்டுகிறது. ‘செல்வந்தனாகிய கிறிஸ்தவர்களைக் காண்பது நல்லது” என்று உள்ளுணர்வு வலியுறுத்துகிறது. ‘அவன் உண்மையான கிறிஸ்தவனானால், தன்னைச் சூழப் பசியினாலும் பஞ்சத்தினாலும் வாடுகிறவர்களுக்கு உதவிசெய்யாமல் எல்லாச் செல்வத்தையும் தனக்கே சொந்தமாகக் கொண்டாடுவானா?” என்று யோவான் கேட்கிறார்.

இரண்டு விதமான நடவடிக்கைகளில் ஒன்றை நாம் எடுக்க வேண்டும் என்று இவ்வசனம் நம்மை வலியுறுத்துவதாக நான் காண்கிறேன். ஒன்று, யோவானுடைய சொற்களின் வெளிப்படையான பொருளை நாம் ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கலாம். மனச்சாட்சியின் சத்தத்தை அடக்கிவிடலாம். இச்செய்தியை வழங்குகிற மனிதனைக் குறைகூறி குற்றப்படுத்தலாம். அல்லது, தாழ்மையுள்ள மனதுடன் இச்செய்திகளை ஏற்று, நம்மடைய சகோதரர்களுடைய தேவையை அறிந்து உதவிசெய்யலாம். அவ்வாறு செய்யுங்கால், தேவனுக்கும் மனிதனுக்கும் எதிரான குற்ற உணர்வு அற்றவர்களாயிருப்போம். ஆரவாரம் பகட்டு ஆகியவற்றிற்கு இடம் கொடுக்காமல் தகுதியானபடி வாழ்ந்து, அதற்கு மேலாக இருக்கிற செல்வத்தையெல்லாம் கர்த்தருடைய பணிக்காகக் கொடுக்கிற விசுவாசி, தேவனோடும் தேவையுள்ள சகோதரனோடும் சமாதானமாக வாழ்கிறான்.

29. Oktober

»Wer aber der Welt Güter hat und sieht seinen Bruder Mangel leiden und verschließt sein Herz vor ihm, wie bleibt die Liebe Gottes in ihm?« 1. Johannes 3,17

In medizinischen Kreisen wäre es undenkbar, dass einer ein Heilmittel für Krebs wüsste und es nicht sofort allen Krebskranken in der Welt mitteilen würde. Denn wenn man dieses Wissen für sich behielte, wäre das gefühllos und unmenschlich.

Der Apostel Johannes zeichnet ein ähnliches Bild im Bereich des Geistlichen. Hier ist ein Mann, ein bekennender Christ, der einen ansehnlichen Reichtum angesammelt hat. Er lebt in Luxus und Bequemlichkeit und lässt es sich wohl sein. Um ihn herum ist eine Welt voll riesiger geistlicher und materieller Not. Millionen in der Welt haben noch nie vom Evangelium gehört. Sie leben in Dunkelheit, Aberglauben und Hoffnungslosigkeit. Viele von ihnen leiden unter Hungersnöten, Kriegen und Naturkatastrophen. Der reiche Mann übersieht alle diese Not einfach. Er ist fähig,
all das Stöhnen und Schluchzen der leidenden Menschheit zu überhören. Er könnte wohl helfen, wenn er wollte, aber er hält sein Geld lieber zusammen.

An dieser Stelle lässt Johannes die Bombe platzen! Er fragt geradeheraus: »Wie bleibt die Liebe Gottes in ihm?« Natürlich wohnt die Liebe Gottes nicht in ihm. Und wenn von ihr nichts mehr zu spüren ist, dann hat man guten Grund, daran zu zweifeln, ob dieser Mann überhaupt noch ein wirklicher Gläubiger ist.

Das ist eine sehr ernste Sache. Die Gemeinde von heute feiert den reichen Mann, beruft ihn in den Kreis der Ältesten der Gemeinde, zeigt ihn den Besuchern vor. Es herrscht die allgemeine Grundeinstellung: »Es ist doch immer nett, reiche Christen zu sehen.« Aber Johannes fragt: »Wenn er wirklich ein Christ ist, wie kann er dann an all dem überflüssigen Reichtum festhalten, wenn doch so viele Menschen nach Brot schreien und vor Hunger sterben?«

Mir scheint, dieser Vers zwingt uns, einen der folgenden zwei Wege einzuschlagen. Einerseits können wir die klare Bedeutung der Worte des Johannes zurückweisen, die Stimme des Gewissens unterdrücken und den Mann verurteilen, der es wagt, eine solche Botschaft weiterzusagen. Oder aber wir können das Wort mit Demut aufnehmen, unseren Reichtum dazu benutzen, den Nöten unseres Bruders abzuhelfen und dann ein reines Gewissen gegenüber Gott und den Menschen haben. Der Gläubige, der mit einem bescheidenen Lebensstandard zufrieden ist, so dass alles, was darüber hinausgeht, in die Arbeit des Herrn fließen kann, der kann in Frieden mit Gott und mit seinem bedürftigen Bruder leben.