October

உள்ளார்ந்த ஒற்றுமையும், நடைமுறை வேற்றுமையும்

October 27

“There is neither Jew nor Greek, there is neither bond nor free, there is neither male nor female: for ye are all one in Christ Jesus.” (Gal. 3:28)

In reading a verse like this, it is tremendously important to know what it means and what it does not mean. Otherwise we might find ourselves adopting grotesque positions that do violence to the rest of Scripture and to the facts of life.

The key to the verse is found in the words “in Christ Jesus.” Those words describe our position, that is, what we are in the sight of God. They do not refer to our everyday practice, that is, what we are in ourselves or in the society in which we live.

What the verse is saying, then, is that there is neither Jew nor Greek as far as standing before God is concerned. Both the believing Jew and the believing Gentile are in Christ Jesus and therefore both stand before God in a position of absolute favor. Neither has any advantage over the other. It does not mean that physical differences or temperamental distinctions are abolished.

In Christ Jesus, there is neither bond nor free. The slave finds the same acceptance through the Person and work of Christ that the free man does. And yet, in everyday life, the social distinctions persist.

There is neither male nor female in Christ Jesus. A believing woman is complete in Christ, accepted in the Beloved, justified freely – just the same as a believing man. She has the same freedom of access into the presence of God.

But the verse must not be pressed to refer to everyday life. The sexual distinction remains—male and female. The resultant roles remain—father and mother. The divinely appointed positions of authority and subjection to that authority remain—the man is given the place of headship and the woman that of subjection to the authority of the man. The New Testament even specifies difference in the ministries of the man and the woman in the church (1 Tim. 2:8, 2:12; 1 Cor. 14:34, 35). Those who argue that there should be neither male nor female in the church are forced to twist these Scriptures, assign unworthy motives to the Apostle Paul, or even question the inspiration of his words in these passages.

What they must understand is that whereas racial, social and sexual differences are abolished as far as standing before God is concerned, they are not abolished in everyday life. They should also realize that these differences have nothing to do with inferiority. The Gentile, the slave, the woman are not inferior to the Jew, the free man or the male. In many ways they may be superior. Instead of trying to rewrite God’s order in creation and in providence, they should accept it and rejoice in it.

ஒக்டோபர் 27

யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றும் இல்லை. ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:23.

உள்ளார்ந்த ஒற்றுமையும், நடைமுறை வேற்றுமையும்

இத்தகைய வசனத்தைப் படிக்கிற வேளையில், இது என்ன பொருளை உடையதாக இருக்கிறது. என்ன பொருளைத் தருகிறதில்லை என்பதை அறிவது மிகவும் இன்றியமையாததாகும். அவ்வாறு நிதானித்தறிய தவறுவோமெனில் மற்ற வேதப்பகுதிகளுக்கும், வாழ்க்கையின் பிற உண்மைகளுக்கும் ஊறு விளைவித்து, கோமாளித்தனமான நிலையில் காணப்பட்டு ஏளனத்திற்குரியவர்களாவோம்.

‘கிறிஸ்து இயேசுவுக்குள்” என்னும் சொற்றொடர், இந்த வசனத்திற்குரிய சரியான பொருளை அறிவதற்குத் தேவையான திறவுகோலாக விளங்குகிறது.

கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையிலான நிலை என்ன என்பதை, அதாவது தேவனுடைய பார்வையில் நாம் யாராக இருக்கிறோம் என்பதை இச்சொற்றொடர் விளக்குகிறது. நம்முடைய அனுதின வாழ்க்கை அனுபவ நிலையை இது குறிக்கிறதில்லை. அதாவது உண்மையில் நாம் யாராக நடந்து கொள்கிறோம். நாம் வாழ்கிற சமுதாயத்தில் எப்படி விளங்குகிறோம் என்பதை இது குறிப்பிடுகிறதில்லை.

அவ்வாறாயின் இந்த வசனம் என்ன கூறுகிறது? தேவனைப் பொருத்தமட்டில் யூதனென்றும் கிரேக்கனென்றும் எந்த வேறுபாடுமில்லை. விசுவாசிக்கிற யூதனும், விசுவாசிக்கிற புற இனத்தவனும் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறார்கள். ஆகையால் தேவனுக்கு முன்பாக ஒரே விதமாக காணப்பட்டு, முழுமையான சிலாக்கியத்தைப் பெறும் ஒரே வித உள்ளார்ந்த நிலையை அடைந்துள்ளனர். ஒருவரைக் காட்டிலும் மற்றவர் கூடுதலான அனுகூலத்தைப் பெறுவதில்லை. அவர்களுக்குள்ளாகச் சரீரத் தோற்றத்திலோ, உணர்ச்சிவயப்படும் தன்மையிலோ வேறுபாடுகள் இல்லாது போகும் என்பது இதன் பொருளன்று.
கிறிஸ்து இயேசுவுக்குள் அடிமையென்றும் சுயாதீனென்றும் இல்லை. கிறிஸ்துவினுடைய ஆள்தன்மையினாலும், அவருடைய நிறைவேற்றப்பட்ட செயலினாலும் ஒரு சுயாதீனன் எத்தகைய அங்கீகாரத்தை அடைந்துள்ளானோ அதேவித அங்கீகாரத்தை ஒரு அடிமையும் பெறுகிறான். இருந்தபோதிலும், அனுதின வாழ்வில், அவர்களுக்குள்ளாகக் காணப்படும் சமுதாய வேற்றுமைகள் நீடிக்கும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை. கிறிஸ்துவுக்குள் நிறைவு அடைந்தவனாகவும், பிரியமானவருக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டவனாகவும், இலவசமாக நீதிமானாக்கப்பட்டவனாகவும் எவ்வாறு ஒரு ஆண்மகன் இருக்கிறானோ அவ்வாறே ஒரு பெண்ணும் திகழ்கிறாள். தேவனுடைய சமுகத்தில் வருகிறதற்கு அவள் சம உரிமையைப் பெற்றிருக்கிறாள்.

ஆயின், அனுதின வாழ்க்கையை இவ்வசனம் குறிக்கிறது என்று எண்ணலாகாது. ஆண், பெண், பால் வேற்றுமை தொடரவே செய்யும். தந்தை, தாய், என்னும் பொறுப்புக்களும் தொடரும். தேவனால் அளிக்கப்பட்ட அதிகாரத்திற்குரிய ஸ்தானமும், அந்த அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டிய நிலையும் தொடரும். தலைமைத்துவம் ஆண்மகனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்மகனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்திற்குக் கீழ்படிய வேண்டிய ஸ்தானமே பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும், ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற வேறுபாடுகளைப் புதிய ஏற்பாட்டில் நாம் காண்கிறோம். (1.தீமோ.2:8, 2:12, 1.கொரி.14:34-35). சபையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று வாதாடுபவர்கள் இவ்வசனங்களின் பொருளைத் திரித்துக்கூறக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அப்போஸ்தலனாகிய பவுலின் நோக்கங்களுக்குத் தவறான அர்த்தத்தைக் கற்பிக்கின்றனர். இந்தப் பகுதியில் காணும் அவருடைய சொற்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை அல்ல என்றும் கூறுவர்.

தேவனுக்கு முன்பாக விசுவாசிகள் அடைந்திருக்கிற ஸ்தானத்தைப் பொருத்தமட்டில் இனவேறுபாடு, சமுதாயவேறுபாடு, ஆண் பெண் பால் வேறுபாடு, நீக்கப்பட்டுவிட்டன என்பதையும், அனுதின வாழ்க்கையில் இந்த வேறுபாடுகள் நீக்கப்படவில்லை என்பதையும், அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த வேறுபாடுகளில் எவ்வித ஏற்றத்தாழ்வும் இல்லை. புறஇனத்தவன், அடிமை மற்றும் பெண்மணி ஆகியோர் யூதன், சுயாதீனன் மற்றும் ஆண் ஆகியோரைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் அல்லர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல நிலைகளில் அவர்கள் உயர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இறைப்படைப்பின் ஒழுங்கையும், தேவனுடைய அருள்ப்பாட்டையும் திருத்தி எழுத வேண்டும் என்று முயற்சி செய்வதை விட்டொழித்து, அவற்றை ஏற்றுக்கொண்டு களிகூறுதலே தகுதியாகும்.

27. Oktober

»Da ist nicht Jude noch Grieche, da ist nicht Sklave noch Freier, da ist nicht Mann noch Frau; denn ihr alle seid einer in Christus Jesus.« Galater 3,28

Bei einem Vers wie diesem ist es ungeheuer wichtig, genau zu wissen, was damit gemeint und was nicht damit gemeint ist. Sonst werden wir unversehens ganz eigenartige Meinungen vertreten, die dem Rest der Heiligen Schrift Gewalt antun und ebenso den Tatsachen dieses Lebens.

Das Schlüsselwort in diesem Vers finden wir in den Worten »in Christus Jesus«. Hier wird unsere Stellung beschrieben, das heißt das, was wir in der Sicht Gottes sind. Hier geht es nicht um unser alltägliches Leben, um das, was wir selbst sind oder was wir in der Gesellschaft darstellen, in der wir leben.

Der Vers sagt dann also, dass es, was die Stellung vor Gott angeht, weder Jude noch Grieche gibt. Sowohl der gläubige Jude als auch der gläubige Nichtjude sind in Christus Jesus, und daher stehen sie beide vor Gott in einer Position der absoluten Gnade. Keiner hat einen Vorteil vor dem anderen. Das heißt aber nicht, dass körperliche Unterschiede oder Verschiedenheiten
im Temperament einfach abgeschafft wären.

In Christus gibt es weder Sklaven noch Freie. Der Sklave ist durch die Person und das Werk Jesu genauso bei Gott angenommen wie der freie Mann. Und doch bleiben im täglichen Leben die sozialen Unterschiede bestehen.

Es gibt auch weder Mann noch Frau in Christus Jesus. Eine gläubige Frau ist vollkommen in Christi Augen, angenommen bei dem Geliebten, gerechtfertigt aus freier Gnade – ganz genauso wie ein gläubiger Mann. Sie hat genauso wie er den freien Zugang zur Gegenwart Gottes.

Doch dieser Vers darf nicht gewaltsam auch auf das tägliche Leben bezogen werden. Die sexuelle Unterscheidung bleibt – es gibt Männer und Frauen. Die sich daraus ergebenden Rollen bleiben bestehen – Vater und Mutter. Die von Gott bestimmten Stellungen der Autorität und der Unterordnung bleiben – der Mann hat den Platz des Hauptes in der Familie zugewiesen bekommen und die Frau den der Unterordnung unter die Autorität des Mannes. Das Neue Testament unterscheidet auch besondere Dienste des Mannes und der Frau in der Gemeinde (siehe 1. Timotheus 2,8-12; 1. Korinther 14,34.35). Diejenigen, die argumentieren, dass es doch in der Gemeinde keinen Unterschied zwischen Männern und Frauen geben dürfe, sind gezwungen, die eben genannten Bibelverse umzudeuten, Paulus unwürdige Motive zu unterschieben oder sogar seine Inspiration durch den Heiligen Geist an dieser Stelle in Frage zu stellen.

Man muss hier Folgendes verstehen: Was die Stellung vor Gott anbetrifft, sind die rassischen, sozialen und sexuellen Unterschiede abgeschafft; aber im täglichen Leben sind sie nicht aufgehoben. Man sollte auch einsehen, dass diese Unterscheidungen nichts mit Minderwertigkeit zu tun haben. Der Heide, der Sklave, die Frau sind nicht weniger wert als der Jude, der Freie oder der Mann. In vieler Hinsicht können sie ihnen sogar überlegen sein. Anstatt zu versuchen, die Ordnung Gottes in seiner Schöpfung und Vorhersehung umzuschreiben, sollte man diese Ordnung vielmehr annehmen und sich daran freuen.